Wednesday, May 11, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 11 05 11



டையாரில் எங்கேயோ 'பக்கட் பிரியாணி' விற்கிறார்கள், சூப்பராக இருக்கும் என கேள்விப்பட்டு கடந்த ஞாயிறு கோயம்பேட்டிலிருந்து 'பிரியாணித்தோம். '  அடையாறில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பின்புறம் உள்ள தெருவில் ஒரு வீட்டில் முன் இருக்கும் இடத்தில் ஷெட் அமைத்து, அங்கேயே சமைத்து செமையான பிரியாணி விற்பனை நடைபெறுகிறது. சனிக்கிழமையே போனில் ஆர்டர் எடுத்து விடுகிறார்களாம். அதற்கேற்றார் போல் சமைக்கிறார்கள். நாங்கள் போனபோது மணி 12. அப்பொழுதே எல்லாம் தீர்ந்திருந்தது. வந்திருந்தவர்களிடம் மீண்டும் ஆர்டர் எடுத்து மறுபடி சமைத்து கொடுத்தார்கள். ஒரு ஷேர் மட்டன் பிரியாணி ரூ.800. ஏழு பேர் சாப்பிடலாம். மக்கள் வந்து நின்று வாங்கி செல்கிறார்கள். சமைத்த பிரியாணியை அப்படியே பக்கெட்டில் அள்ளி அள்ளி மக்களுக்கு பார்சல் செய்து தருவது கண்கொள்ளாக் காட்சி. 


வெயிலில் அலைந்து சென்று வாங்கியதற்கு பலனாக நல்ல சுவையான பிரியாணி. மட்டன் பீஸ்களை தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். நல்ல டேஸ்டாக இருக்கிறது.


முயன்று பாருங்கள். செல்லும்பொழுது தேவைக்கேற்ப பாத்திரம் எடுத்துச்சென்றுவிட்டால் வசதியாக இருக்கும். ஏமாற்றங்களை தவிர்க்க சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு காலையோ ஆர்டர் கொடுத்துவிட்டால் நலம்.


தொடர்புக்கு : உஸ்மான் பிரியாணி - 044 24918581






சென்னையில் கோடை காலம் வரப்போகிறது என அறிவிக்கும் முதல் ஆள் அண்ணன் தர்பூசணிதான். ஆளை அடித்துப்போடும் பளீர் சிவப்பில் தடாரென சென்னை சாலைகளில் பிப்ரவரி மாதமே வரிசை கட்ட ஆரம்பித்துவிடும்.  இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு ஸ்லைஸ் விலை ரூ.5 ஆக இருந்தது. தற்போது சற்றே நீளமான ஸ்லைஸ் போட்டு வைத்து ரூ.10 என விற்பனை செய்கிறார்கள். சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் துண்டுகளாக வெட்டிப்போட்டு அதில் ஒரு பல் குத்தும் குச்சியை சொருகி வைத்து விற்பனை செய்வது தர்பூஸ் விற்கும் தமிழனின் அப்டேட்டட் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ்!


ஞ்சா கலர், ரோஸ் கலர் மருந்து சீட்டு போல் இருந்த டிக்கெட்டை மாற்றி தற்போது கோயம்பேடு ரோஹிணி தியேட்டரிலும் கம்ப்யூட்டர் பிரிண்ட் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எதை மாற்றினாலும் விலையை டிக்கெட்டில் குறிப்பிடாததை மட்டும் மாற்ற மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாய் இருக்கிறார்கள் போலும்.  இந்த டிக்கெட்டில் விலை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஹன்சிகா மோத்வானியின் கையெழுத்திடப்படாத பரிசு பொருள் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.




ஃபிளாட்டில் இருக்கும் வாண்டுகள் கிரவுண்டுக்கு அழைத்துப்போக தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். ஒருநாள் எல்லாத்துக்கும் லீவு விட்டு டிரஸ்ட்புரம் கிரவுண்டில் வெயிலை வீணாக்காமல் கிரிக்கெட் விளையாடியதில் எனக்குள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்ட ஒரு மினி தோனியே ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்தேன். ஹி..ஹி..



வெளியூர் பயணங்கள் புறப்படும் பொழுதோ, ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதோ தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் அம்மா ஒரு ரூபாய் போடுவது வழக்கம். ஓட்டு போட கிளம்பும் அன்று தெருமுனை பிள்ளையார் கோவில்ல நிக்கிறேன் வா.. என்று கூறி நடந்தார். எதுக்கும்மா என கேட்டால், நல்ல ஆட்சி வரனும்னு ஒரு ரூபாய் போட போறேன் அதான் என்றார்.


9 comments:

புதுகை.அப்துல்லா said...

// நல்ல ஆட்சி வரனும்னு ஒரு ரூபாய் போட போறேன் அதான் என்றார்

//

ஒரு ரூபாய்க்கு அரிசி போடுபவரின் ஆட்சியே சிறந்தது என்பதை உங்க அம்மா எவ்வளவு அழகாச் சொல்லிருக்காங்க :)

( சுகுமார் மனசாட்சி : எல்லா நேரமும் எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போற அண்ணன் கரெக்ட்டா இப்ப மட்டும் பின்னூட்டம் போடுறான் பாரு )

துளசி கோபால் said...

அம்மா நல்ல அம்மா. ஒரு ரூபா ஆட்சி தொலையட்டுமுன்னு கூட ஒரு ரூபா உண்டியலில் போட்டுருக்கலாம்:-))))

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

பொன் மாலை பொழுது said...

ஒரு ரூபாய் போட்டாலும் நூறு ரூபாய் போட்டாலும் செய்தி அதுவல்ல. நம் அம்மாக்களுக்கு நம் நாடும் நன்றாக இருக்கவேணும், நல்ல ஆட்சி வேணும் என்ற ஆதங்கம் இருப்பதை பாருங்கள்.


தியேட்டர் டிக்கெட் பற்றி உரியவர்களிடம் புகார் தந்தால் என்ன?

குரு said...

பகிர்வுக்கு நன்றி...
அடுத்த முறை சென்னை வரும் போது பிரியாணியை முயற்சி செய்ய வேண்டும்...
பாஸ் நீங்க விளையாண்ட அந்த கிரிக்கெட் மேட்ச் போட்டோஸ் கிடைக்குமா..??
என்னோட வலைதளத்தில் போட்டோ கமெண்ட்ஸ் போட வசதியா இருக்கும்.. ஹி ஹி...

Chitra said...

Your mother is so sweet! :-)

Chitra said...

பிரியாணி பற்றிய தகவல், சூப்பர்!!! :-)

Anonymous said...

//பாஸ் நீங்க விளையாண்ட அந்த கிரிக்கெட் மேட்ச் போட்டோஸ் கிடைக்குமா..??
என்னோட வலைதளத்தில் போட்டோ கமெண்ட்ஸ் போட வசதியா இருக்கும்.. ஹி ஹி.///
அப்படி போடும் போது எனக்கு ஒரு நோட்டிபிகேசன் அனுப்புங்க சார்

சாருஸ்ரீராஜ் said...

பக்கட் பிரியாணி தகவல் புதுசு , பிளாட் பசங்க கூட விளையாடினதால தோனி எட்டி பார்த்திருப்பாரோ...அம்மா தகவல் அருமை

91 club