Friday, September 24, 2010

ஃபீலிங்ஸ் - 24 - 09 - 10



காமன்வெல்த் காமெடி






■ ஸ்டேடியத்துக்கு போகிற பாலம் சரிஞ்சு விழுது, குஸ்தி அரங்க மேற்கூறை இடிஞ்சு விழுது, டெங்கு தொரத்துது, பாத்ரூம் படுத்துது, வீரர்கள் படுக்கை விரிப்புல நாய் உச்சா போயிருக்கு, போகிற போக்குல தீபாவளி டப்பாசு மாதிரி ரெண்டு பங்காளிங்க டூரிஸ்டை சுட்டுட்டு போறானுங்கன்னு காமன்வெல்த் கேம்ஸ்ல எக்கச்சக்க சொதப்பல்.  நாம எல்லாம் இலவசமா காமெடி பண்ற நேரத்துல கவர்ன்மென்ட் மட்டும் லட்சம் கோடின்னு செலவு பண்ணி காமெடி ஷோ பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன். 

பேசாம நம்ம லலித் மோடிக்கிட்ட காமன்வெல்த் கேம்ஸை ஒப்படைச்சிருந்தா சூப்பரா ஆர்கனைஸ் பண்ணி அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன.... ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும் அவ்வளவுதான்.






இன்னைக்கு வந்திருக்கிற லேட்டஸ்ட் நியூஸ்படி 76 நாடுகளுக்கு தலா ரூ.64 லட்சம் வீதம் மொத்தம் ரூ.46 கோடி லஞ்சம் கொடுத்து காமன்வெல்த் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறதாம் இந்தியா. ஏம்ப்பா இப்படி மானத்தை வாங்குறீங்க... லஞ்சம் கொடுக்கிறதுலயும் ஒரு மரியாதை வேணாமா..?  நம்ம ஊரு முட்டுசந்து ரோடு கான்ட்ராக்டுக்கே கோடி கணக்குல லஞ்சம்னு நியூஸ் வரும்போது... அல்பத்தனமா லட்சக்கணக்குல லஞ்சம் கொடுத்திருக்கீங்க.... அது சரி... நம்மகிட்டயே கூச்சப்படாம கைநீட்டி காசு வாங்குன அந்த அல்ப நாடுகள் யாருப்பா..?






திரைப்படம்
அவதார் - ஸ்பெஷல் எடிஷன் 3D












■  வேட்டைக்காரனுடன் ரிலீசான அவதார் திரைப்படம் சத்யமில் நிற்காமல் ஓடு ஓடுவென ஓடிக்கொண்டே இருந்தது. ரிலீசான சமயத்தில் பார்த்தது. மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்றிருந்தபோது அவதார் ஸ்பெஷல் எடிஷன் வெளியாகி இருக்கிறது. முந்தைய பதிப்பில் இல்லாத 20 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்முறை பி.வி.ஆரில் பார்த்தேன். சாகக்கிடக்கும் தளபதியை கண்டு பேசுவது, வகுப்பு நடக்காத பள்ளிக்கூட காட்சிகள் என சில காட்சிகள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பத்தையும், கிரியேட்டிவிட்டியையும் குழுவினரின் உழைப்பையும் கண்டு மீண்டும் மீண்டும் பிரமிப்பு ஏற்படுகிறது. பி.வி.ஆரில் ஒரு சௌகரியம் 3D கண்ணாடியை 25 ரூபாய் வாங்கிக்கொண்டு நமக்கே கொடுத்து விடுகிறார்கள். அடுத்தடுத்த படங்கள் பார்க்க செல்லும்போது உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.





நாவல்
காசநோவா 99 - எண்டமூரி வீரேந்திரநாத்









■  எதிர்பாராத டிவிஸ்ட்டுகளுடன்  பரபரவென பறக்கும் நாவல். நாவலின் கதை இதுதான். காஷ்மீரை தங்கள் வசம் அபகரிக்க பாகிஸ்தான் ஒரு சதித்திட்டம் போடுகிறது.  அதன்படி ஃபாக்ஸ் எனப்படும் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் பணத்துடன் கிளம்பி வருகிறான்.  அவன் என்ன ஆனான் என தெரியாத நிலையில் பல வருடங்கள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.கதையின் நாயகர்கள் பாதுகாப்பு அதிகாரி மாந்தாதாவும் அவரது காணாமல் போன காசநோவா தம்பியும்தான். அவனது காதலியாக ஒரு பல் மருத்துவர். இவர்கள் மூவரை சுற்றி செல்கிறது கதை. அந்த ஃபாக்ஸ் என்ன ஆனான் எப்படி காஷ்மீரை பாகிஸ்தான் வசம் சேர்க்க சதி செய்கிறான் என்பதெல்லாம் கற்பனை செய்ய முடியாத திரில்லிங் சமாசாரங்கள். அவன் திட்டத்தை அறியும் இந்த மூவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என பக்காவான நாவல். நிறைய காதலும் நாவலில் உண்டு நகைச்சுவையுடன். புக் கிடைச்சா டிரை பண்ணி பாருங்க!
   






நகைச்சுவை





■  கோயில் காளை திரைப்படத்தில் வரும் இந்த கவுண்டர் அண்டு கோ காமெடி காட்சி எப்பொழுது பார்த்தாலும் ரொம்பவும் ரசித்து கண்ணில் நீர் வர சிரிப்பேன்.  ராமைய்யா ஒஸ்தாவைய்யா..  என கோரஸ் பாடுவதாகட்டும், கடைசியில் அடிவாங்கிவிட்டு ஏன்டா சொல்லலை என கேட்பதாகட்டும் கவுண்டர் கவுண்டர்தான்.....






டிவிட்டர்






■  எல்லோரும் இருக்காங்களே அதனால நாமும் இருப்போம்னு சமீபத்தில் ஒரு பதிவர் டிவிட்டர்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்னு ஒன்னும் தெரியாம அவர் முழிச்சிக்கிட்டிருப்பதை பார்த்தா செம காமெடியா இருக்கு. ஏன்யா உனக்கெல்லாம் இந்த வேலைன்னு திட்ட விரும்புகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  http://twitter.com/sukumarswamin




இந்த வார விட்ஜெட்






■   காமினி சவால் சிறுகதைக்கான பிளாஷ் விளம்பர இணைப்பு தர கீழ்கண்ட கோடிங்கை காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் பேஸ்ட் செய்யவும்.






விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்





<embed src="https://5260715446677696916-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/evergreenrose/suku.swf" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="200" height="200"></embed>


<a href="http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html" target="_blank">விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்</a>

3 comments:

என்னது நானு யாரா? said...

காமன் வெல்த் ஏன் தான் இவ்வளவு காமெடிப் பண்றாங்களோ தெரியலையே? இப்போ, மானம் மரியாதை எல்லாம் ஃப்லைட் ஏறிப் போகப் போகுது!

உண்மையான சுதந்திரம் நமக்கு எப்போ கிடைக்கும்னு தெரியலையே?

ஸ்வர்ணரேக்கா said...

காசநோவா படித்திருக்கிறேன்... வங்கதேசம் உருவான கதையை இந்தாவலை படித்துத்தான் தெரிந்துகொண்டேன்...

அருமைநான நாவல்...

Thamira said...

டிவிட்டர் குறிப்பு அழகு.

எண்டமூரியின் கதைகள் உண்மையில் படு விறுவிறுப்பானவை. ஸ்கூலிங்கில் பலதும் படித்திருக்கிறேன்.

விட்ஜெட்டுக்கு நன்றி சுகுமார்.

91 club