Monday, March 28, 2022

ஆஸ்கார் மேடையில் விழுந்த 'அறை'



இன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன் கிறிஸ் ராக் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்ததுதான் தற்போதைய வைரல் நியூஸ். 

சிறந்த நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் இருக்கும் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பிங்கட் ஸ்மித் தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவரது தோற்றத்தை ஜி.ஐ.ஜோன் எனும் திரைப்படத்தில் நடிகை டெமி மூர் மொட்டை தலையுடன் நடித்த கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு தொகுப்பாளர் கிறிஸ் கிண்டல் செய்ததால், கோபத்துடன் மேடையேறிய வில் ஸ்மித் அவர் கன்னத்தில் அறைந்தார். பிறகு எனது மனைவியின் பெயர் உன் வாயில் வரக்கூடாது என திட்டினார். 

Body Shaming எனும் உருவக்கேலி இது போல எந்தவகையில் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றும், வில் ஸ்மித் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார், அறைந்தது தவறு என்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில்  ஆதரவும் எதிர்ப்புமாக இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இதன் பின்னர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வில் ஸ்மித் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பதிவைக் காண :




அமேசான் தளத்தில் இன்றைய சிறந்த ஆஃபர்களை காண : https://amzn.to/3iLNnHu



No comments: