Friday, February 10, 2012

ஹி ஹி வலைமனை முக்கிய செய்திகள்






மின்வெட்டால் 40 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசின் சாதனை -  கலைஞர் 

# ச்சே.. மிஸ் ஆயிடுச்சு தலைவரே.. இதுவே நம்ம ஆட்சின்னா இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தியிருக்கலாம்..


உள்ளாட்சி மன்ற தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்துள்ளன - கலைஞர்

# விடுங்க தலைவரே சின்னப் பசங்க.. என்ன இருந்தாலும், போட்டியில் கலந்து கொண்ட சான்றுதான் வாங்கியிருக்காங்க.. போன தபா நாம உள்ளாட்சி தேர்தல் நடத்துனப்போ ஆல் கேட்டகரியிலும் அவார்டே வாங்குனோமே...


நிதியமைச்சர் என்கிற முறையில் என் தூக்கமே போச்சு - பிரணாப் 

# அதுக்காக.. எல்லோரும் பிரதம மந்திரி ஆக ஆசைப்பட்டா எப்படி??


ஜெயலலிதா யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவரே பிரதமர் ஆவார். - ராமராஜன்

#  அப்போ,  ஜெயலலிதாவையே சுட்டிக்காட்டுனாரே கேப்டன் அவர் என்ன ஆவாரோ...??


எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாத விஜயகாந்த் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக அவரது பெயரை உச்சரித்து வருகிறார். - நடிகர் ராமராஜன்

#  10 நாள் சஸ்பெண்டு பண்ணதுக்கு பதிலா மேதை படத்தை 10 வாட்டி பாக்க வச்சிருக்கனும்ணே.. அப்பத்தான் அவரு திருந்துவாப்புல..


என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற முழக்கம்தான் இப்போது ஒலிக்கிறது -  விஜயகாந்த்

# கேப்டன்.. ரைட்டருக்கு ஏதும் சம்பள பாக்கிங்களா...??  விருதகிரி படத்தை விட இந்த வசனம் மொக்கையா இருக்கே... 


இலங்கை அணிக்கு எதிராக பெர்த் போட்டியில் வென்ற பிறகு தோனி கூறுகையில் வீரர்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், குறிப்பாக காயங்கள் அடையாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று கூறினார்.

# ஆமாமா.. இல்லைன்னா ஐ.பி.எல்ல விளையாட முடியாது..


இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். - இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே

#  அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு...இந்த ஆஸ்திரேலியா பசங்க உங்களை மாதிரி இல்லைண்ணே.. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

# ம்.. ஆமா ஆமா.. பாவம்ங்க.. அந்த பாட்டை பார்க்கும்போது நம்மளுக்கே பதறுதே.. சம்பந்தப்பட்ட சச்சின் மனசு என்னா பாடுபடும்..


6 comments:

! சிவகுமார் ! said...

என்னது எங்க தலைவர் வசனம் மொக்கையா இருக்கா? கேப்டனை சொரண்டி பாத்துட்டீங்க மிஸ்டர். சுகுமார். இனி பொறுப்பதில்லை. வீ வில் மீட் இன் தி கோர்ட் வித் தி லாங் கோட்!!

Prabu Krishna said...

சூப்பர் னா

விக்கியுலகம் said...

எங்க கருப்பு தங்கத்த தாக்கியதை பல வந்தமாக எதிர்க்கிரேன்...தண்டனயாக அண்ணனின் வாரிசின் பட சீடி அனுப்பி வைக்கப்படும்!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப நக்கல் உங்களுக்கு ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

அஜித்தின் அடுத்த அதிரடி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...