Wednesday, February 4, 2015

வலைமனை | ஃபீலிங்ஸ் 04 02 15

பள்ளி கல்லூரி நாட்களில் படிக்கும் பொழுது, இந்த சேப்டருக்கு இவ்ளோ நேரம் என ஷெட்யூல் போடுவது வழக்கம். 8-9 படிக்க வேண்டியது மிஸ் ஆகி 8.20 ஆகியிருக்கும். சரி ரவுண்டா 9 மணிக்கு ஆரம்பிச்சிடலாம் என நாடாளுமன்றம் போல அவை ஒத்திவைக்கப்படும். எப்போ ஒத்தி வச்சாலும் நாங்க கத்தி வைப்போம்ங்கிற உறுப்பினர்கள் மாதிரி, ஒன்பது பத்தாகி அப்படியே பரீட்சையும் பனாலாகி விடுவது வாடிக்கை.

அந்த உவமையை போல,  கடைசியாய் ஃபீலிங்ஸ் நவம்பரில் எழுதியது. டிசம்பரில் சில நாட்கள் மிஸ் ஆகிவிட, சரி ரவுண்டா ஜனவரியில் ஆரம்பிச்சுடலாம் என இருந்தேன். அங்கும் தவறவிட ரவுன்டா பிப்ரவரி ஆனது. இப்பொழுது 'ஃபிப்'பும் ஆகிவிட்டது.  சரி.. ரவுன்டா மார்ச் என எழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பிவிட்டு  இதோ இந்த போஸ்ட்.

எழுதப் போற நாலு வரிக்கு எதுக்குய்யா நாப்பது வரி முன்னுரை என்றால்... "அங்கிளுக்கான சேரை... சட்டுன்னு கொண்டு வந்துட்டோம்..." என்பது போல கொஞ்சம் அவுட்டேட்டட் சங்கதிகள் உள்ளடக்கத்தில் உண்டு. பொறுத்தருள்க :)


•••

எப்பொழுதும் புதுவருட துவக்கத்தை விடிய விடிய  அப்பார்ட்மென்ட்ஸில் சிறுவர்கள் ஆடல் பாடல், அனைவருக்கும் கேம் ஷோ, பரிசு என நாங்கள் ஒருங்கிணைத்து கொண்டாடுவோம். இந்த முறை ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஃபார்மெட்டில் நடத்திய விளையாட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வி.ஐ.பிக்களின் முகத்தை மறைத்து வெறும் கண்ணை வைத்து இது யார் என கண்டுபிடிக்க சொன்ன கண்ணாம்பூச்சி கேள்விகளை சின்னஞ்சிறுவர்கள் துவம்சம் செய்தார்கள். மூன்றாம் வகுப்பு சிறுவன் ஒருவன் கண்ணை மட்டும் காண்பித்ததும் 'காஜல் அகர்வால்' என மில்லி செகன்டில் கண்டுபிடிக்கிறான். கூகுளை விட இந்த ஜெனரேஷன் கோகுல்கள் ஸ்பீடாய் இருக்கிறார்கள்.

கெட் டூ கெதர் நிகழ்வுகள், அலுவலக கொண்டாட்டம் போன்றவற்றிற்கு உபயோகப்படும். தேவைப்படுவோர் நான் வடிவமைத்த கேள்வி பதில்களை டவுன்லோட் செய்து இன்புறுக :  http://goo.gl/jDJ5E9


•••

நல்லா படிச்சு இனிமேலாச்சும் நான் ஒழுங்கா வளரனும் :)

வருடா வருடம் சென்னையில் நடக்கும் உலகின் மாபெரும் பேஸ்புக் பிரன்ட்ஸ் மீட் (அ) புத்தக திருவிழாவிற்கு  இம்முறை கடைசி நாள்தான் செல்ல முடிந்தது. அதிகமாய் நண்பர்களை காண முடியவில்லை. ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியும், அகநாழிகையிலும் கிழக்கிலும் சில புத்தகங்களை வாங்கினேன்.  கிழக்கு பதிப்பக பத்ரி பேஸ்புக்கில் டாப் செல்லிங் புத்தக லிஸ்ட்டில் 'ஆரோக்யம் தரும் சிறுதானிய சமையல்' புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலில் அவரை பார்த்து, 'சார் அந்த புக் எங்க இருக்கு?' என கேட்டதும், அவரே எழுந்து சென்று எடுத்து கையில் தந்தார். வரவேற்பில் உட்கார்ந்திருந்த ஹரன் பிரசன்னாவிடம் அறிமுகம் செய்து கொண்டு மதிப்புரை டாட் காமிற்காக அவர்கள் அனுப்பி வைத்த புத்தகத்திற்கும் எனது நூல் அனுபவத்தை வெளியிட்டமைக்கும் நன்றி தெரிவித்தேன். அது என்ன மதிப்புரை மேட்டரு என்பவர்கள் அடுத்த பத்திக்கு வரவும்.

•••

மதிப்புரை.காம் தளத்தில் விமர்சனம் எழுத விருப்பமாயின் இந்த சுட்டியில் தரப்பட்டிருக்கும் புத்தக லிஸ்ட்டில் நாம் விரும்பியதை குறிப்பிட்டால் அதை இலவசமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். புத்தகம் கிடைத்த 20 நாட்களுக்குள் அதை குறித்த விமர்சனத்தை எழுதி அனுப்ப வேண்டும்.

'ஜப்பான்' புத்தகம் குறித்த விருப்பத்தை அனுப்பிவிட்டு மறுநாள் வீட்டில், "கொரியர்ல.." என ஆரம்பித்த பொழுது, "என்ன.. புக் வருமா..? காலையிலேயே வந்துடுச்சு..!" என தந்தார்கள். ஒரே நாளில் கொரியர் வந்திருந்தது. அதைப் படித்து நான் அனுப்பி வைத்த பார்வையையும் பின்னர் மதிப்புரை டாட் காமில் வெளியிட்டிருந்தார்கள். இதோ அதன் சுட்டி :
http://mathippurai.com/2014/11/21/japan/

•••

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரிந்த நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது. 'அம்மா வீட்டுக்கு போய் நகை கொண்டா.. பணம் கொண்டா'ன்னு துன்புறுத்தும் கணவர்கள் மேல் வரதட்சணை கொடுமை சட்டத்தில் புகார் தருவது போல, "எப்பங்க பிளாட் வாங்க போறோம்..? எப்பங்க ஒரு வீடு கட்டுறது?" என தினம் டார்ச்சர் செய்யும் மனைவிகள் மேல் புகார் கொடுக்க ஏதாவது சட்ட வழிமுறை இருக்கிறதா என்கிற தகவல் வேண்டும். பிளீஸ் ஹெல்ப்!

2 comments:

Philosophy Prabhakaran said...

தல,

ஒயின்ஷாப்பும் இதுபோன்ற ஒத்திவைப்பு தீர்மானங்களால் திறக்கப்படாமலே இருக்கிறது.

நீங்கள் வாங்கியிருக்கும் 'குழந்தை வளர்ப்பு அறிவியல்' புத்தகத்தை நானும் வாங்கியிருக்கிறேன். அநேகமாக நீங்கள் எனக்கு முன்பே படித்துவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். படித்தால் உங்கள் கருத்தை எழுதவும்.

மதிப்புரை மேட்டர் உண்மையிலேயே ரொம்பப் பழசு. இருந்தாலும் இதுவரை விஷயம் தெரியாதவர்கள் தெரிந்துக் கொண்டிருப்பார்கள்.

Sukumar said...

பிரபா..

அந்த புத்தகத்தை இப்போதைக்கு கையில் எடுக்கவில்லை. நீங்கள் முடித்தாலும் பதிவிடுங்கள். ஒயின்ஷாப்பை விரைவில் திறக்க வாழ்த்துக்கள்... :)

91 club