Friday, June 3, 2016
இறைவி - புரிந்ததும் புரியாததும்
"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...?"
"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற.."
"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. படம் நல்லா இருந்தா தங்கு தங்குன்னு குதிப்பீங்க.. மொக்கையா இருந்தா அமைதியா இருப்பீங்க.. இப்ப வந்து பத்து நிமிஷமா வாயே திறக்கலையே அதான் கேட்டேன்."
"ஹே.. சே... சே.. அப்படி சொல்றியா,,, படம் மொக்கைலாம் இல்ல.. நல்ல கதையுள்ள படமே வர்றது இல்லன்னு சொல்றாங்கல்ல.. அதுக்கு நல்ல துவக்கமா.. பேய், காமெடி டெம்ப்ளேட் படங்களில் இருந்து மாறுதலா ஹெவியா ஒரு நல்ல டிராமா மூவியா இறைவியை எடுத்துக்கலாம்.."
"அப்போ ரொம்ப நல்லா இருக்கா,,"
"அதுக்குன்னு அப்படியும் சொல்லிட முடியாது... அங்கங்க கொஞ்சம் ஸ்லோ, வயலன்ஸ்ன்னு சில மைனஸ்களும் இருக்கு.."
"அப்போ ஆவரேஜா.. ஒருவாட்டி பார்க்கலாம் வகை படமா.."
"நோ.. நோ.. இந்த படத்தை விமர்சனம்லாம் பண்ண மனசு வரலை... இது ஒரு அனுபவம்.. நல்ல பவர்புல் காஸ்டிங், ஸ்டிராங்கான கதை, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பார்க்கிற மனநிலை இருந்தா நல்ல ரசனையான புராடக்ட் இந்த படம். பொதுவா நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாமா மோசம்னும் சொல்ல முடியாத வகை படங்களுக்கு வேணா ஆவரேஜ், ஒன் டைம் வாட்ச்னு அடிச்சிவிடலாம்... ஆனா இந்த படத்தை கூட்டத்தோட கூட்டமா அப்படி சொல்ல முடியாது."
"வேற எப்படி சொல்லலாம்..?"
"அதான் புரியாம பத்து நிமிஷமா யோசிட்டு இருக்கேன்!"
"அடப்பாவமே... அப்போ கதையையாச்சும் சொல்லுங்க எனக்காச்சும் புரியுதா பார்ப்போம்.."
"அதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரும்மா.."
"யாரு..??"
"கார்த்திக் சுப்புராஜ்"
"அதாரு.,..??"
"படத்தோட டைரக்டர்"
"உங்கக்கிட்ட எப்போ சொன்னாரு... உங்க பேஸ்புக் பிரண்டாக்கும்.."
"இதென்னடா சோதனை.. பொதுவா பிரஸ் நோட்ல சொல்லியிருக்காரும்மா.."
"யாரோ எவரோ பிரஸ்ல சொன்னதுலாம் ஞாபகம் இருக்கு.. படம் முடிஞ்சு நான் என்னென்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்.. அதுல எத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாருங்க.. இத்தனைக்கும் காலையில கழுதை மாதிரி கத்தி கத்தி அனுப்பினேன்... அஞ்சு பொருள் சொன்னா.. அதுல நாலு பொருள் காணும்.. "
"ஐயாம் வெரி சாரிம்மா.. இறைவி பார்த்தா ஒரு வாரமாச்சும் மனசு பாதிக்கும்னு சொன்னாங்க.. அதான் படம் தந்த பாதிப்புல மறந்துட்டேன் போல..."
"யாரு சொன்னாங்க.."
"அவங்களே மேக்கிங்-வெப் சீரிஸ்ல சொல்லிக்கிட்டாங்க..."
"ஏங்க படுத்துறீங்க.. எல்லா படமும் பார்க்க மாட்டேன்.. இது சயின்ஸ் பிக்ஷன் படம் சூர்யா நடிச்சது.. இது ஜிகர்தண்டா எடுத்தவரு படம்.. இது அப்படியாக்கும.. ஆணை பூனைன்னு ஒவ்வொரு படத்துக்கும் என்னத்தையாவது சொல்லிட்டு போக வேண்டியது.. சினிமான்னா எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சொல்ற பொருள் வாங்கிட்டு வர மட்டும் மறந்து போயிடுது இல்ல... சொல்றதை காதுல வாங்குறதில்லை.. என்ன பார்த்தா எப்படித்தான் தெரியுதோ.. ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல.."
"அய்யோ.. இப்ப புரிஞ்சிடுச்சு.... இறைவிலயும் இதைத்தான்..."
"அடிங்ங்ங்ங்ங்....."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment