Tuesday, February 8, 2022

ரசிக்க வைக்கும் 'புரோ டாடி'





லூசிபர் எனும் ஆக்ஷன் ஸ்கிரிப்டில் மோகன்லாலை பார்த்து பார்த்து ரசித்து இயக்கி ஹிட் கொடுத்த பிருத்விராஜ், தற்போது அப்படியே ஆப்போசிட் டைரக்ஷனில் ஃபீல் குட், நகைச்சுவை வகையை கையில் எடுத்து புரோ டேடி எனும்  திரைப்படத்தில் மோகன்லாலுடன் தானும் சேர்ந்து லூட்டி அடித்திருக்கிறார்.

சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் தந்தை மகனாக பிருத்விராஜ், மோகன்லால் நடித்துள்ளனர். மீனா, கனிகா ஆகியோரும் உண்டு.

படம் முழுக்கவும் மென் புன்னகையோடு பார்த்து ரசிக்கும் விதத்தில் கதையம்சமும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் மோகன்லாலின் வெட்கப்படுதல், தர்மசங்கடம் போன்ற சின்ன சின்ன பாவனைகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது. 

கவலைகள் மறந்து பார்த்து ரசிக்கலாம்!



No comments: