அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றுதான் இல்லை. மற்றபடி உணர்வுப்பூர்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மோதிய இரண்டு பெரிய படங்கள் ஏழாம் அறிவும் வேலாயுதமும்.
சூர்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்கும் மாஸ் ஃபேக்டர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேனர், எம்.ராஜா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திருந்தது என வேலாயுதத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியிருந்தது.
அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப், போதி தர்மன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்ற தோற்றத்தை விளைவித்த டிரைலர், நிறைய தியேட்டர்களை பிடித்தது, முன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாம் அறிவுக்கே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
25ம் தேதி இரவு கமலாவில் ஏழாம் அறிவு பார்த்தேன். சொல்லப்பட்டிருக்கும் செய்திக்காக சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து.
பாடல்களை திரையில் பார்க்க விரும்பிய ஒரே காரணத்திற்காக 26ம் தேதி தீபாவளியன்று காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பார்த்தேன். இதுவரை எந்த விஜய் படத்துக்கும் முதல்நாள் போனதில்லை.
விஜய் படம் பார்க்கிறோம் என மனதை தயார் செய்து கொண்டு உட்கார்ந்தால், ஆச்சரியப்படும் விதமாக முதல் பாதி முழுவதும் கலக்கலான காமெடியுடன் செம ஜாலியாக சென்றது வேலாயுதம். இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.
கொடுக்கும் காசுக்கு மேலாகவே விஜய் ஆண்டனியும், சந்தானமும் திருப்திப்படுத்தி விடுகிறார்கள். முதல் பாதியின் கிராமத்து எபிசோடினை சொல்லிய விதம் செம அட்டகாசம். சென்னைக்கு வந்ததும் சந்தானமும் சேர்ந்துவிடுவதால் படம் இன்னும் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம்.
மற்றுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீரோவாக உருமாறும் விதம் நிம்மதியான விஷயம். கிராமத்தில் அடிக்கும் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காமெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிருக்கிறது.
படத்தில் விஜய், சந்தானத்திற்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு. அம்மணியை மாப்பிள்ளை, எங்கேயும் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மாமா மாமா என அவர் சுற்றி வருவது செம க்யூட். அவர் முன் ஜெனிலியா ஏதோ சுமாரான பிகர் போல் இருக்கிறார்.
எனக்கு வெகுவாக பிடித்திருந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'மொளச்சு மூணு..' பாடல்கள் சிறப்பாக திரையில் வந்திருக்கிறது.
இன்றைய அ.தி.மு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிர்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறும். அதிலும் அந்த ஓ..ஓஹோ என வரும் ராகம் செம சூப்பர். எனக்கு பெர்சனலாக இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.
ஆகவே மக்களே.. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு ஒருமுறை பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதனால் என்னைப்பொறுத்த வரை வேலாயுதமும் ஏழாம் அறிவுடன் டிரா ரிசல்ட் ஆகிறது.
பின்குறிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html
Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan