Thursday, April 7, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11


லகக்கோப்பை வாங்கிய கையில் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஐ.பி.எல் சீசன் 4. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு புதிய அணிகள், எல்லா அணிகளிலும் வீரர்கள் மாற்றம் என கடந்த முறைகளை விட சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.



மொத்தம் பத்து அணிகள் இருப்பதால் இம்முறை செமி பைனல்ஸ் கிடையாது. மாறாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய குவாலிஃபயர், எலிமினேட்டர் முறைகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

பத்து அணிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிஃபயர் 1ல் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி, வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தேர்வாகும்.

அடுத்து எலிமினேட்டர் போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி தோற்கும் அணி வெளியேற்றப்படும். அடுத்து குவாலிஃபயர் 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் குவாலிஃபயர் 2ல் மோதி, அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஃ1ல் வென்ற அணியுடன் பைனல்ஸில் மோதும்.

இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பைனஸ்ஸ் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதலில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் ஜெயித்தாலும் மறுபடி குவாலிஃபயரில் வென்றால்தான் உண்டு.

வழக்கமான அரையிறுதி சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களுக்குள் சென்றால் போதும் என்றிருந்த நிலை மாறி தற்பொழுது முதல் 2 இடங்களுக்குள் செல்ல கடும போட்டி இருக்கும். எது எப்படியோ இவர்கள் நம் பொன்னான நேரத்தை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோற்காமல் இருக்க முடியும்.

Blog note on IPL Season 4 - Qulaifier 1, Qualifier 2, Eliminator, Finals | Valaiamani Blogspot 


ரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அய்யப்ப மாதவனின் 'தானாய் நிரம்பும் கிணற்றடி நூல் விமர்சனக் கூட்டம் இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்:



Ayyappa Madhavan's 'Thaanai nirambum kinatradi' Sirukathai nool vimarsana koottam | Aganazigai

ண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.



இதற்காக சமீபத்தில் முதலாளிக்கு விருதும் கிடைத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் முதலாளி!  முதலாளியை தொடர்பு கொள்ள : [email protected]


Mudalai | Dreams Alive | Working for a Noble Cause

மீபத்தில் நான் டிவிட்டியவை சில :

செய்தி : அழகிரிக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் - அண்ணன் அழகிரிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும்? 



கையில் தாமரை பூவுடன் பாஜக வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்ததை பார்த்தேன். அதுக்கு டப்பர்வேர் டப்பா எடுத்துட்டு போனாலாவது ரெண்டு விக்கும்

செய்தி : சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் # இது ஏப்ரல் ஃபூல் நியூஸாதான் இருக்கும். எப்பவும் அங்க அடிதடிதான நடக்கும்?

தான் அடித்தால் வேட்பாளர் மஹாராஜா ஆகிவிடுவார் என மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிக்கும் கேப்டன் மேல் இந்திய இறையாண்மை சட்டம் பாயாதா?


தங்கள் கட்சி மீட்டிங்கிற்கு 4 கேமராக்களை அனுப்பினால் கேப்டன் மீட்டிங்கிற்கு 40 கேமராக்களை அனுப்புகின்றனர் ஆளுங்கட்சியினர். 


ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடிக்கிறார் விஜயகாந்த் -திருமா # இருந்த 50 பேரை 1000ம்னு சொல்றீங்களே திட்டுறீங்களா பாராட்டுறீங்களா?

இறுதி போட்டியினை பிரதிபா பாட்டீல், ராஜபக்ஷே பார்க்கின்றனர் # ஒண்ணு 'சைலண்ட்' பொம்மை இன்னொன்னு 'சைனா' பொம்மை

என் கணவருக்கு மக்களிடத்தில் நடிக்கத் தெரியாது என போன வாரம்தான் சொன்னார் அண்ணியார் # அடிக்கத் தான் தெரியும் என சொல்லவே இல்லையேம்மா..

கூகுளில் பூனம் பாண்டேவின் எந்த ஸ்டில்லை தேடிப் பார்த்தாலும் ஏற்கனவே இந்தியா கோப்பையை 90% ஜெயித்துவிட்டதாக தெரிகிறது.



Valaimanai Blogspot | Feelings | Mixted Blog Notes By Sukumar Swaminathan


6 comments:

CS. Mohan Kumar said...

Congrats and best wishes to your friend Muthalaali.

சாருஸ்ரீராஜ் said...

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். டிவிட்டர் செய்தி சூப்பர்...

சாருஸ்ரீராஜ் said...

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். டிவிட்டர் செய்தி சூப்பர்...

Chitra said...

நண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.


.... Very inspiring... I salute him.

செ.சரவணக்குமார் said...

உங்கள் நண்பரின் சேவை மகத்தானது. அவருக்கு எனது வாழ்த்துகளும் அன்பும்.

செ.சரவணக்குமார் said...

உங்கள் நண்பரின் சேவை மகத்தானது. அவருக்கு எனது வாழ்த்துகளும் அன்பும்.

91 club