Monday, February 7, 2022

'பீஸ்ட்' அரபிக் குத்து - தொடரும் மூவர் கூட்டணி


 

'டாக்டர்' பட பாடல்களை யூடியூப்பில் வெளியிடும்போது  சிவாகார்த்தியேன், அனிருத், இயக்குனர் நெல்சன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட சின்ன சின்ன ப்ரமோ வீடியோக்கள் சூப்பர் ஹிட் அடித்தன. 

ஒருவரையொருவர் கிண்டல் செய்தபடி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் இந்த மூவர் காம்போ தற்போது பீஸ்ட் படத்திற்காகவும் ஒரு புரமோ வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். இதில் விஜய்யும் குரல் கொடுத்து கூடுதல் சிறப்பு செய்திருக்கிறார்.

பீஸ்ட் படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள 'அரபிக் குத்து' பர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படுகிறது. இதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோதான் இன்றைய ரகளை வைரல் ஹிட்.





No comments: