Tuesday, April 5, 2022

அமேசான் ஃபேஷன் - பெண்களுக்கான பேன்ட் & ஜீன்ஸ்

 அமேசான் ஷாப்பிங்கில் லேட்டஸ்ட் ஆக, பெண்களுக்கான லேட்டஸ்ட் டிரன்ட் பேன்ட் மற்றும் ஜீன்ஸ் வகைகளை இங்கே வழங்கியுள்ளோம். இவையனைத்தும் ரூ.1000த்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. 



Latest trending pants and jeans less than Rs.1000 at Amazon Fashion

Monday, March 28, 2022

ஆஸ்கார் மேடையில் விழுந்த 'அறை'



இன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன் கிறிஸ் ராக் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்ததுதான் தற்போதைய வைரல் நியூஸ். 

சிறந்த நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் இருக்கும் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பிங்கட் ஸ்மித் தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவரது தோற்றத்தை ஜி.ஐ.ஜோன் எனும் திரைப்படத்தில் நடிகை டெமி மூர் மொட்டை தலையுடன் நடித்த கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு தொகுப்பாளர் கிறிஸ் கிண்டல் செய்ததால், கோபத்துடன் மேடையேறிய வில் ஸ்மித் அவர் கன்னத்தில் அறைந்தார். பிறகு எனது மனைவியின் பெயர் உன் வாயில் வரக்கூடாது என திட்டினார். 

Body Shaming எனும் உருவக்கேலி இது போல எந்தவகையில் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றும், வில் ஸ்மித் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார், அறைந்தது தவறு என்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில்  ஆதரவும் எதிர்ப்புமாக இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இதன் பின்னர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வில் ஸ்மித் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பதிவைக் காண :




அமேசான் தளத்தில் இன்றைய சிறந்த ஆஃபர்களை காண : https://amzn.to/3iLNnHu



Saturday, March 26, 2022

Tamil Anthem Lyrics | மூப்பில்லா தமிழே தாயே | A R Rahman




புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் !
பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !
பிரிந்தோம் முன்னம் நாம்...
இணைந்தோம் எப்போதும் !

திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !
திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் !
புறம் என்றால் போராய்ப்
பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !

உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !
கொடைவள்ளல் எழுவர் வந்தார்...
கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்...
பலபாடம் கற்றுச் சென்றார் !
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

உதிர்ந்தோம் முன்னம் நாம்...
மலர்ந்தோம் எப்போதும் !
கிடந்தோம் முன்னம் நாம்...
கிளைத்தோம் எப்போதும் !
தணிந்தோம் முன்னம் நாம்...
எரிந்தோம் எப்போதும் !
தொலைந்தோம் முன்னம் நாம்... பிணைந்தோம் எப்போதும் !
விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !
காலங்கள் போகும்போது
மொழிசேர்ந்து முன்னால் போனால்... அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று...
வணிகத்தின் தமிழாய் ஒன்று...
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !

மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !
கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !
உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் !
உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை...
முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்...
ஆடைகள் அணியும் புதிதாய் !
எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா..!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா வாவா...!

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

பழங்காலப் பெருமை பேசி...
படிதாண்டா வண்ணம் பூசி...
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..!
நீ சீறி வாவா வெளியே !

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
'செயல்' என்றே
சொல்சொல் சொல்சொல்...!

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்...
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்...
இருக்கைகள்
தமிழுக்கமைப்போம்..!
ஊர்கூடித் தேரை இழுப்போம் !

மொழியில்லை என்றால் இங்கே...
இனமில்லை என்றே அறிவாய் !
விழித்துக்கொள் தமிழா முன்னே...!
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..!

தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று !
உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!...

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!


Amazon Top Deals on Mobiles and Accessories

Monday, March 7, 2022

உங்கள் கிச்சனில் இருக்க வேண்டிய 3 பொருட்கள் #Amazon Shopping

 

1. Philips Hand Blender

பிலிப்ஸ் ஹேண்ட் பிளன்டர்





ஸ்மூத்திஸ், துவையல், மேஷ்ஷிங் செய்ய ஏற்றது

அமேசான் தளத்தில் வாங்க : https://amzn.to/3IR2qLG




2. Preethi CH 601 450 W Chopper, White

ப்ரீத்தி சாப்பர்





சிறிய மற்றும் பெரிய துண்டுகளாக காய்கறிகளை நறுக்க ஏற்றது.




3. Kent Super Egg Boiler

கென்ட் சூப்பர் எக் பாய்லர்

ஒரே நேரத்தில் 6 முட்டைகளை அவிக்கலாம்

அமேசான் தளத்தில் வாங்க https://amzn.to/3sQh8gt




Thursday, February 10, 2022

லேடி சூப்பர்ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை



 2018ல் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ்க்காக இயக்குகிறார்.

'கோலமாவு கோகிலா'வை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'டாக்டர்' படம் நெல்சனுக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது. பான்டமிக் பாதிப்பில் இருந்து மீள திரையரங்குகள் தள்ளாடிய நிலையில் டாக்டரின் பெரும் ஹிட் அவற்றிற்கு நம்பிக்கையை அளித்தது.

'டாக்டர்' வெளிவரும் முன்னரே விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' பட வாய்ப்பு. தற்போது அது வெளிவரும் முன்னரே ரஜினி, அண்ணாத்தேவிற்கு அடுத்தபடியாக நடிக்கும் படம் என நெல்சனின் கலைப்பயணம் ஏறுமுகமாக இருக்கிறது. 

இன்றைய வைரல், தலைவர்169 பட அறிவிப்பாக வந்திருக்கும் இந்த வீடியோதான்.



குறைந்த விலையில் HP பிரிண்டர்






HP டெஸ்க்ஜெட் 2332 எனும் மாடல் பிரிண்டர் அமேசானில் சலுகை விலையில் விற்பனைக்கு உள்ளது. இதில் கறுப்பு வெள்ளை மற்றும் கலர் ஜெராக்ஸ், பிரின்ட் அவுட் எடுக்கலாம். ஸ்கேனர் வசதியும் உண்டு. வீடு மற்றும் அலுவலக உபயோகத்திற்கு அடக்கமான வடிவத்தில் இருக்கிறது. USB போர்ட் மூலம் டெஸ்க்டாப், லாப்டாப்பில் ஒருங்கிணைக்கலாம். 

அளவு : A4, B5, A6 அளவு காகிதங்கள் DL அளவு என்வெலப் 

கேர்ட்ரிட்ஜ் திறன்  : 100 வண்ண பக்கங்கள் 120 கறுப்பு வெள்ளை  பக்கங்கள் 

வீடு மற்றும் சிறிய அலுவலகத்தில் குறைவான பிரின்டிங் தேவை உள்ளவர்களுக்கான சிறந்த பிரிண்டர்.

Amazon.in இல் ஆர்டர் செய்ய கிளிக் செய்யுங்கள்.



Tuesday, February 8, 2022

ரசிக்க வைக்கும் 'புரோ டாடி'





லூசிபர் எனும் ஆக்ஷன் ஸ்கிரிப்டில் மோகன்லாலை பார்த்து பார்த்து ரசித்து இயக்கி ஹிட் கொடுத்த பிருத்விராஜ், தற்போது அப்படியே ஆப்போசிட் டைரக்ஷனில் ஃபீல் குட், நகைச்சுவை வகையை கையில் எடுத்து புரோ டேடி எனும்  திரைப்படத்தில் மோகன்லாலுடன் தானும் சேர்ந்து லூட்டி அடித்திருக்கிறார்.

சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் தந்தை மகனாக பிருத்விராஜ், மோகன்லால் நடித்துள்ளனர். மீனா, கனிகா ஆகியோரும் உண்டு.

படம் முழுக்கவும் மென் புன்னகையோடு பார்த்து ரசிக்கும் விதத்தில் கதையம்சமும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் மோகன்லாலின் வெட்கப்படுதல், தர்மசங்கடம் போன்ற சின்ன சின்ன பாவனைகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது. 

கவலைகள் மறந்து பார்த்து ரசிக்கலாம்!



Monday, February 7, 2022

ஹுண்டாய் ட்வீட் சர்ச்சை #ViralToday



ஹுண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் டீலர்,  PakistanHyundai எனும் டிவிட்டர் ஐடியில் இருந்து வெளியிட்ட காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய டிவீட் இந்திய டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 

பலரும் தாங்கள் புக் செய்திருந்த ஹுண்டாய் கார்களை ரத்து செய்வதாக இணையத்தில் அறிவிக்க, ஹுண்டாய் நிறுவனம் தற்போது இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஆனாலும் இந்த அறிவிப்பு தெளிவானதாகவும் போதிய அளவில் திருப்திகராமானதாக இல்லையென்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

'பீஸ்ட்' அரபிக் குத்து - தொடரும் மூவர் கூட்டணி


 

'டாக்டர்' பட பாடல்களை யூடியூப்பில் வெளியிடும்போது  சிவாகார்த்தியேன், அனிருத், இயக்குனர் நெல்சன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட சின்ன சின்ன ப்ரமோ வீடியோக்கள் சூப்பர் ஹிட் அடித்தன. 

ஒருவரையொருவர் கிண்டல் செய்தபடி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் இந்த மூவர் காம்போ தற்போது பீஸ்ட் படத்திற்காகவும் ஒரு புரமோ வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். இதில் விஜய்யும் குரல் கொடுத்து கூடுதல் சிறப்பு செய்திருக்கிறார்.

பீஸ்ட் படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள 'அரபிக் குத்து' பர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படுகிறது. இதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோதான் இன்றைய ரகளை வைரல் ஹிட்.





Thursday, February 3, 2022

நங்கநல்லூர் விஜயம்

 சிறு வயதில் அப்பா அடிக்கடி அழைத்துச் செல்லும் இடம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில். ஆன்மிக புரிதல்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நமக்கு கிடைக்கும் குடும்ப சுற்றுலா வாய்ப்பு என்கிற வகையில் அது ஒரு இனிய அனுபவமாகவே இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்கல் வரை ரயில் பயணம். அதன் பின்னர் நங்கநல்லூர் வீதிகளில் நடை பயணம். ஆட்டோல போலாமா என்பதெல்லாம் அபச்சார சொல். அப்பா ஐம்பது மீட்டர் வேகமாக நடக்க அம்மா, அக்கா, அண்ணன் நான் அனைவரும் பேசி சிரித்தபடி பொறுமையாக பின் தொடர்வோம். நாங்கள் பேசி சிரிக்க சிரிக்க அப்பாவின் வேகமும் கூடும்.

இப்போது ஆலயத்தை நினைத்தாலும் ஞாபகம் வருவது விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையும், தரிசனம் முடித்து திரும்புபவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தான்.  பல சமயங்களில் படைக்கப்பட்ட வடை மாலையில் இருக்கும் வடை நமக்கு வழங்கப்படும். காரமாக மிளகு மற்றும் ஏதேதோ போட்டு கரமுர என அருமையாக இருக்கும்

பல வருடங்களாக போகாத நிலையில் சில நாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பன் பிரசன்னாவுடன் கொளத்தூரில் இருந்து நங்கநல்லூர் புறப்பட்டோம்.

சின்ன வயதில் அப்பா வேகமாக முன் நடக்க அவரை பின் தொடர்ந்து செல்வோம். சில சமயம் இடப்புறம் திரும்பினாரா வலப்புறம் திரும்பினாரா என குழம்பி நிற்போம். இப்பொழுது கூகுள் கண்மணி காதில்  இப்படி திரும்பு அப்படி திரும்பு என சொல்லிக் கொண்டே வந்ததால் 45 நிமிடத்தில் ஆலயத்தை அடைந்தோம்.






சிறு வயது நினைவுகள் சிலிர்ப்பாய் எழுந்தன.  தரிசனம் முடித்து திரும்புகையில்  பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வடை சுவை நாவில்  நாட்டியமாட எங்காவது கவுன்டர் சேல்ஸ் இருக்கிறதா என தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.

பல வருடங்கள் கழித்து ஆஞ்சநேயரிடம் அட்டென்டென்ஸ் போட்ட திருப்தியில் திரும்பினேன்.

மறுநாள் நடந்ததுதான் அதிசயம். 'நேற்று நீ என்னை பார்க்க வந்திருந்தல்ல.. இன்னைக்கு உன்னை நான் பார்க்க வர்றேன்' என்பது போல திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு வந்து நின்றார் ஆஞ்சநேயர்!