Wednesday, March 9, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 09 03 11





உலகக்கோப்பை 

அயர்லாந்துடன் இருநூத்தி சொச்சம் ரன்களை எடுக்க தோனியும், யுவியும் லொட்டு தட்டிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதை பார்க்க பாவமாய் வந்தது. இதுவும் கடைசியில் சொதப்பி விடுமோ என பயந்து கொண்டே இருக்கையில் நல்ல வேளையாக தோனி அபீட் ஆகி யூசுப் பதான் வந்து ரெண்டு காட்டு காட்டி சுபம் போட்டு வைத்தார்.

 நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தின் ஆட்டம் செம கிளாஸ்.இந்தியா ஜெயிப்பதை விட பாகிஸ்தான் தோற்பதை பார்க்கும்பொழுது ஒரு குரூர சந்தோஷம் வருகிறதே. அப்போ நான் நல்லவனா கெட்டவனா சார்?



அம்மாவுக்கு பதிவர்கள் தேவை


ஸ்பெக்ட்ரம் போன்ற அல்வா சாப்பிடுவது மாதிரியான காரணங்களை ஆளுங்கட்சிக்கு எதிராக ஜெயலலிதா சரியாக உபயோகிக்க தவறுகிறார் என்றே எனக்கு தோன்றுகிறது. "மாதம் ஒரு ரூபாய் சம்பளமாம் நூறு கோடியில் திருமணமாம்" என 96 தேர்தலின்போது கலக்கலான கார்ட்டூன் போஸ்டர்கள் அடித்து தி.மு.க. ஓட்டு மார்கெட்டிங் பண்ணியது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. இவர் என்னவென்றால் இன்னமும் முன்தினம் பரீட்சைக்கு படிக்கும் சராசரி மாணவன் போல் மக் அடித்து மறுநாள் மைக் முன் ஒப்பிக்கிறார்.


முதல்ல உங்க அறிக்கை எழுத்தாளரை வேலையை விட்டு தூக்கிட்டு யாராவது ரெண்டு தமிழ் பிளாக்கரை அந்த வேலையில வையுங்க மேடம். அப்புறம் பாருங்க.. ரத்தத்தின் ரத்தங்கள் போஸ்டர்ல போடுற மாதிரி நீங்க நிரந்தர முதல்வர் ஆகுற அளவுக்கு எழுதி கலக்கிடுவாங்க..



திருமா சார்.. டீ இன்னும் வரலை

நம்ம திருமா சார் பார்த்தீங்கன்னா நாலஞ்சு வருஷமா எல்லா விளம்பரத்துலேயும் 2011 விடுதலை சிறுத்தைகள் ஆண்டுன்னு பெரிசு பெரிசா போட்டுக்கிட்டு இருந்தாரு. இதுல எனக்கு என்ன வருத்தம்னா, எங்க தெரு முனையில கறிக்கடை வச்சிருக்கிற பாய் கூட வருஷா வருஷம் காலண்டர் போட்டு தெரு முழுக்க கொடுப்பாரு, ஆனா பாருங்க நம்ம திருமா சார் 2011 ஆண்டை குத்தகை எடுத்து வச்கிக்கிட்டு ஒரு பயலுக்கு கூட காலண்டர் கொடுக்கலை. சரி போகுது.. அவராவது பொழைச்சிட்டு போறாருன்னு பார்த்தா.. கடைசியில வெறும் பத்தே பத்து சீட்டு.. அட போங்கய்யா... இதுக்குதானா இம்புட்டு விளம்பரம் பண்ணீங்க...?





ருசித்ததும் ரசித்ததும்





யிப்பி நூடுல்ஸ் என்று ஒரு புதிய நூடுல்ஸ்.  ஒட்டவே ஒட்டாது என்கிற விளம்பரத்துடன் வந்ததால் நூடுல்ஸ் பிரியனான நான் முயற்சி செய்து பார்க்கலாம் என வாங்கினேன். விளம்பரம் போலவே ஒட்டாமல் வழு வழுவென இருக்கிறது. ஆனால் சிசுவிலிருந்தே மேகி மசாலாவிற்கும் கூடவே டீன் ஏஜ் முதல் டாப் ரேமன் டேஸ்ட்டிற்கும் பழகிப்போன நாக்கிற்கு இந்த மசாலா சுவை மட்டும் மனதில் ஒட்ட மறுக்கிறது. மசாலா சுவையினை மேம்படுத்தினார்கள் எனில் யிப்பி நூடுல்ஸ்க்கு சுவையான எதிர்காலம் இருக்கிறது.




ஆக்ட் டூ பாப்கார்ன். விலை ஐந்தே ரூபாய்தான். குக்கரில் போட்டு மூடியை முழுவதுமாக மூடாமல் இளந்தீயில் வைத்தால் இரண்டே நிமிடங்களில் சூடான சுவையான பாப்கார்ன் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். குறைவான விலையில் தரமான நிறைவான படைப்பு.

 இதே அளவு பாப்கார்னை மால்களில் 60 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருப்பதை நினைத்தால்தான் செம கடுப்பாக இருக்கிறது.



முப்பதே வினாடிகளில் தங்கமணியை சமாளிக்க

"ஏங்க.. நாம ஃபிரண்டா இருந்த போதும், லவ் பண்ணும்போதும், இப்போ கல்யாணம் ஆன பின்னாடியும் கூட இப்படி பைக்ல போகும்போது போற வர பொண்ணுங்களை திரும்பி திரும்பி பார்த்து என் மானத்தை வாங்குறீங்களே.. நீங்க திருந்தவே மாட்டீங்களா...?"

"ஹே.. நான் என்ன ஆசைப்பட்டா பார்க்கிறேன்.. ஒரு பொண்ணாவது உலகத்துல உன்னை விட அழகாயிருக்கான்னு நானும் அன்னையிலிருந்து இன்னிக்கு வரைக்கும் பார்க்குறேன்.. ஹும் ஹும் இல்லவே இல்லையே...."


14 comments:

THOPPITHOPPI said...

//முதல்ல உங்க அறிக்கை எழுத்தாளரை வேலையை விட்டு தூக்கிட்டு யாராவது ரெண்டு தமிழ் பிளாக்கரை அந்த வேலையில வையுங்க மேடம். //

அருமை

CS. Mohan Kumar said...

ப்ளாகர்கள் மேலே அப்படி என்ன கோபம்?

Chitra said...

"ஏங்க.. நாம ஃபிரண்டா இருந்த போதும், லவ் பண்ணும்போதும், இப்போ கல்யாணம் ஆன பின்னாடியும் கூட இப்படி பைக்ல போகும்போது போற வர பொண்ணுங்களை திரும்பி திரும்பி பார்த்து என் மானத்தை வாங்குறீங்களே.. நீங்க திருந்தவே மாட்டீங்களா...?"

"ஹே.. நான் என்ன ஆசைப்பட்டா பார்க்கிறேன்.. ஒரு பொண்ணாவது உலகத்துல உன்னை விட அழகாயிருக்கான்னு நானும் அன்னையிலிருந்து இன்னிக்கு வரைக்கும் பார்க்குறேன்.. ஹும் ஹும் இல்லவே இல்லையே...."


.....சமாளிச்சிஃபையிங் of இந்தியாவே இருக்கே.... கலக்கல் பதில்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Sukumar said...

THOPPITHOPPI said...
//முதல்ல உங்க அறிக்கை எழுத்தாளரை வேலையை விட்டு தூக்கிட்டு யாராவது ரெண்டு தமிழ் பிளாக்கரை அந்த வேலையில வையுங்க மேடம். //

அருமை

-----> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Sukumar said...

// ப்ளாகர்கள் மேலே அப்படி என்ன கோபம் //

எவ்வளவு நாள்தான் பாஸ் வேலை செய்யாத ஆட் சென்ஸை பார்த்துக்கிட்டே நாமளும் சும்மா இருக்கிறது... முதல்வர், பிரதமர், அமெரிக்க ஜனாதிபதின்னு நாமளும் முன்னேற வேணாமா....

Sukumar said...

// சமாளிச்சிஃபையிங் of இந்தியாவே இருக்கே.... கலக்கல் பதில்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

ஹி..ஹி..ஏதோ நமக்கு தெரிஞ்சது.. நாலு பேருக்கு யூஸ் ஆகட்டுமேன்னுதான்....

DR said...

சைட் அடிக்கிறதுக்கு இப்புடி ஒரு பதிலா ?

அதை அவங்க நம்பிட்டாலும்...

Sukumar said...

// சைட் அடிக்கிறதுக்கு இப்புடி ஒரு பதிலா ?

அதை அவங்க நம்பிட்டாலும்... //

ஹா.. ஹா.. கண்டிப்பா நம்ப மாட்டாங்க தினேஷ்... ஆனாலும் நாம பண்ற தப்புக்கு சின்ன லஞ்சம் கொடுக்கிற மாதிரி இந்த 'ஐஸ்' கொஞ்சம் வேலை செய்யும்....

Unknown said...

ஒரு பொண்ணாவது உலகத்துல உன்னை விட அழகாயிருக்கான்னு நானும் அன்னையிலிருந்து இன்னிக்கு வரைக்கும் பார்க்குறேன்.. ஹும் ஹும் இல்லவே இல்லையே...."//

ஆகா...... கலக்கீட்டீங்க இப்படி வேற இருக்கா.

Chittoor Murugesan said...

//யாராவது ரெண்டு தமிழ் பிளாக்கரை அந்த வேலையில வையுங்க மேடம். அப்புறம் பாருங்க//

ப்ளாகர்களை வச்சு காமெடி கீமிடி பண்ணலியே

சாருஸ்ரீராஜ் said...

அருமை , கடைசி தங்கமணி ஜோக் உங்கள் சொந்த அனுபவமோ.

Sukumar said...

// ஆகா...... கலக்கீட்டீங்க இப்படி வேற இருக்கா //

ஹி..ஹி... இன்னும் இருக்கு சார்.... நன்றி வருகைக்கு..

Sukumar said...

// ப்ளாகர்களை வச்சு காமெடி கீமிடி பண்ணலியே //

சத்தியமா இல்ல பாஸ்... பிளாக்கர்களோட திறமையைத்தான் அப்படி சொன்னேன்...

Sukumar said...

// அருமை , கடைசி தங்கமணி ஜோக் உங்கள் சொந்த அனுபவமோ. //

ஹி..ஹி.. ஆமாங்க மேடம்..

91 club