வழக்கமாக வீரர்கள் விளையாடி முடித்ததும் யாரோ அவர்களது உடைகளை துவைத்து காய வைப்பார்கள். ஆனால் நேற்று நடந்த அரையிறுதியில் ஜெர்மனி அணியினர் செய்தது வித்தியாசமானது. பிரேசில் வீரர்களது உடைகளை ஜெர்மனி வீரர்களே துவைத்து தொங்க விட்டார்கள். துவைக்கும் போது பிரேசில் வீரர்கள் உடையின் உள்ளே இருந்தார்கள் என்பதுதான் பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு வருத்தமாம்!
# தட் நானும் மேட்ச் பார்க்கிறேன் என்னையும் ஜீப்ல ஏத்திக்கோங்க மொமன்ட்
***
முதன்முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாய்ப்பு. விடக்கூடாது அல்லவா..? கடந்த வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற நம்ம கேபிள்ஜியின் 'தொட்டால் தொடரும்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பதிவர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது. இரண்டு டிரைலர்கள், இரண்டு பாடல்கள் திரையிடப்பட்ட பிறகு பிரபலங்கள் பேசி முடித்த பின் இசை வெளியிடப்பட்டது.
ஏற்கனவே பாஸு பாஸு சிங்கிள் டிராக் மூலம் அசத்தி இருந்தனர். இப்போது டிரைலரை பார்த்த பின்னர் வெற்றிப் படமாக அமையும் என தெரிந்து விட்டது. பாடல்களை பொருத்தவரை வெகு சிறப்பாக வந்திருக்கிறது. 'யாருடா மச்சான் அவ யாருடா' பாடலை மீண்டும் மீண்டும் லூப்பில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அடுத்து 'பெண்ணே பெண்ணே' நல்லதொரு மெலடியாக அமைந்திருக்கிறது. 'ஹே.. எனக்கென இந்த பூமியில் வந்தவனே' என மெஸ்மரைசிங் குரலில் துவங்கும் 'பூப்போல பூப்போல' பாடலும் 'ஜாதகத்தில் யோகம் வந்தது' பாடலும் பீல் குட் உணர்வினை தரும் ரகம். பாடல்களை கேட்கும் போதே படத்தை திரையில் காணும் ஆவல் எழுகிறது. கேபிள் சங்கர் கலக்கப்போகிறார்! வாழ்த்துக்கள்!
***
முதன்முறையாக ஒரு ஆங்கில இசை நாடகம் பார்த்தேன். 'விக்டர் ஹியுகோ' எழுதிய 'லே மிஸரபில்ஸ்' என்கிற புகழ்பெற்ற புத்தகத்தினை தழுவி லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் சென்னையைச் சார்ந்த நடிகர்கள், இசைக் கலைஞர்களை வைத்து உலகத்தரத்தில் ஒரு பிரமிப்பான அனுபவத்தை தந்திருந்தார்கள் 'தி குக்கூ கம்பெனி'!
இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் சென்னையின் சிறப்பான ஆடிட்டோரியங்களில் ஒன்றான ஹாரிங்டன் சாலையில் உள்ள சார் முத்தா வெங்கட்ட சுப்பராவ் கான்சர்ட் ஹாலில் நடைபெற்றது. ஒலியமைப்பும் ஒளியமைப்பும் மிகத் தரமானதாக இருந்தது. லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் பாடிக் கொண்டே நடித்த நடிகர்கள் அசத்தி விட்டார்கள். அருமையான அனுபவம்!
இதில் இடம்பெற்ற லுக் டவுன், மாஸ்டர் ஆப் தி ஹவுஸ், லவ்லி லேடிஸ் டிராக்குகளை தேடிப் பிடித்து கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மனதில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கிறது.
***
சமீபத்தில் முன்னேர் பதிப்பகத்திற்காக நான் சில புத்தக அட்டைகள் வடிவமைத்திருந்தேன். கடந்த வாரம் அவைகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்கள். இதுபோல புத்தம் புது புத்தங்களை இலவசமாக மணமணக்க அனுப்பி வைப்பதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் டிசைன் செய்யலாம்.
முன்னேர் பதிப்பக முகப்புத்தக பக்கம் : https://www.facebook.com/munnerpathippagam?fref=ts
***
கோச்சடையான் நான்காவது முறையாக சனிக்கிழமை சென்றிருந்தேன். தலைவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையை இன்னுமொரு முறை சுவைத்துவிடலாம் என்று.
படம் ஆரம்பித்ததும் பக்கத்தில் இருந்தவர் 3டி கண்ணாடியை அகற்றி அகற்றி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வினோதமாக அவரையே பார்க்க.., "கண்ணாடி எடுத்தா எப்படி தெரியுதுன்னு செக் பண்றேன்" என்றார். "நல்லா பண்ணுங்க.. படத்துலயே மொத்தம் பத்து நிமிஷம்தான் 3டி.. அதையும் இப்படியே பண்ணிடுங்க.." என நினைத்துக் கொண்டேன்.
ஒரு 2டி படத்தை 3டி கண்ணாடி மாட்டி பார்க்க வைக்கும் தொழில்நுட்பம் உலகத்திலேயே இதுதான் முதன்முறை.
2 comments:
கேபிள் சங்கர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.
Post a Comment