Wednesday, January 25, 2012

வலைமனை | ஃபீலிங்ஸ் 25 01 12




யுடான்ஸ் திரட்டியில் 'இந்த வார நட்சத்திரம்' ஆக்கியிருக்கிறார்கள். யுடான்ஸ் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த வருடம் என் நட்சத்திர பலன்கள் நன்றாக இருப்பதாக அப்பா சொன்னார். உண்மைதான் போலிருக்கிறது.

 _______________________________________________


ந்த புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. பல புத்தகங்கள் வாங்கும் ஆவலை தூண்டினாலும் வீட்டில் ஸ்டாக் இருக்கும் புத்தகங்களை படித்து முடித்து விட்டுத்தான் அடுத்த செட் வாங்க வேண்டும் என்கிற 2011 ரெசொல்யூஷனை 2012ல் புதுப்பித்துக்கொண்டேன்.  தங்கமணியின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் இதில் கணிசமான பங்குண்டு.









இந்த புத்தக கண்காட்சி எனக்கு ஸ்பெஷலாகவே இருந்தது. நான் அட்டைப் படங்கள் வடிவமைத்து வெளியான அழிக்கப்பிறந்தவன், தெர்மாக்கோல் தேவதைகள், நான் கெட்டவன் ஆகிய புத்தகங்களை ஸ்டால்களில் பார்க்கவும் அதை மக்கள் வாங்கிச்செல்வதை காண்கையிலும் பேரானந்தமாய் இருந்தது.




நான் வடிவமைத்த மற்ற டிசைன்களை பார்க்க :
http://valaimanai.blogspot.com/p/blog-page_31.html
(வௌம்பரம்ம்ம்..)

_______________________________________________

ன்னடா, கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன். சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.




அப்படி சில வருடங்கள் முன்பு ஓரு மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த 'மாடு மாதிரி' ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்


_____________________________________


டந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த எனது ட்வீட் :



னந்த விகடனில் வராத எனது ட்வீட்ஸ் :


தெய்வத்திருமகள் ஆங்கில பட காப்பி என கிண்டலடித்தது தவறுதான். அதற்காக ராஜபாட்டை போன்ற ஒரிஜினல் சரக்கு டூ மச்சான தண்டனை சாமி..




யூத்தாய் டிஷர்ட்டில் கிளம்புகையில், "பனி உங்களுக்கு ஆகாது, குல்லா மாட்டிட்டு போங்க" என மனைவி சொல்லும் வேளையில் துவங்குகிறது வயோதிகம்.




2008ல் பீமா 2012ல் வேட்டை என்கிற லிங்குசாமியின் விளம்பரத்தை பார்க்கும்பொழுது வடக்குப்பட்டி ராமசாமி காமெடிதான் நினைவிற்கு வருகிறது.


குஸ்காவில் பீஸ் தென்படும் அளவிற்கு கூட வெங்காய பச்சடியில் தயிர் தென்படுவதில்லை # சென்னை ஃபாஸ்ட்புட்ஸ்






பாமகவுக்கே ஓட்டு என குலதெய்வம் மீது சத்தியம் வாங்கி உறுப்பினர்களை சேருங்கள்-ராமதாஸ் # நீங்க மருத்துவர் ஐயாவா, இல்ல மேல் மருவத்தூர் ஐயாவா?



டிவிட்டரில் என்னை பாலோ செய்ய : https://twitter.com/#!/sukumarswamin

(அதெல்லாம் முடியாது போய்யா என்பவர்கள் ஃபேஸ்புக்கில் கூட பாலோ செய்யலாம் )



8 comments:

CS. Mohan Kumar said...

யுடான்ஸ் ஸ்டார் ஆகி மூணு நாள் கழிச்சு தான் எட்டி பாப்பீங்களா? கேபிள் இதையெல்லாம் கேட்பதில்லையா?

Prabu Krishna said...

மாடு ஏன் இப்புடி படுத்து இருக்குன்னு நாய் பார்த்து இருக்குமோ?

ராஜபாட்டை ட்வீட் சூப்பர்.

vinthaimanithan said...

சாமீய் பின்றீங்க!

சாருஸ்ரீராஜ் said...

இரண்டாவது ட்வீட்ஸ் அருமை . எல்லாம் முகபுத்தகத்தில் வந்ததோ படித்த மாதிரியே இருக்கு இரண்டாவதை தவிர.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Chitra said...

யுடான்ஸ் திரட்டியில் 'இந்த வார நட்சத்திரம்' ஆக்கியிருக்கிறார்கள். யுடான்ஸ் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

...Congratulations!!!

aotspr said...

நல்ல முயற்சி........





"உங்கள் தகவலுக்கு நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

THUPPAKITHOTTA said...

nice

91 club