Friday, August 27, 2010

இனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்


Inidhu Inidhu Gallery

கட் அடித்துவிட்டு காலை, மேட்னி காட்சிகளை ஜெக ஜாலியாய் வகுப்பினரோடு கொண்டாட விரும்பும் மாணவர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்வார்கள். இனிது இனிது அவர்களுக்கு ரொம்பும் இனிக்கும்.

படம் படு ஃபிரஷ்ஷாக இருக்கிறது. ஒப்பனை, காட்சியமைப்புகள், லொக்கேஷன், வசனம், ஒளிப்பதிவு, இசை, உடைகள் என கண்ணுக்கும் காதிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான படம். ஒளிப்பதிந்து இயக்கியிருக்கும் குகன் அசத்தியிருக்கிறார்.


Inidhu Inidhu tamil Movie


சித்து (அருண் ஈஸ்வரன்), மது (ரேஷ்மி மேனன்), விமல் (விமல்), அப்பு (பென்னாஸ்), டைசன் (நாராயண்), ஷ்ராவ்ஸ் (சோனியா), ஷங்கர் (சரண் சர்மா)  அனைவரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். ஒருவரும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம்.

அதிலும் என்னுடைய ஃபேவரைட், விமல் மற்றும் டைசன். விமல் பல காமெடியில் சரளமாக பின்னுகிறார். (நல்லா வருவீங்க தம்பி).  அடுத்து டைசன் ஒருவித இன்னொசன்ட்டாக அவர் நடித்திருப்பது ரொம்பவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.


பையா படத்தில் லெப்ட் ஓரமாய் நிற்க வைக்கப்பட்ட சோனியாவிற்கு இதில் நல்ல ரோல். காண்பவர் மனதை பாதிக்கும் அளவிற்கு அவர் அழகு. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எங்கேயோ போய்விடுவார்.

படத்தில் எல்லோரையும் விட ஷ்ராவ்ஸ் என்கிற சோனியாதான் அழகு என்றாலும் கதாநாயகியும் அதிக அலட்டல் இல்லாத அழகாக இருக்கிறார். (லட்டு மாதிரி இருக்காங்க ஆபிசர்).  நமது பக்கத்து கல்லூரி பெண் போல் இருக்கிறார் (எவ்வளவு நாள்தான் பக்கத்து வீட்டு பெண் போல என சொல்வது?)  அதுவும் புடவை கட்டி வரும் காட்சியில் ஆஹா ஓஹோ என ஆளாளுக்கு அழகு அழகு என புகழும்பொழுது நமக்கும் அவர் அழகாய் தெரியும் விதத்தில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, மேக்கப் என கவனித்து செதுக்கியிருப்பது சிறப்பு.  

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களும் சின்ன ரோல்தானே என்றில்லாமல் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக குண்டு சீனியர், பால்பாண்டி, ஆங்கில டீச்சர், எக்ஜட்ரா எக்ஜட்ரா...


அந்த சீனியர் குண்டு பையன் அறிமுக ரேகிங் காட்சிகளில் ஜுனியர் மாணவனை படுத்துவதும், அவனையே கடைசியில் இன்டெர்வியூவில் இங்கிலீஷ்ல ஏதாவது பேசுடா என பேசவைத்து நீ என் காலேஜ் பையன்டா உன்னை எப்படிடா விட்டுக்கொடுப்பேன் என கண்கலங்குவதும் மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார்.

பால்பாண்டி கேரக்டரை அழ விட்டு கேமரா சுத்தும் காட்சியில் மனிதர் சத்தியமாய் உருக்குகிறார். ஆனால் நடுவில் அவர் முன்னேறுவதை போன்ற காட்சிகளை அமைத்து கடைசி இன்டர்வியூவில் தேர்வாவதை காண்பித்திருந்தால் படத்தின் கதைக்கு (?) வலு சேர்திருக்கும்.

இவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் கொஞ்சம் கூட சொதப்பாமல்  நடித்திருப்பது சிறப்பு. ஆனால் என்னதான் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கதை திரைக்கதை ஏதாவது மருந்துக்காவது இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Inidhu Inidhu Gallery


இனிது இனிது. பாசிட்டிவ்வான படம். அதுக்காக ரொம்பவும் பாசிட்டிவ்வாக சில காட்சிகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

முதல் நாள் கல்லூரி அறிமுக நிகழ்ச்சியில் அடுத்து பாட வேண்டும் என டென்ஷனோடு அமர்ந்திருக்கும் கதாநாயகியின் கையை சட்டென ஹீரோ பிடித்து அவரை கூல் செய்கிறாராம். ஹீரோவின் பாசிட்டிவ் அப்ரோச் சரி தான் பாஸ். ஆனா நிஜத்தில் இதுபோல யாராவது செய்தால் சட்டென அந்த பிகர் காலில் அணிந்திருக்கும் பேட்டாவை கழட்டி பட்டென விளாசியிருக்கும். சரி ஏதோ சினிமாதான் என்றாலும் அதுக்காக இப்படியா. நாங்களும் காலேஜ் எல்லாம் படிச்சிதான வந்திருக்கோம்.

மற்றொரு பாசிட்டிவ் விஷயம் ஹீரோயினியின் அப்பா அம்மா. படத்தில் ஹீரோவும், ஹீரோயினியும் தன்னந்தனியாக கம்பைன் ஸ்டடிஸ் செய்ய விடும் அளவிற்கும்,  அடிபட்டு வரும் ஹீரோ பட்டாளங்களுக்கு கதநாயகி டெட்டால் போட்டு விடும் அளவிற்கும், ஊடலில் இருக்கும் போது டூ யு மிஸ் ஹெர் என கேட்பதும் என அவர்கள் பயங்கர பாசிட்டிவ். ஷஷப்ப்ப்பா... ஃபிகர்ஸோட அப்பா அம்மா எப்படியெல்லாம் ஒரு மனுசனை படுத்தி எடுப்பாங்கன்னு பட்டு அனுபவிச்ச எவனுக்கும் இந்த சீன் எல்லாம் பார்த்தா பத்திகிட்டு எரியும். சரி அதை விடுங்க. அது நமக்கு தேவையில்லாத விஷயம்.


அப்புறம் ஹீரோயின் பணக்கார வீட்டுப்பெண் வீடு பெரியதாய் இருக்கிறது. ஆனால் ஹீரோ பணக்காரரா இல்லை ஏழையா தெரியவில்லை ஏனென்றால் ஹீரோவின் வீடென்றால் அவர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.



ஹீரோ, ஹீரோயின் அவ்வளவு காலங்கள் பேசிக்கொள்ளவில்லை என்பதற்கான காரணம் சத்தியமாக வலுவானதாக இல்லை. அப்புறம் சீனியர் மாணவர் கதாநாயகியை கட்டாயப்படுத்தி காபி டேவிற்கு கூப்பிட்டு செல்வது எல்லாம் டூ மச்சுங்க.. தமிழ்நாட்டு மாணவிகள் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்...

Inidhu Inidhu Gallery

எனக்கு தெரிந்தவரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்பொழுது மாணவிகளிடம் பேசினாலே ஃபைன் என்கிற அளவிற்கெல்லாம் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வரும் கல்லூரியில் இஷ்டத்திற்கு ஆட்டம் பாட்டம், கன்னா பின்னாவென்று ராகிங், இரவு நேரங்களில் கேம்பஸில் சந்திக்கிறார்கள்,  மொக்கை இன்டர்வியூக்கள் வைத்து வேலை கொடுக்கிறார்கள் என அவதார் படத்தில் வரும் கற்பனை உலகம் போன்றதொரு ஃபேன்டஸி காலேஜ் போல காட்டப்படுகிறது. ஒருவேளை நிஜமாகவே இது போன்றதொரு கல்லூரி இருக்கிறது என்றால் இப்பவே எங்கிருக்குன்னு சொல்லுங்க, நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் பட்டப்படிப்பு படிக்கலாமுன்னு இருக்கேன்.


படத்தில் பாடல்கள் அதிகம் வருவது போன்றதொரு ஃபீலிங். இரண்டு மூன்று பாடல்கள் நன்றாக இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை. 

ரைட்டு.. இதெல்லாம் சின்ன சின்ன சறுக்கல்கள் என்றாலும் கதை எல்லாம் வேணாம் மூன்று மணி நேரம் போர் அடிக்காம இருந்தா போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக திரையரங்கம் போய் பார்க்க வேண்டிய படம் இனிது இனிது. 

Thursday, August 26, 2010

மிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்

உணவின் வரலாறு



நாடு, இனம், மக்கள், மன்னன் என எத்தனையோ வகையான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்திருப்போம்.  ஆனால் யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு குறித்த புத்தகம் ஒன்றினை படித்தேன். அது பா.ராகவன் அவர்கள் எழுதியிருக்கும் உணவின் வரலாறு!


125 ரூபாய்க்கு புத்தகம் கொஞ்சம் குண்டாக அதிக பக்கங்கள் இருக்கிறதே என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் வாங்கினேன். ஆனால் படிக்க படிக்க அவ்வளவு தகவல்கள்! அதுவும் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு வெகு சுவாரஸ்யமான நடையில் செல்ல இந்த புத்தகத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது.  நான் சமீபத்தில் படித்த புத்தகங்களிலேயே வெகுவாக ரசித்துப் படித்தது இந்த புத்தகத்தைத்தான்.


கரும்பின் ருசி அறிந்த ஆதி மனிதர்கள் வெகு காலம் வரை அதனை ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் சர்க்கரை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. எனில், அதற்குப் பல காலம் முன்பே கரும்பு உற்பத்தி இருந்திருக்கிறது என்றாகிறது. 


வரலாறு என்றவுடன் பழங்காலத்து கதை மட்டும் என நினைத்து விடவேண்டாம். தேன் வேட்டைக்கு கிளம்பும் ஆதி கால உணவு தேடல் முதற்கொண்டு அமெரிக்காவின் இன்றைய பர்க்கர் வரை அக்கக்காய் புட்டு புட்டு வைத்து அசத்துகிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.




கொண்டைக்கடலையில் கார்போஹைட்ரெட் கொஞ்சம் ஜாஸ்தி. அறுபத்தி நாலு சதவீதம். சோற்றுப்பண்டாரங்களுக்கு மாற்று உணவாக இதனைக் கொடுக்கலாம். காரணம், அரிசியில் இல்லாத இருபத்தி மூன்று சதவீத ப்ரோட்டீன் இதில் இருப்பதுதான். தவிரவும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும் கொண்டைக்கடலையில் உண்டு.




கொண்டைக்கடலை, கீரைகள், வாழைப்பழம் என நமது அன்றாட வாழ்க்கையில் அலட்சியமாக பார்த்து பழகிப்போன போன்ற பல உணவு பொருட்களை இவ்வாறு அவைகளின் சத்துக்களை பட்டியலிட்டு விளக்கும்பொழுது அவைகள் மேல் நமக்கு தனி மரியாதையே வந்து விடுகிறது. 

பீர், ஒயின், அரிசி போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து உலகின் பல பகுதிகளில் நிலவும் கதைகளை ஆங்காங்கே சைட் டிஷ் போல் சேர்த்திருப்பது புத்தகத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.




நமது ஒருவேளை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால், அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உண்டோ, அவை அனைத்தும் ஒரு வாழைப்பழத்தில் உண்டு.

 வாழைப்பழம் குறித்து வெகு ஆழமாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் வாழை, அதன் மரபணு மாற்றம், பரவிய வரலாறு, அதன் சத்துப்பொருட்கள், பல்வேறு வகையான வாழைப்பழ இனிப்புகள் என பழனி பஞ்சாமிர்தம் வரை வாழைப்பழத்தின் அருமை சொல்லும மூன்று அத்தியாயங்களை படித்து முடித்த உடன் வாழைப்பழத்திற்கு கட் அவுட் வைக்கும் அளவிற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன்.


புத்தகத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு வகை, சரக்கின் இளைய சகோதரர்களான பீர், ஒயின் முதலிய அயிட்டங்கள். அவற்றை சுவைத்திடாத என்னைப்போன்ற அம்மாஞ்சிகளுக்கும் ஓருமுறை அடித்துப்பார்த்துவிடுவோமா என்கிற ஆவலை வரவழைக்கும் அளவிற்கு சுவையாக சொல்லப்பட்டிருப்பதை தவிர புத்தகத்தில் வேறு குறைகள் எதுவும் இல்லை :) 


இட்லி காலத்தால் மிகவும் பிந்தையது. அதனுடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அதன் சுவையற்ற சுவையினாலும் வயிற்றைக் கெடுக்காது என்னும் சமர்த்து குணத்தாலும் அரிசி - உளுந்து காம்பினேஷனில் கிடைக்கக்கூடிய சத்துகளினாலும் உண்டானது.



இட்லி, திருப்பதி லட்டு போன்ற இன்றைய சூப்பர் ஸ்டார்களின் குழந்தை பருவ நாட்களையும் அவை வளர்ந்த விதங்களையும் குறித்து அவற்றின் சுவையை விட சுவையாக விளக்குகிறார் ஆசிரியர். 


நமது நாட்டு உணவுகள் மட்டுமல்லாது குரங்கின் கழுத்தை திருகி ரத்தத்தை அப்படியே சூப்பாக ஊற்றிக் கொடுக்கும் சீனர்கள், அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள், எவ்வளவு பணம் இருந்தாலும் அளந்து அளந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்யர்கள், தண்ணீர் தட்டுப்பாட்டினால் அதற்கேற்ற உணவு முறையினை கொண்டுள்ள ஆப்பிரிக்கர்கள் என உலகின் பல்வேறு பகுதியினரின் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.


பொதுவாக புத்தகம் படிக்கும் பொழுது கையில் ஹைலைட்டர் வைத்து குறித்துக்கொண்டு அதை பதிவிடும்பொழுது மேற்கோள் காட்டுவேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஆரம்பத்தில் ஹைலைட் செய்து செய்து அலுத்துப்போய் ஹைலைட்டரை கீழே வைக்கும் அளவிற்கு புத்தகத்தில் இருக்கும் இருக்கும் அனைத்து பகுதிகளுமே முக்கியமானவை. 




சமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..!!! 

___________________


கிழக்கின் மற்ற நூல்களை போலவே இந்த புத்தகமும் சிறப்பான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. முன் அட்டைப்படத்தில் 'உ' என பெரியதாக உள்ள டைட்டில், உள்ளே ஆசிரியர் அதற்கான காரணத்தை விளக்குவதற்கு பொருத்தமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 


____________________


உணவின் வரலாறுஆசிரியர் - பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.125


புத்தகம் குறித்த அதிகாரபூர்வ சுட்டி

______




குறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்



Tuesday, August 24, 2010

சென்னையில் பயங்கரம் - பதிவர்கள் அட்டகாசம்

அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.. சில நண்பர்களை எனக்கு தெரியும் சிலரை எனக்கு தெரியாது... சம்பந்தபட்ட நண்பர்கள் யாருக்கேனும் ஏதாவது பிடிக்கவில்லையென்றால்.. பின்னூட்டத்தில்/மெயிலில்
 தெரிவித்தால் அந்த புகைப்படம் நீக்கப்படும்... உங்கள் ஆதரவிற்கு நன்றி...






Monday, August 23, 2010

சினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்




சினிமா வியாபாரம் புத்தகத்துடன் அதன் ஆசிரியர் சங்கர் நாராயண் 
புத்தகத்தை வெளியிடுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி
ரிவர்ஸில் திரும்பி புன்னகைப்பவர் பதிவர் ஜெட்லி
விழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா....
நூல் அறிமுகம் கவிஞர் நா.முத்துக்குமார்
ஏற்புரை ஆசிரியர் சங்கர் நாராயண் (எ) கேபிள் சங்கர்
டெரர்ரான லுக்கில் இயக்குனர் ஆதி.. அவர் அருகே ஹீரோ கார்க்கி
பூ போல புன்னகை சிந்துபவர் அண்ணன் அப்துல்லா.. அருகே வெண்மையாய் பூ போல அமர்ந்திருப்பவர் பதிவர் வெண்பூ
தண்டோரா டாட் இன் தள பதிவர் அண்ணன் மணிஜி
வளைஞ்சு வளைஞ்சு போட்டோ எடுத்த களைப்பில் அமர்ந்திருக்கும் பதிவர் காவேரி கணேஷ்
பதிவர் நர்சிம்...
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றுகிறார்

இடமிருந்து :- பதிவர் காவேரி கணேஷ், கவிஞர் நா.முத்துக்குமார், பதிவர் நர்சிம், பதிவர் எறும்பு
பதிவர் ஜெட்லி மற்றும் பதிவர் அதிஷா
பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன், பதிவர் மணிஜீ, பதிவர் எறும்பு
நடுவில் நிற்பவர் பதிவர் கே.ஆர்.பி.செந்தில்.. சைடில் நிற்பவர்கள் மன்னிக்கவும் உங்கள் பெயர் தெரியவில்லை...
பதிப்பாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், குகனுடன் எழுத்தாளர் சங்கர் நாராயண்
இடமிருந்து... பதிவர்கள் மயில்ராவணன், எறும்பு, மறத்தமிழன், பலாபட்டறை சங்கர்
 பதிவர் பெஸ்கிக்கு கை கொடுப்பவர் பெயர் தொண்ட மூர்த்தி.. தலைமறைவு என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொண்ட என்பது அவர் 'அடைப் பெயர்'. தொண்டைமான் என்னும் படத்தில் அவர் முதன் முதலில் நடித்ததால், தொண்டைமூர்த்தி. அது மழுவி.. தொண்ட என ஆகி விட்டது.

( இந்த தகவலை மெயிலில் தெரிவித்தவர் தினேஷ் @ சாம்ராஜ்யபிரியன் )
பதிவர் கேபிள் சங்கருடன் பதிவர் தினேஷ் @ சாம்ராஜ்யப்ரியன்
பதிவர் கேபிள் சங்கர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. அரண்
பதிவர் ஆதி

























இந்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club