Thursday, February 10, 2022

லேடி சூப்பர்ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை



 2018ல் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ்க்காக இயக்குகிறார்.

'கோலமாவு கோகிலா'வை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'டாக்டர்' படம் நெல்சனுக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது. பான்டமிக் பாதிப்பில் இருந்து மீள திரையரங்குகள் தள்ளாடிய நிலையில் டாக்டரின் பெரும் ஹிட் அவற்றிற்கு நம்பிக்கையை அளித்தது.

'டாக்டர்' வெளிவரும் முன்னரே விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' பட வாய்ப்பு. தற்போது அது வெளிவரும் முன்னரே ரஜினி, அண்ணாத்தேவிற்கு அடுத்தபடியாக நடிக்கும் படம் என நெல்சனின் கலைப்பயணம் ஏறுமுகமாக இருக்கிறது. 

இன்றைய வைரல், தலைவர்169 பட அறிவிப்பாக வந்திருக்கும் இந்த வீடியோதான்.



No comments: