Thursday, August 27, 2009

கேப்டனை கருப்பு நம்பியார் ஆக்கிய பதிவர்கள் - பேனர் பரிசு போட்டி முடிவு


கடந்த பதிவில் கேப்டன் லேப் டாப்போட உக்காந்திருக்கிற படத்தை கொடுத்து நண்பர்களின் கமெண்டை கேட்டிருந்தேன்... அப்பப்பா.... சும்மா எழுதி குவிச்சிட்டாங்க.. கேப்டன் மட்டும் படிச்சிருந்தாருன்னா கருப்பு நம்பியாரா மாறி கடுப்பாயிருப்பாரு.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிங்க.. ஒவ்வொருத்தர் கமெண்டும் தனித்தன்மையா அவங்கவங்க ஸ்டைலில் இருக்கு....... அதில வழக்கம் போல பட்டுன்னு சிரிப்பு வர்ற ஆறு கமெண்டை கொடுத்திருக்கேன்... அவங்களுக்கு வாழ்த்துக்கள்...!
சொன்னபடி அவங்களுக்கான பரிசா அவங்கவங்க வலைபூவிற்க்கான டைட்டில் பேனர் டிசைன் மின் அஞ்சலில் அனுப்பிட்டேன்.... பேனரில் ஏதாவது சொற்குற்றம், பொருள் குற்றம், கலர் குற்றம் இருந்தாலோ அல்லது வேறு எந்த வகையான மாற்றங்கள், அடிஷன், சப்ராக்ஷன், டெலிஷன் தேவைப்பட்டோலோ தயங்காமல் [email protected] என்கிற எனது மின்னஞ்சல் முகவரியில் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமாக பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மறுபடியும் என் நன்றியோ நன்றிங்க........!








_______________________________________________






_______________________________________________





_______________________________________________





_______________________________________________





_______________________________________________





// கமெண்டுகள் யாவும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்த அல்ல....//

Saturday, August 22, 2009

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி விஜயகாந்த்
















என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் சின்னங்களில் குத்துங்க சாமி குத்துங்க.....!!!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....!!!!

Wednesday, August 19, 2009

சேரனுக்கு ஒரு ரசிகனின் மின்னஞ்சல்

அன்புள்ள லெனின் என்கிற சேரன் அவர்களுக்கு...
தினமும் படுத்தி எடுக்கும் ஆபிசை கட் அடித்து ஒரு இனிய காலை பொழுதில் பொக்கிஷம் பார்க்க போனேன். அதற்கு நீ ஆபிசுக்கே போய் இருக்கலாம் என இதை படிக்கும் பதிவு உலக நண்பர்கள் பின்னூட்டம் இடக்கூடும். ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன் . ஏன் எனில் இந்த படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களையும் மீறி உங்கள் முகத்துக்காக மட்டுமே பொக்கிஷம் பார்க்க போனேன். ஆனால் உங்கள் முகமே பொக்கிஷம் படத்திற்கு பெரிய எதிர்மறை விஷயமாகி விட்டிருக்கிறது என்பதை உங்கள் ரசிகனாய் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஏன் மாய கண்ணாடியில் கூட பளிச்சென்று இருந்த நீங்களா அது....? கடைசி வரை வயதான சேரனை காட்டவே இல்லையே என படம் பார்க்க வந்திருந்த என் நண்பனிடம் கேட்டேன். அப்ப படத்துல வந்த சேரன் மட்டும் எப்படி இருந்தாராம் என கமெண்ட் அடித்தான். உங்கள் ரசிகர்களிடமிருந்தே இவ்வாறு கேட்டபது கஷ்டமாய் இருந்தாலும் உங்களின் உண்மையான ரசிகர்களின் விருப்பம் / நலன் கருதி அடுத்த படத்திலாவது வேறு ஹீரோவிற்கு பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.
யாரும் யோசித்திராத களங்களில் சிந்தனைகளை சொல்லி தமிழ் திரையுலகில் நீங்கள் தனி இடம் பெற்று விட்டதனால் இன்றும் உங்களுக்கு பெரிய ஒபெனிங் இருக்கிறது. மாய கண்ணாடி தோற்ற நிலையில் இந்த கதையின் மேல் நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்து எவ்வளவவு பீல் பண்ணி இந்த படத்தை எடுத்திருக்கிறீர்கள் என தெரிகிறது.
பொதுவாக உங்கள் படங்களில் பீலிங்க்ஸ் பயங்கரமாய் இருக்கும். பாரதி கண்ணமாவில் பார்த்திபன் எரியும் சிதையை நோக்கி ஓடும்போதும், பொற்காலத்தில் முரளியின் திருமணம் போதும், ஆட்டோகிராப்பில் மாலையுடன் படகில் செல்லும் கோபிகாவை மயக்கத்தில் நீங்கள் பார்க்கும் போதும் சுவாசிக்க முடியாமல் தவித்திருக்கிறேன். ஆனால் உங்களின் மற்ற படங்களை விட இந்த படத்தில் பீலிங்க்ஸ் அதி பயங்கரமாய் இருக்கிறது. படம் பார்க்கும் எங்களை தவிர திரையில் எல்லா காட்சியிலும் லெனின், நதீரா, தந்தை, மகன், நண்பன் என அனைத்து கதா பாத்திரங்களும் ஆளாளுக்கு பீல் பண்ணி கொண்டே இருக்கிறார்கள். இது போதாதென்று கடைசியில் வரும் லெனினின் மனைவி ரொம்ப ஓவராய் பீல் பண்ணுகிறார். ஆளாளுக்கு பீல் பண்ணுவது படம் எப்ப முடியுமோ என எனக்கு ரொம்ப பீலிங்க்ஸ் ஆகி விட்டது.
அந்த காலத்து கடித போக்குவரத்தின் காத்திருத்தலையும் தவிப்பையும் இன்றைய இளைய தலைமுறைக்கு சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். அதற்காக படம் முழுவதும் கடிதம் எழுதுவதும் அதை வரி விடாமல் முழுவதும் படித்து காட்டுவதும் நதிராவிடமிருந்து கடிதம் வரவில்லை என அடிக்கடி நீங்கள் தவிப்பதுமாய் திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சிகளினால் கவனம் சிதறி தூரத்து சீட்டில் கற கற மொற மொற வென யாரோ வீல் சிப்ஸ் கடித்து கொண்டிருந்த்தின் மேல் எனக்கு கவனம் சென்று செம கடுப்பாகி விட்டது.
எல்லாவற்றையும் மீறி குறையே சொல்ல முடியாத ஓளிப்பதிவு, ஒலி சேர்க்கை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், லோகஷன்ஸ் என உங்கள் ப்ரெசென்ட்டேஷன் தியேட்டரை விட்டு எழுந்து போக விடாமல் தடுக்கிறது.
ஒருவேளை தப்பி தவறி இந்த மின்னஞ்சல் உங்கள் கண்ணில் பட்டு தொலைந்தால் நீங்கள் புண் பட கூடும். நீங்கள் இது போன்ற வார்த்தைகளை ஏற்று கொள்ள சிரம படுவீர்கள் என எனக்கு தெரியும். மாய கண்ணாடி தோல்வி அடைந்த நிலையிலே தினமும் விளம்பரம் கொடுத்தீர்கள்... நாங்கள் சொல்ல வந்ததை நீங்கள் சரியாய் புரிந்து கொண்டீர்களா என எழுதி அனுப்புங்கள்... பரிசு கொடுப்போம் என அறிவித்தீர்கள்... சார்.. எங்களுக்கு சரியாய் புரிந்ததால்தானே அந்த படமே பிடிக்காமல் போனது ....எது எடுத்தாலும் எங்களுக்கு பிடிக்க வேண்டும் என்கிற அளவிற்கு நீங்கள் யோசிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஆட்டோகிராப் படத்தினால் எங்களை பீலிங்க்ஸ் ஆக்கினீர்கள். எங்களால் மறக்க முடியாதுதான். அதற்காக இனியும் உங்களிடம் மக்களை பீலிங்ஸ் ஆக்கி அழ வைக்க வேண்டும் என்கிற கதைகள் இருந்தால் தயவு செய்து கொஞ்ச நாள் அவைகளை ஏதாவது பெட்டியில் வைத்து பூட்டி பொக்கிஷம் ஆக்கிடுங்க பாஸ்... உங்க லெவலே வேற... எங்களின் சிந்தனையை ஹேக் செய்து பத்து பதினைந்து நாட்கள் தவிக்க வைக்கும் அளவிற்கு உங்களால் கதை சொல்ல முடியும். பாத்து பண்ணுங்க பாஸ்...

- உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகன்

Tuesday, August 4, 2009

விருது விருது வருது வருது ...!!!!

பதிவுலகில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அங்க சுத்தி இங்க சுத்தி எனக்கும் வந்திடிச்சி....
பதிவர் கலக்கல் கலையும் பதிவர் குடந்தை அன்புமணியும் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்த விருதினை அண்ணன் எம்.எஸ்.வி.முத்து
அவர்களுக்கு வழங்குகிறேன்.





நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து
கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது
போலவே இருக்கும். நேரில் பார்ப தற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பரிசு இந்த சுவாரஸ்ய வலை பூ விருது..



___________________________________________________________________________

"இந்த பதிவர் என் சிறந்த நண்பர்"
எனும் விருதினை
அவர்களும்
அவர்களும்
கொடுத்திருக்கிறார்கள் ...
இருவருக்கும்
என் நன்றிகள்....
அந்த விருதினை
தல கேபிள் சங்கருக்கு
அளிக்கிறேன்......






தல கேபிள் சாருக்கு அறிமுகம் கொடுத்தா அது சன் டி.வி.க்கே விளம்பரம் போட்ட மாதிரி ஆயிரும். அதனால டக்குனு சொல்றேன்.
அப்ப நான் புதிய பதிவர் ( டேய் இப்பவும் நீ புதுசுதாண்டா...) இந்த திரட்டி மேட்டர்
எல்லாம் தெரியாது. நானே பதிவு போட்டு நானே படிச்சிக்குவேன். இப்படியே பதிவுலக வாழ்க்கை நிம்மதியா போய் கிட்டிருக்கும்போது ஒரு நாள் தெரியா தனமா ஆனந்த தாண்டவம் படம் பாத்து தொலைச்சிட்டேன். இந்த மாதிரி மொக்கை படம் ரிலீஸ் ஆகுற மோசமான உலகத்துல நாம ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்.
சரி நம்மள மாதிரியே யாரவது ஆனந்த தாண்டவம் பாத்துட்டு குத்துயிரும் கொல உயிருமாய் இருக்காங்களான்னு கூகிள் ஆண்டவரை கேட்டபோது கிடைத்த பூ தான் கேபிள் சங்கர் வலை பூ. ஒரு மொக்கை படம் பாத்தாலே பி.பி. ஏறுகிற நிலையில இவர் என்னடானா போஸ்டர் கூட ஓட்ட பணமில்லாத பட்ஜெட் படங்களை எல்லாம் தேடி பாத்து விமர்சனம் எழுதி இருந்தாரு... ஏண்ணே இப்படின்னு கேட்டா அவருக்கு இதேதான் ஹாபியாம். இவ்ளோ நல்லவரா இருக்காரேன்னு தொடர்ந்து அவரது வலைபூவை படிக்க ஆரம்பிச்சேன்.
பதிவுலக மக்கள் தொகை விழிப்புணர்ச்சி, பின்னூட்டங்கள், திரட்டி, லிங்க் , இன்ன பிற விஷயங்கள் எல்லாம் அவரை பார்த்து அறிந்ததுதான். ஏதாவது சந்தேகம் என்றால் எப்போது போன் செய்தாலும் விளக்கி சொல்வார். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் புதுசு பழசு என பார்க்க மாட்டார். இப்படியாகப்பட்ட அண்ணன் கேபிள் சங்கருக்கு நண்பர் பதிவர் விருது கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ...!
(இதான் உங்க டக்கா...?)

_________________________________________________________________________

அடுத்ததா பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்காரு பதிவர் சுபாங்கன். பல வலைகளில் இந்த பட்டாம்பூச்சி விருதினை பார்த்திருக்கிறேன். எனக்கும் அது கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அவருக்கு என் நன்றி.
இந்த பட்டாம்பூச்சி விருதை
பதிவர் வழிபோக்கன் அவர்களுக்கும்
பதிவர் ஸ்வர்ணரேகா அவர்களுக்கும்
அளிப்பதில் நிறைவான மகிழ்ச்சி அடைகிறேன்.....!
__________________________________________________________________________

ஒரு வழியா விருதுகள் கொடுத்தாச்சு.... இந்த நேரத்தில் அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் பொன் மொழியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்....

"இனி எனக்கு விருது தர இருக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...இனி விருதுக்குப் பதிலாக பொற்கிழியோ அல்லது பணமுடிப்போ தந்தால் இன்னும் மகிழ்வேன்."

ரைட்டு....! வரட்டா .... நெக்ஸ்ட் மீட் பண்றேன்....!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club