Monday, March 28, 2011

ழ பதிப்பக புத்தக வெளியீட்டு விழா போட்டோஸ் + கமெண்ட்ஸ்





நேற்று ழ பதிப்பகத்தின் புதிய 4 புத்தகங்கள் வெளியிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நான்கு புத்தகங்களுக்குமான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு இது மிக மகிழ்வான விழாவாக இருந்தது.
மாலை 5.30 மணிக்கே பதிவர்கள் வரத்துவங்கி இருந்தனர். 6.30 மணிக்கெல்லாம் ஹால் ஃபுல்லாகி விழா துவங்கியது.

வழக்கம் போல சுரேகா நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மணிஜி கமெண்ட் ஏதும் அடிக்காமல் அமைதியாக இருந்தார்.

கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி.ராஜா,  தண்டோரா மணிஜி, பலாபட்டறை ஷங்கர், சுரேகா, கார்க்கி, லக்கி லுக் யுவ கிருஷ்ணா, அதிஷா,  உண்மைத்தமிழன், விந்தை மனிதன் ராஜாராம், குகன், அகநாழிகை பொன் வாசுதேவன், பிலாசபி பிரபாகரன், வேர்கள் பாண்டியன், ஆயிரத்தில் ஒருவன் மணி, சர்க்கஸ் சிங்கம், பார்வையாளன், அஞ்சா சிங்கம், மெட்ராஸ் பவன் சிவக்குமார் உள்ளிட்ட பல பதிவர்கள் வந்திருந்தார்கள். ( பலரது பெயர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)  நான்கு புத்தகங்களும் மேம்பட்ட தரத்தில் இருக்கின்றன. பெருமுயற்சி செய்திருக்கும் ழ பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர்களுக்கும சிறப்பான வாழ்த்துக்கள்.


 மேலும் என்னென்ன நடந்தது என உங்களுக்கு பிளாஷ்பேக்கில் சொல்கிறேன் வாருங்கள்....


விழா துவங்கும் முன்னர் :- ழ பதிப்பக தூண்கள் பதிப்பாளர்கள் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் ஓ.ஆர்.பி.ராஜா
(தூண் போலவே ரெண்டு சைட்ல நிக்கிறாங்க பாருங்க)


வளைஞ்சு வளைஞ்சு ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.. யார்ரா அது நமக்கு போட்டியா என விசாரித்தால் அவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி(இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்). அடிக்கடி சேட்டிலும், மெயிலிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் அவரை முதல் முறையாக நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.



கைகட்டிக்கொண்டு இருப்பவர் பதிவர் காவேரி கணேஷ்
(நிஜமாகவே சிறியோர் பெரியோர் என யாருடனும் மிக மரியாதையாக பழகுபவர்)

ஒரே ஆங்கிளில் போஸ் கொடுக்கும் இருவர் :- பதிவர்கள் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா (பவுடர் கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சோ பாஸ்?) மற்றும் அதிஷா


வீட்டில் வைத்து அனுப்பிய விபூதியுடன் பயபக்தியுடன் உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் கேபிள் சங்கர். 'ஹலோ துபாயா பிரதர் மார்க் இருக்காரா?' என்பது போல் போன் பேசுவது பதிவர் தண்டோரா மணிஜி




வரவேற்புரை ஓ.ஆர்.பி.ராஜா



தொப்பி போட்டுக்கொண்டு கன்னத்தில் மருவுடன் பதிவர் உண்மைத்தமிழன்.
(மாறுவேஷத்துல வந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா..?)


ஆனாலும் அநியாயத்துக்கு யூத்தாக இருக்காருல்ல?
(இல்லைன்னு சொன்னா போன் போட்டு திட்டுவாரு..)



என் உலகநாதன் எழுதிய 'சாமானியனின் கதை' நூலை வெளியிடுகிறார் கட்டிடவியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் தண்டோரா மணிஜி


என்.உலகநாதன் எழுதிய 'வீணையடி நீ எனக்கு' நூலை வெளியிடுகிறார் வழக்கறிஞர் சாமிதுரை.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் யுவகிருஷ்ணா


கே.ஆர்.பி.செந்தில் எழுதிய 'பணம்' நூலை வெளியிடுகிறார் முத்து... பெற்றுக்கொள்கிறார் பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன்.. 

'கொத்து பரோட்டா' நூலை வெளியிடுகிறார் பேராண்மை, மாப்பிள்ளை திரைப்பட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்.. பெற்றுக்கொள்கிறார் கவிஞர் நேசமித்ரன் ஃபிரம் நைஜீரியா..


உரையாற்றுகிறார் ராஜமாணிக்கம்




உரையாற்றுகிறார் சாமிதுரை



எப்பவும் கெட்டப் சேஞ்சில் வரும் பதிவர் பலாபட்டறை ஷங்கர் இம்முறை பழைய கெட்டப்பிலேயே வந்திருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் எக்ஸாமிற்கு படிப்பதை போல சீரியஸாக படிப்பவர் பதிவர் விந்தை மனிதன் ராஜாராம்... 







சத்தியமா இனி ஏதாவது ஃபங்ஷன் என வந்தால் கார்க்கி பக்கத்தில் மட்டும் நிற்கக்கூடாது என முடிவெடுத்து விட்டேன். மனிதர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஜோக்குளை அள்ளித்தெளிக்கிறார். சிரித்து மாளவில்லை.











ஓ.ஆர்.பி.ராஜாவுடன் பதிப்பாளர் குகன்


பதிவர்கள் மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிராபாகரன் ( நேயர் விருப்பத்தின்படி விரைவில் பதிவுலகிற்கு திரும்ப கோரிக்கை வைக்கப்படுகிறது)  மற்றும் தொழிலதிபர் எல்டெக் ஜெயவேல்.



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா.. அவருடன் கல்யாணம் ஆனதிலிருந்து பதிவுலகில் காணாமல் போன பதிவர் ஏதோ டாட் காம் பிரதாபன் (பாஸ்.. உங்களுக்காகதான் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் தராங்க.. இனிமே வேலை அவ்வளவா இருக்காது.. கொஞ்சம் பதிவும் எழுதுங்க)




தலை சீவிட்டு வந்தா போட்டோ எடுக்கிறேன்னு பதிவு போட்டு இருந்தீங்களே என அருகே வந்து பேசினார் பதிவர்கள் வேர்கள் பாண்டியன்.  பரவாயில்லை நம்ம பதிவையும் படிக்கிற ஒரு நல்லவர் இருக்கிறார் என போட்டோ எடுத்துக் கொண்டேன். நம்ம பிளாக்கையும் படிக்கிறாங்கன்னு சொன்னா தங்கமணி நம்பவே மாட்டேங்குது அதுக்குதான். ஹி...ஹி.
நன்றி.. மீண்டும் வருக...!!!

22 comments:

DR said...

எல்லாரோட போட்டோ-வையும் போட்டு இருக்குறீங்க சரி. உங்களோட போட்டோ எங்க ?

ஆமா மொதல்ல நீங்க அந்த விழாவுக்கு போனீங்களா...? அப்புடீன்னா ஆதாரம் ?

CS. Mohan Kumar said...

புகை படங்கள் நேற்றே போடுவதாக எழுதிய நினைவு. :))

நேர்ல செம ஸ்மார்ட்டா இருக்கீங்க சுகுமார். உங்களை சுரேகா பாராட்டியதை எழுதலையே ? தன்னடக்கம்??

Chitra said...

படங்கள் மற்றும் கலகலப்பான கமென்ட்ஸ் எல்லாம் சூப்பர். நேரில் இருந்து பார்த்தது போல நல்ல coverage . பகிர்வுக்கு நன்றிங்க.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

காவேரிகணேஷ் said...

வழக்கத்திற்கு மாறாக மணிஜி கமெண்ட் ஏதும் அடிக்காமல் அமைதியாக இருந்தார்.

நான் ரொம்பவே பயந்தேன்.

வழக்கறிஞர் சாமிதுரையின் வைரமுத்துவின் குரல் மிக நன்றாக இருந்தது.

கார்க்கி,மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஜோக்குளை அள்ளித்தெளிக்கிறார். சிரித்து மாளவில்லை.

யார் குடும்பத்திலும் கவலையோடு வாழ்கிறார்களா, கூப்பிடு கார்க்கி என்னுமளவுக்கு , ஜோக்குகளை அள்ளி வழங்குவார், அந்த குடும்பம் சந்தோசத்திற்கு திரும்பும் என்பது கேரண்டி.

வந்திருந்தவர்களை பெயர் தெரிந்து கொண்டு, அவர்களை பற்றி உங்கள் எழுத்தில் கொண்டுவந்தது மிக்க மகிழ்ச்சி சுகுமார்.

அருமையான தொகுப்பு.

Sukumar said...

@ தனுசுராசி
முடியலை.. என்னையே போட்டோ எடுக்குற அளவுக்கு என் கேமராவுல டெக்னாலஜி இல்ல பாஸ்.. ஹி..ஹி... இப்படி ஆதாரம் எல்லாம் கேட்டு சேதாரம் ஆக்கறீங்களே...


@ மோகன் குமார் said...
சார்.. நேற்றிரவு அல்லது இன்று காலைன்னு நேற்றைய பதிவுலேயே போட்டிருக்கேன்... தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி :)))
தங்கள் பெயரும் புகைப்படமும் பதிவில் விடுபட்டு விட்டதற்கு மன்னிக்கவும் சார்...



@ Chitra
ரொம்ப நன்றிங்க....


@ செ.சரவணக்குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....


@ காவேரி கணேஷ்

மிக்க நன்றி சார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks for sharing...

Unknown said...

மிக்க நன்றி தலைவரே....

vasan said...

ச்சே..த‌வ‌றவிட்டுட்டோமே என்று க‌வ‌லையோடுரிந்தேன். உங்க‌ள் ப‌ட‌ம் + க‌மண்ட்ஸ் நிக‌ழ்ச்சியை க‌ண் முன் காட்டி, இறுக்க‌த்தை குறைத்து விட்ட‌து. நன்றி திரு சுகுமார்.

Sivakumar said...

புகைப்பட ஆல்பத்தை வெளியிட்டதற்கு நன்றி. பல நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

'பரிவை' சே.குமார் said...

படங்கள் மற்றும் கலகலப்பான கமென்ட்ஸ் எல்லாம் சூப்பர்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உங்களுக்கு போட்டியா நானா ? பாஸ் ஒரு ஆர்வத்துல போட்டோ எடுத்தேன் அவ்வளவுதான்...

Vediyappan M said...

நிகழ்வை அழகாக வரிசைப் படுத்தியிருக்கிறீர்கள், படங்கள் அருமை. அப்படியே புத்தககடையை பற்றியும் சில பல தகவல்களை தூவி விடுங்கள், நன்றி!

Unknown said...

நேரில் வர இயலவில்லை என்றாலும் இந்த பதிவின் மூலம் ஓரளவு அதை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றிகள்.

Sukumar said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
Welcome Boss!!!

@ கே.ஆர்.பி.செந்தில்
சிறப்பான வெளியீடுகள்... மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் தல..


@ vasan
ஆஹா.. மிக்க நன்றிங்க சார்....


@ ! சிவகுமார் !
நன்றிங்க பாஸ்....

@ சே.குமார்
தேங்க் யூ சோ மச்....

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
ஹா..ஹா... சும்மா சார்... நானும் ஆர்வத்துலதான் எடுத்தேன்....

@ Discovery book palace
அடடா.. உங்களைப் பற்றியும் நூல் நிலையத்தை பற்றியும் குறிப்பிட தவறிவிட்டேன் சார்... அருமையான அரங்க அமைப்பில் குளுகுளுவென இருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ்.. விரிவாக மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன் சார்.. நன்றி வருகைக்கு...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

(பாஸ்.. உங்களுக்காகதான் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் தராங்க.. இனிமே வேலை அவ்வளவா இருக்காது.. கொஞ்சம் பதிவும் எழுதுங்க)

பிரதாபன பார்த்தா உங்களுக்கு மாவாட்டறவர் மாதிரி தோணுதா பாஸ்..

சாருஸ்ரீராஜ் said...

போட்டோ மற்றும் கமெண்ட்ஸ் அனைத்தும் சூப்பர்..

Cable சங்கர் said...

நான் உன்னை போன்பண்ணியா மிரட்டுவேன்?.. நே.. சரி.. விடு

அஞ்சா சிங்கம் said...

நிகழ்ச்சியை மீண்டும் கண்முன் கொண்டுவந்ததற்கு நன்றி ...................

நேசமித்ரன். said...

நல்ல தொகுப்பு .புகைப் படங்கள் அருமை

iniyavan said...

ரொம்ப நன்றி சார்!

Jaleela Kamal said...

அழகான தொகுப்பு, பதிவர் சந்திப்பு என்றாலே மகிழ்சி தான்,புத்தக வெளியீடுக்கும் வாழ்த்துகக்ள்

91 club