Saturday, June 27, 2009

பள்ளிக்கூடம் போகலாமா ?

இந்த தொடர் பதிவுக்கு அண்ணன் திரு.முரளிக்கண்ணன் அவர்கள் என்னை அழைத்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பதிவுலகில் பிரபலமான அவர் என்னை போன்ற புது முகத்திற்கு ஒரு அறிமுகம் கொடுத்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அதே சமயம் இவ்வளவ்வு நீளமாய் நான் பதிவு எழுதுவது இதுவே முதல் முறை ஆதலால் பயமாகவும் இருந்தது. என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். உங்களது விமர்சனங்களை சொல்லுங்கள்.
_______________________________________________________________


என் கையை பத்திரமா பிடிச்சுக்கோங்க...

ஜூட்டா... எங்க பள்ளிக்கூடம் போகலாமா ?

அட்மிஷன்

என் அம்மாதான் என்னை முதல் நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றிருந்தார். அது இருபாலரும் பயிலும் மெட்ரிகுலேசன் பள்ளி. நான் ஐந்தாவது வரை அங்குதான் படித்தேன். பள்ளி என்றால் என்னவென்று அறியாத நிலையில்.. எதிலோ கொண்டு தள்ளுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. இனம் புரியாத ஏக்கமும் உள்ளுக்குள் காரணம் இல்லாத அழுகையுமாய் அங்கு சேர்ந்த முதல் நாள் லேசாய் இன்னும் ஞாபகம் இருக்கிறது. .


உணவு


நான், எனது இரண்டு சகோதரிகள், ஒரு அண்ணன் ஆகிய நால்வரும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகள் படித்ததால் அம்மா ஒன்றாக அனைவருக்கும் மதிய சாப்பாடு கொண்டு வருவார்கள். வட்டமாய் அமர்ந்து சாப்பிடுவோம்.

'நான் சாதித்தேன்' என்பதற்கு அடையாளமாய் பெருந்தலைவர்கள் எதையாவது விட்டு செல்வதை போல லன்ச் முடிந்து செல்லும் போது 'நான் சாப்பிட்டேன்' என்பதற்கு அடையாளமாய் என் டிபன் பாக்சை சுற்றி உணவு பருக்கைகளை விட்டு சென்றிருப்பேன். உணவை கீழே சிந்தாமல் சாப்பிடுவதும் உள்ளங்கையில் சோறு ஒட்டாமல் சாபிடுவதும் கணக்கு பாடத்திற்கு ஈடாய் பெரும் சவாலாய் எனக்கு விளங்கியது.


நண்பன்

அணிஷ் ! எல்.கே.ஜியில் ஆரம்பித்து இன்று வரை தொடர்பிலிருக்கும் உயிர் நண்பன். அப்போதெல்லாம் எது சொன்னாலும் நம்பி விடும் அப்பாவி. ( இப்ப கொஞ்சம் அடப்ப்ப்பாவி ரேஞ்சுக்கு வந்துவிட்டான் அது வேற விஷயம்)
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது கதை பேசியபடி நடந்து வருவோம். . மிளகாய் தூளில் பிரட்டிய மாங்காய் துண்டு, உப்பு போட்ட அரை நெல்லிக்காய், புளிப்பான கலா காய், கொய்யா, எல்லாமே ஸ்பான்சர் செய்வது அணிஷ்தான்.


அவனது சொந்த ஊர் கேரளா என்பதால் அவனுக்கு மலையாள நடிகர்களை கிண்டல் செய்தால் பொறுக்காது. நமக்குதான் யாருக்கு எது பொறுக்காது என நோட் பண்ணி கிண்டல் செய்வதென்றால் சூடாக சுண்டல் சாப்பிடுவது போல் ஆயிற்றே. ஒருநாள் அவனிடம் பிரபல மலையாள நடிகர் ஒருவர் புட்பால் விளையாடும் பொழுது அடிபட்டு ஆஸ்பத்திரியில்
இருக்கார் என க்ரூப்பாய் கிளப்பி விட்டோம். எதேச்சையாய் மாலையில் அவன் வீட்டுக்கு சென்ற போது அந்த செய்தி எதிலாவது வந்திருக்கிறதா என அன்றைய மலையாள தினசரிகளையும் மாலை இதழ்களையும் கலைத்து போட்டு வீடே நாலஞ்சு பேர் கதக்களி ஆடினாற்போல் கலகலத்து இருந்தது. அவன் நம்பியது மட்டுமலாமல் வீட்டினரையும் நம்ப வைத்திருந்தான்.

இன்று அவனை பார்த்தாலும் "டேய் உங்காளுக்கு அடியாம்டா" என கலாய்ப்பேன். ஆனால் அவனோ அன்று போல் அப்படியா என நம்பாமல் இன்று சிரித்துக்கொண்டே அவ்வளவாய் பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்மால் சைஸ் கெட்ட வார்த்தையால் திட்டுகிறான்.

போட்டி


நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது அப்போதைய தூர்தர்ஷன் புகழ் நல்ல தம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக ஆண்டு விழாவிற்கு வருவதாய் அறிவிப்பு.


அவர் கையால் ஏதாவது பரிசு வாங்கி விட வேண்டுமென்று பேச்சு போட்டி, பட்டிமன்றம், கவிதை, கன்றாவி என என்னென்ன போட்டிகள் வைத்தார்களோ அத்தனையிலும் புகுந்தேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு வடை சுட முயற்சித்தாலும் அங்க நம்ம பருப்பு வெந்தாதானே.. ஹூம்... ஒன்னு கூட வேகலை.


தோத்துடுவோம் என தெரிந்தும் கேப்டன் தனியாய் நிற்பது போல் என்ன போட்டி என தெரியாமலே பல போட்டிகளில் நின்று பார்வையாளர்களை நோகடித்தேன். ஒரு கட்டத்தில் போட்டி அமைப்பாளர்கள் என்னை பார்த்து பார்த்து கடுப்பாகி இவனுக்கு பரிசு கொடுக்கிற வரைக்கும் நிறுத்த மாட்டான் போலிருக்கு என அவசர ஆலோசனை ஏதாவது செய்திருக்க கூடும்.. கடைசியாய் பாட்டு போட்டியும் வைத்தார்கள். எவ்வளவோ போட்டிகளை பாத்தாச்சு. பாட்டு போட்டியையும் ஒரு பாடாய் படுத்திவிடுவோம் என ஒரு பாட்டை உளறி வைத்தேன்.


மறுநாள் போட்டி முடிவுகளை பார்த்தால் எனக்கு பாட்டு போட்டியில் இரண்டாம் பரிசு. முதல் பரிசு வாங்கிய மாணவி 'நல்ல வித்துவான்' ரேஞ்சுக்கு பாடியிருந்தாள். இரண்டாம் பரிசை இவன் 'நல்ல கத்துவான்' என எனக்கு கொடுத்தார்களோ என்னவோ... எது எப்படியோ நாங்களும் நல்ல தம்பி சார் கையில பரிசு வாங்கிடோம்முல... போடுறா பட்டாசை....

டீச்சர்

என்னை பாதித்த முதல் ஆசிரியர் ராதிகா டீச்சர்தான். போட்டிகள் என்றாலும் படிப்பு என்றாலும் எல்லாரையும் நல்ல உற்சாகப்படுத்துவார்.
ஜே.கே.ரித்தீஷ் படத்தை சிரிக்காமல் சீரியஸ் ஆக பார்ப்பது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் எனக்கு ஒரு வகுப்பு முழுவதும் தொடர்ந்து பேசாமல் உட்காருவது.

அதனால் நாங்கள் நாலைந்து பேர் அடிக்கடி 'ஒன் வருது மிஸ்' என 'எஸ்' ஆயிடுவோம். பள்ளியில் தடை செய்யப்பட்ட ரஜினி, கமல் போட்டோக்களை பரிமாற்றம் செய்வது , சினிமா ஒளியும் ஒலியும் குறித்து கலந்துரையாடல்கள் செய்வது என பல இதர பதற வேலைகளை முடித்து பொறுமையாக தாயகம் திரும்புவோம். இதனால் கடுப்படைந்த ராதிகா டீச்சர் ஒன் பாத்ரூம் வந்தால் ஒவ்வோவோருவராய் தான் போக வேண்டும் என கடும் சட்டம் வைத்திருந்தார்.

ஒருநாள் இந்த விதியின் படி 'ஒன்' போக அனுமதி மறுக்கப்பட்ட ஒருவன் இந்த சட்டத்தை உடைக்க திட்டம் போட்டு செய்தானோ அல்லது நிஜமாகவே முடியாமல் செய்தானோ... பண்டைய பூமி பிரிந்து கண்டம் கண்டமாக சிதறியது போல்... வகுப்பினையே கண்டமாக்கி எல்லாரையும் சிதறடித்துவிட்டான். அவனது இந்த அதிரடி தாக்குதலால் நிலை குலைந்து போன ராதிகா டீச்சர் அந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்றார்.

அட்மிஷன்

இத்தொடர்பதிவின் நிபந்தனைப்படி தொடக்ககல்வி வாழ்க்கையோடு முடிக்க வேண்டியிருப்பதால் என் ஐந்தாம் வகுப்பு நினைவுகளோடு முடித்து கொள்கிறேன்.
என்னை ஆறாம் வகுப்பில் வேறொரு பள்ளியில் சேர்க்க என் அப்பா அழைத்து சென்றிருந்தார். எல்.கே.ஜி வகுப்பு சேர்க்கும் போது இனம் புரியாத ஏக்கத்துடன் அழுகை வந்தது போல் இப்போதும் பலமாய் அழுகை வந்தது.
ஆனால் இம்முறை அழுவதற்கு வலுவான காரணம் இருந்தது. இருபாலர் படிக்கும் படிக்கும் பள்ளியில் இருந்து விலக்கி வெறும் பசங்க மட்டுமே படிக்கும் ஒரு பாலர் பள்ளியில் என்னை வில்லத்தனமாய் என் அப்பா தள்ளினார். (அப்பாக்கள் எல்லாம் வெவரமா தான் இருக்காங்க )

என் திருவிளையாடல்களையும் வீர பராக்கிரமங்களையும் பிரயோகிக்க சரியான களம் அமையவில்லை என்ற தாளாத துயரோடு ஆறாம் வகுப்பு நோக்கி சென்றேன். !


______________________________________________________________
இந்த பதிவை தொடர
உலக சினிமா திரு. வண்ணத்துபூச்சியார் அவர்களையும்
குமரன் குடில் திரு.சரவணகுமரன் அவர்களையும்
கலக்கல் கலை அலையஸ் திரு.கலையரசன் அவர்களையும்
அன்போடு அழைக்கிறேன். !!!

Tuesday, June 23, 2009

இந்தியன் கிரிகெட் அணியின் லேட்டஸ்ட் பயோடேட்டா

/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */















































என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!Welcome to Valaimanai Tamil Blog by Sukumar Swaminathan. Full of fun comments on IPL Cricket stills, Tamil cinema cricket stills, ICC world T20 cricket stills Fun comments, Twenty20 fun comments by Valaimanai blogspot.Tags : kolkataa knight riders, chennai super kings, delhi daredevils, rajasthan royals, kings xi punjab, bangalore royal challengers, dhonis men, india, netherland, srilanka, scotland, england, southafrica, pakistan, australia, newzealand, westindies, bangladesh, twenty twenty world cup, 20 20 world cup in england cricket grounds, tickets, booking



Tuesday, June 16, 2009

ஐ.பி.எல் போட்டிக்கும் ஐ.சி.சி. போட்டிக்கும் ஆறு வித்யாசங்கள்

/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */

















என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

Saturday, June 13, 2009

ஹிஸ்டரி ரிபீட் ஆகுமா ? - வலைமனை கற்பனை கலாட்டா

























என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

Thursday, June 11, 2009

நடப்பு சாம்பியனை வெளி நடப்பு சாம்பியன் ஆக்கிடாங்களே...!!






























என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

Tuesday, June 9, 2009

கிரிகெட் கலாட்டா 8 - நண்பர்கள் கமென்ட் !

கடந்த பதிவில் டோனி கையில் கோப்பையுடன் இருக்கும் படத்தை கொடுத்து சக பதிவர்களிடம் கமென்ட் கேட்டிருந்தேன்.... வழக்கம் போல நண்பர்கள் கமென்ட் கொடுத்து கலக்கிட்டாங்க....
ஒவ்வொருத்தர் கமெண்டும் யூனிக்கா தனித்தன்மையோட இருக்கு... அதனால் எதையும் இது சரி இது தப்புன்னு பிரிச்சு பாக்க கூடாது....ஆனாலும் சட்டுன்னு எனக்கு பிடிச்ச இரண்டு கமெண்டை இங்க கொடுத்திருக்கேன்.... மற்ற நண்பர்களது கமெண்டும் ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்குது... ஆர்வமா பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னோட நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... அவங்க பெயரும் வலைபூ முகவரியும் கொடுத்திருக்கேன்...












அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் பல !!!

Sunday, June 7, 2009

நம்ம டீமுக்கு 'அது' மட்டும் ஆகாது... !












































என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

Welcome to Valaimanai Tamil Blog by Sukumar Swaminathan. Full of fun comments on IPL Cricket stills, Tamil cinema cricket stills, ICC world T20 cricket stills Fun comments, Twenty20 fun comments by Valaimanai blogspot.

Tags : kolkataa knight riders, chennai super kings, delhi daredevils, rajasthan royals, kings xi punjab, bangalore royal challengers, dhonis men, india, netherland, srilanka, scotland, england, southafrica, pakistan, australia, newzealand, westindies, bangladesh, twenty twenty world cup, 20 20 world cup in england cricket grounds, tickets, booking

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club