Monday, February 7, 2022

ஹுண்டாய் ட்வீட் சர்ச்சை #ViralToday



ஹுண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் டீலர்,  PakistanHyundai எனும் டிவிட்டர் ஐடியில் இருந்து வெளியிட்ட காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய டிவீட் இந்திய டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 

பலரும் தாங்கள் புக் செய்திருந்த ஹுண்டாய் கார்களை ரத்து செய்வதாக இணையத்தில் அறிவிக்க, ஹுண்டாய் நிறுவனம் தற்போது இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஆனாலும் இந்த அறிவிப்பு தெளிவானதாகவும் போதிய அளவில் திருப்திகராமானதாக இல்லையென்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

No comments: