Monday, March 28, 2011

ழ பதிப்பக புத்தக வெளியீட்டு விழா போட்டோஸ் + கமெண்ட்ஸ்





நேற்று ழ பதிப்பகத்தின் புதிய 4 புத்தகங்கள் வெளியிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நான்கு புத்தகங்களுக்குமான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு இது மிக மகிழ்வான விழாவாக இருந்தது.
மாலை 5.30 மணிக்கே பதிவர்கள் வரத்துவங்கி இருந்தனர். 6.30 மணிக்கெல்லாம் ஹால் ஃபுல்லாகி விழா துவங்கியது.

வழக்கம் போல சுரேகா நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மணிஜி கமெண்ட் ஏதும் அடிக்காமல் அமைதியாக இருந்தார்.

கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி.ராஜா,  தண்டோரா மணிஜி, பலாபட்டறை ஷங்கர், சுரேகா, கார்க்கி, லக்கி லுக் யுவ கிருஷ்ணா, அதிஷா,  உண்மைத்தமிழன், விந்தை மனிதன் ராஜாராம், குகன், அகநாழிகை பொன் வாசுதேவன், பிலாசபி பிரபாகரன், வேர்கள் பாண்டியன், ஆயிரத்தில் ஒருவன் மணி, சர்க்கஸ் சிங்கம், பார்வையாளன், அஞ்சா சிங்கம், மெட்ராஸ் பவன் சிவக்குமார் உள்ளிட்ட பல பதிவர்கள் வந்திருந்தார்கள். ( பலரது பெயர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)  நான்கு புத்தகங்களும் மேம்பட்ட தரத்தில் இருக்கின்றன. பெருமுயற்சி செய்திருக்கும் ழ பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர்களுக்கும சிறப்பான வாழ்த்துக்கள்.


 மேலும் என்னென்ன நடந்தது என உங்களுக்கு பிளாஷ்பேக்கில் சொல்கிறேன் வாருங்கள்....


விழா துவங்கும் முன்னர் :- ழ பதிப்பக தூண்கள் பதிப்பாளர்கள் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் ஓ.ஆர்.பி.ராஜா
(தூண் போலவே ரெண்டு சைட்ல நிக்கிறாங்க பாருங்க)


வளைஞ்சு வளைஞ்சு ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.. யார்ரா அது நமக்கு போட்டியா என விசாரித்தால் அவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி(இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்). அடிக்கடி சேட்டிலும், மெயிலிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் அவரை முதல் முறையாக நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.



கைகட்டிக்கொண்டு இருப்பவர் பதிவர் காவேரி கணேஷ்
(நிஜமாகவே சிறியோர் பெரியோர் என யாருடனும் மிக மரியாதையாக பழகுபவர்)

ஒரே ஆங்கிளில் போஸ் கொடுக்கும் இருவர் :- பதிவர்கள் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா (பவுடர் கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சோ பாஸ்?) மற்றும் அதிஷா


வீட்டில் வைத்து அனுப்பிய விபூதியுடன் பயபக்தியுடன் உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் கேபிள் சங்கர். 'ஹலோ துபாயா பிரதர் மார்க் இருக்காரா?' என்பது போல் போன் பேசுவது பதிவர் தண்டோரா மணிஜி




வரவேற்புரை ஓ.ஆர்.பி.ராஜா



தொப்பி போட்டுக்கொண்டு கன்னத்தில் மருவுடன் பதிவர் உண்மைத்தமிழன்.
(மாறுவேஷத்துல வந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா..?)


ஆனாலும் அநியாயத்துக்கு யூத்தாக இருக்காருல்ல?
(இல்லைன்னு சொன்னா போன் போட்டு திட்டுவாரு..)



என் உலகநாதன் எழுதிய 'சாமானியனின் கதை' நூலை வெளியிடுகிறார் கட்டிடவியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் தண்டோரா மணிஜி


என்.உலகநாதன் எழுதிய 'வீணையடி நீ எனக்கு' நூலை வெளியிடுகிறார் வழக்கறிஞர் சாமிதுரை.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் யுவகிருஷ்ணா


கே.ஆர்.பி.செந்தில் எழுதிய 'பணம்' நூலை வெளியிடுகிறார் முத்து... பெற்றுக்கொள்கிறார் பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன்.. 

'கொத்து பரோட்டா' நூலை வெளியிடுகிறார் பேராண்மை, மாப்பிள்ளை திரைப்பட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்.. பெற்றுக்கொள்கிறார் கவிஞர் நேசமித்ரன் ஃபிரம் நைஜீரியா..


உரையாற்றுகிறார் ராஜமாணிக்கம்




உரையாற்றுகிறார் சாமிதுரை



எப்பவும் கெட்டப் சேஞ்சில் வரும் பதிவர் பலாபட்டறை ஷங்கர் இம்முறை பழைய கெட்டப்பிலேயே வந்திருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் எக்ஸாமிற்கு படிப்பதை போல சீரியஸாக படிப்பவர் பதிவர் விந்தை மனிதன் ராஜாராம்... 







சத்தியமா இனி ஏதாவது ஃபங்ஷன் என வந்தால் கார்க்கி பக்கத்தில் மட்டும் நிற்கக்கூடாது என முடிவெடுத்து விட்டேன். மனிதர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஜோக்குளை அள்ளித்தெளிக்கிறார். சிரித்து மாளவில்லை.











ஓ.ஆர்.பி.ராஜாவுடன் பதிப்பாளர் குகன்


பதிவர்கள் மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிராபாகரன் ( நேயர் விருப்பத்தின்படி விரைவில் பதிவுலகிற்கு திரும்ப கோரிக்கை வைக்கப்படுகிறது)  மற்றும் தொழிலதிபர் எல்டெக் ஜெயவேல்.



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா.. அவருடன் கல்யாணம் ஆனதிலிருந்து பதிவுலகில் காணாமல் போன பதிவர் ஏதோ டாட் காம் பிரதாபன் (பாஸ்.. உங்களுக்காகதான் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் தராங்க.. இனிமே வேலை அவ்வளவா இருக்காது.. கொஞ்சம் பதிவும் எழுதுங்க)




தலை சீவிட்டு வந்தா போட்டோ எடுக்கிறேன்னு பதிவு போட்டு இருந்தீங்களே என அருகே வந்து பேசினார் பதிவர்கள் வேர்கள் பாண்டியன்.  பரவாயில்லை நம்ம பதிவையும் படிக்கிற ஒரு நல்லவர் இருக்கிறார் என போட்டோ எடுத்துக் கொண்டேன். நம்ம பிளாக்கையும் படிக்கிறாங்கன்னு சொன்னா தங்கமணி நம்பவே மாட்டேங்குது அதுக்குதான். ஹி...ஹி.
நன்றி.. மீண்டும் வருக...!!!

Sunday, March 27, 2011

கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா - கே.ஆர்.பி செந்திலின் பணம்





ன்று மாலை 6 மணிக்கு 'ழ' பதிப்பக புத்தக வெளியீட்டு விழா இருக்கிறது.  கேபிள் சங்கர் (எ) சங்கர் நாராயணின் பதிவுலக பாப்புலர் டைட்டில் 'கொத்து பரோட்டா',  கே.ஆர்.பி செந்திலின் மெகா ஹிட் சீரிஸ் 'பணம்'   ஆகியன புத்தகங்களாக வெளிவருகின்றன.  மேலும் இவையுடன் என்.உலகநாதன் எழுதி இருக்கும் 'வீணையடி நீ எனக்கு', 'சாமானியனின் கதை' ஆகிய 2 புத்தகங்களும் வெளிவருகின்றன.

நண்பர்களின் புத்தகங்கள் வெளிவரும் சந்தோஷமான தருணத்தில் 'மீண்டும் ஒரு காதல் கதை'க்கு அடுத்து இந்த நான்கு புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் டிசைன் செய்திருக்கிறேன் என்பது கூடுதல் சந்தோஷம்.







   சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகாமையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

கையில் கேமராவோடு வருவேன்.. பேட்டரி வீக்காக இருப்பதால் முதலில் வருபவர்களுக்கே புகைப்படங்களில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாளை காலையோ இன்றிரவோ பதிவும் இடப்பட இருப்பதால எல்லோரும் பவுடர் போட்டு தலை சீவி வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லை பரட்டை தலையோடுதான் வருவேன் என அடம்பிடிப்பவர்கள் அப்படியும் வரலாம். எப்படியோ வந்தா சரி.

மேலும் விபரங்களுக்கு :  கேபிள் சங்கர்    கே.ஆர்.பி.செந்தில்


Monday, March 14, 2011

எதுவுமே தெரியாமல் ஜெயிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்





நூல் அனுபவம் - ஏ.ஆர்.ரஹ்மான் - என்.சொக்கன்


'நான் இந்த விருதை வாங்கும்போது அதை நேரில் பார்ப்பதற்கு என்னை வாழ்த்துவதற்கு என் அம்மா இங்கே வந்திருக்கிறார். அதைத்தான் நான் பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன்'


கையில் ஆஸ்கார் விருதினை பெற்றுக்கொண்டு தாயையும் தாய்மொழியையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெருமைப்படுத்திய் அந்த கணத்தை பார்த்து புல்லரித்து போய் உட்கார்ந்து இருந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை அடைவதற்கு அவர் கடந்து வந்த சோதனைகளை என்.சொக்கன் எழுதி வெளிவந்திருக்கும் 'ஏ.ஆர்.ரஹ்மான்' புத்தகத்தில் படித்தபொழுது ரொம்பவும் ஆச்சர்யமாகவும் இன்ஸ்பயரிங் ஆகவும் இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட, கற்றுக்கொண்டிருந்த இசையை வைத்து இரவில் பணியும் காலை பள்ளியும் என   சோதனைகளை அவர் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற உழைத்ததும், அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தி வழிநடத்திய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ரஹ்மானின் இசைக்கு பின்னால் ஒரு தாயின் கனவு இருக்கிறது என்பதை அறியும்பொழுது ரஹ்மான் மேல் இருக்கும் மரியாதை இன்னும் பல படிகள் உயர்ந்துவிட்டது.




'அப்பாவோட தொழிலை நீ தொடர்ந்து செய்யணும் திலீப், பெரிய இசையமைப்பாளரா, திறமைசாலியா பெயர் வாங்கணும். அதுதான் என்னோட ஆசை. உங்க அப்பா இப்போ உயிரோட இருந்திருந்தா, அவரும் இதையேதான் சொல்லியிருப்பார்.'


அப்பாவின் இசைக் கருவிகள், மற்ற சாதனங்களோடு திலீப்பும் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களுக்குப் பயணம் செல்ல ஆரம்பித்தான். அங்கே உள்ள இசை அமைப்பாளர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், இசை நடத்துனர்களையெல்லாம் சந்தித்து அவர்களிடம் பணிவாகப் பேசுவான். 'எனக்கு இந்தக் கருவிகளை நன்றாக வாசிக்கத் தெரியும். தயவு செய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்பான்.


தனது குடும்பத்தின் வறுமை நிலையை விரட்டி அடிக்க ரஹ்மான் கருவிகளை இசைக்கும் பணியிலும் அதில் காட்டிய நேர்த்தியினால் பின்னர் படிப்படியாக உயர்ந்து விளம்பரங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் என்பது போன்ற பலர் அறியாத தகவல்களை அறியத்தந்து ஆச்சரியப்படுத்துகிறது இந்த புத்தகம்.


தயக்கத்தோடு வேலையைத் தொடங்கிய திலீப்புக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை அதிகரித்தது. தன்னுடைய சிந்தசைஸரிலேயே மொத்த விளம்பர இசையையும் உருவாக்கிப் பதிவு செய்துவிட்டார்.


..சச்சின் டெண்டுல்கரும் கபில் தேவும் வந்து 'பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று புன்முறுவல் செய்வார்களே, அந்த விளம்பரம் ஞாபகமிருக்கிறதா? அது திலீப் கைவண்ணம்தான்.


ரஹ்மானின் இசைப்பயணத்தில் அவரது உயரம் ஏதோ ஒரே நாளில் அதிர்ஷ்டத்தில் முளைத்துவிடவில்லை. செய்யும் எதிலும் அவரது புதுமை, ஈடுபாடு, தனித்திறமை ஆகியவைதான் அவரை இன்னும் இன்னும் உயர்த்திக்கொண்டே போகிறது. விளம்பரங்களில் அவர் காட்டிய புதுமைதான் அவருக்கு ரோஜா பட வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.


.. தளபதி ரிலீஸுக்குப் பிறகு, மணிரத்னமும் இளையரஜாவும் பிரிந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பரபரப்பாக வெளியிட்ட பத்திரிக்கைகள், 'இளையராஜாவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?' என்று கேள்வி எழுப்பின. 'இனிமேல் மணிரத்னத்தின் படங்களில் பாடல்களின் தரம் குறைந்துவிடும்' என்று ரசிகர்களும் வெளிப்படையாகவே பேசினார்கள்.


இதனால் திலீப் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முதல் படத்திலேயே அவர் இளையராஜாவுடன் நேரடியாக ஒப்பிடப்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.


முதல் படத்திற்கு ஒப்புக்கொண்ட நிலை, அவர் செயல்பட்ட விதம், நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவை. நூலாசிரியர் என்.சொக்கன் புத்தகத்திற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது நூலில் கிடைக்கும் பல குறிப்புகளிலிருந்து தெரிகிறது.


அன்றைக்கு, திலீப்பினுடைய முதல் பாடலை இசையமைக்க வாத்தியக் கலைஞர்கள் யாரும் வரவில்லை. ஆகவே, அவர்களுடைய துணை இல்லாமல், அந்தப் பாடலுக்குத் தேவையான எல்லா இசைத்துணுக்குகளையும் கீபோர்ட், சிந்தசைஸர், கணினி உதவியுடன் அவரே வாசித்து உருவாக்கத் தொடங்கினார். 


அந்த முதல் படத்திலேயே அதற்குமுன் தமிழில் வந்த எல்லாப் பாடல்களையும் 'பழைய இசை'யாகத் தோன்றச் செய்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு, ஒவ்வோர் இசையமைப்பாளரும் இதே மாதிரியான நவீன ஒலியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.


புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம், ரஹ்மானின் இசை பயணத்தில் ஆங்காங்கே அவர் கொடுத்த ஹிட்ஸ்களை குறிப்பிட்டு சில பாடல் சார்ந்த ஆச்சரியங்களையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு இந்த சங்கதியை படித்த பின்னர் இந்த பாடலை இன்னுமொரு முறை கேட்டு ஆச்சரியப்பட்டு போனேன்.


'ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல' என்கிற சோகப் பாடலை ஷாகுல் ஹமீது பாட, வேறு எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க கோரஸ் குரல்களை மட்டும் பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். ஆனால், அந்தப் பாட்டைக் கேட்கிறவர்களுக்கு எதுவும் உறுத்தலாகத் தெரியாது.


இந்த புத்தகத்தினை ஒரு பயாக்கிராபி புத்தகமாக லேபிளுடுவது தவறு. இது ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக அமைந்திருக்கிறது. ஆசிரியரின் நடையாளுமை அப்படியான எண்ணத்தை வலுவாக தோற்றுவிக்கிறது. ரஹ்மானின் பல்வேறு காலகட்டங்களிலும் அவரது எதிர்நீச்சல், முக்கியமாக தொழிலில், கலையில் அவரது மனப்பான்மை ஆகியன முன்னேற விரும்பும் யாரும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள்.

ரஹ்மானின் ஒரு சிறப்பான மனப்பான்மை இனோவேஷன். வந்தே மாதரம் ஆல்பம் பிறந்ததும் அவரது இந்த தொடர்ச்சியான புதுமை விரும்பும் தாகத்தினால்தான்.



'ஏதாவது புதுசா செய்யணும்ப்பா'

நூறாவது முறையாக ரஹ்மான் அதையே சொன்னார். ஆனால், அந்த 'ஏதாவது' எனன என்பதுதான் அவருக்கும் புரியவில்லை, எதிரில் உட்கார்ந்திருந்த பரத் பாலாவுக்கும புரியல்லை.



எதிலும் எளிதில் திருப்தி அடையாதது, தன்னடக்கம், புதுமை விரும்புதல், ஈடுபாடு, புதிய முயற்சிகள் என்பன போன்ற ரஹ்மானின் சீக்ரெட் பார்முலாக்களை அவரது பல நிலை எண்ண ஓட்டங்களை புத்தகம் வாரி வழங்குகிறது.


'எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோநிலையோடு ஒரு பாடலை உருவாக்க உட்கார்ந்தால், அதே பழைய விஷயங்களைத்தான் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்போம்' என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கொள்கை, 'அதற்குப் பதிலாக, நான் எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொள்கிறேன், அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்து பார்க்கிற முனைப்பு வருகிறது'


ரஹ்மான் சுலபத்தில் திருப்தியடையாத பேர்வழி. தான் உருவாக்கிய இசை ஒரு குறிப்பிட்ட தரத்தை எட்டியதும், 'இது போதும்' என்று வெளியே தள்ளிவிட்டு, அடுத்ததைக் கையில் எடுத்துக்கொள்கிற பழக்கம் அவரிடம் இல்லை.


கையில் ஆஸ்கார் விருதுடன், எல்லா புகழும் இறைவனுக்கே என அமைதியாக சொன்ன ரஹ்மானின் 'டவுன் டூ எர்த்' சிம்பிளிசிட்டியினை வியக்காதவரில்லை. ரஹ்மானின் தன்னடக்கத்திற்கும் திறமைக்கும் அவர் இன்னும் பல உயரங்களை தொடக்கூடியவர், யாரும் கற்பனை செய்ய முடியாத புதிய பரிமாணங்களை இசையில் படைக்க வல்லவர். இத்தகைய தனித்துவமான கலைஞனின் கதையை சிறப்பாக அறியத்தந்தமைக்கும் ஒரு 'ஃபீல் குட்' வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதற்கும் ஆசிரியர் என்.சொக்கன் பாராட்டப்பட வேண்டியவர் ஆகிறார்.

_________________________________________________________________


பழுப்பு நிற எழுத்துக்கள் புத்ககத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________

ஏ.ஆர்.ரஹ்மான்
ஆசிரியர் : என்.சொக்கன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 80
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-187-7.html
_____________________________________________

_____________________________________________


Thursday, March 10, 2011

வலைமனை உலகக்கோப்பை போட்டோ கமெண்ட்ஸ்


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.



















பின் தொடரும் 300 அப்பாவி ஜீவன்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவு தரும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!


Valaimanai Photo Comments by Sukumar Swaminathan
World cup 2011 special edition





91 club