Tuesday, June 21, 2011

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது,

டி.வி. நடத்துற அண்ணா உங்களுக்கு வணக்கம்.  ரொம்ப நாளா நம்ம டி.வி. பார்த்துட்டு வரும் வாசகி அண்ணா நான். கொஞ்ச நாளா 
பாருங்க தெனம் நைட்டு ஒரு நிகழ்ச்சி வருது. போன் போட்டு பரிசை வெல்லுங்கன்னு ரெண்டு அக்கா ஒரு புரோக்கிராம் பண்றாங்க. ரூ.3000 ரூ.5000ம்னு பரிசுத்தொகை பார்க்க ஆசையா இருக்கு.. கேள்விகளும் சிம்பிள் சிம்பிளா இருக்கிறதால எங்களைப் போல ஏமாந்தகோளிங்க நிறைய பேரு கையில இருக்க செல்போனை எடுத்து பட்டுன்னு அடிச்சிடுவோம். 


ஆனா பாருங்க ஒரு நிமிஷத்துக்கு ரூ.10 பிடிக்கிறீங்க. பரிசுத்தொகையை பெரிசா போட்டுட்டு இதை குட்டியா போடுறது சரியில்லைங்கண்ணா. நான் ஏதோ எழுத படிக்க தெரிஞ்ச பொண்ணு அதனால இதை தெரிஞ்சுக்கிட்டேன். விஷயம் புரியாத எவ்வளவ்வோ பேர் என்ன பண்ணுவாங்க அண்ணா?


போன் பண்ணி நாங்க பதிலை சொல்லனும். ஆனா நீங்க பொது அறிவு விஷயமா சொல்றீங்க. இதை நிமிஷத்துக்கு பத்து ரூபாய் கொடுத்து காத்திருந்து கேட்கனுமா?


நான் லைன்ல காத்திருந்தா இன்னொருத்தர் லைவ்ல பேசனும். அதானே அர்த்தம்?  ஆனா அஞ்சு நிமிஷத்துக்குத்தான் ஒரு கால் லைவ்ல வருது.  மத்த நேரத்துக்கு ரெண்டு அக்காவும் மொக்கை போடுறாங்க. இந்த நிகழ்ச்சியை பார்த்தா லைவ் மாதிரியே தெரியலை. ஆனா லைவ்னு போடுறீங்க. என்னைப்போல எத்தனை அப்பாவி ஜென்மங்கள் காத்திருப்பாங்க லைன்ல? அதனால உங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்னு யோசிச்சு பார்த்தாலே தலையை சுத்துத்து. 


நீங்க விளம்பரம் போட்டு நல்ல நிகழ்ச்சியை போட்டு சம்பாதீங்க வேணாம்னு சொல்லலை. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு ரீ-சார்ஜ் பண்ற அப்பாவி மக்கள் பணத்தை இப்படி எடுத்து சம்பாதிக்காதீங்க ப்ளீஸ்.


இதே போல இன்னொரு டிவி ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க. லைவ்னு போடமலே லைவ்னு சொல்லிக்கிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேணாம் வலிக்குதுன்னு அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். ஆனா அதுக்கப்புறம் லைவ்னு போட ஆரம்பிச்சிட்டாங்களே தவிர வேற ஒரு மாற்றமும் இல்லை. சரி அவங்களை விடுங்கண்ணா.  ஏற்கனவே நமக்கு நேரம் சரியில்லை. இதுல இந்த மாதிரி சுரண்டல் நிகழ்ச்சி நமக்கு இப்போ ரொம்ப அவசியமா யோசிச்சு நடந்துக்கோங்க. 

உங்களால் பத்து ரூபாய் இழந்த,

அப்பாவி ஆனந்தி.






7 comments:

ஜெட்லி... said...

தப்பு உங்க மேலதான் தலைவரே ....
நைட் நேரம் கண்ட கண்ட சானல் பார்க்காதீங்க....

♠ ராஜு ♠ said...

கலைஞர் டிவியை நடத்துறது அண்ணாவா..?
என்ன கொடுமை பெரியார் இது!
:-)

கந்தசாமி. said...

வியாபார தந்திரம்'னு கொள்ளையடிக்கிறாங்க போல

middleclassmadhavi said...

கலைஞர் டிவியில் ஏதாவது நல்ல ப்ரொக்ராம் வருதா என்ன?!

நாஞ்சில் பிரதாப்™ said...

ஹஹஹ... இதுமாதிரி நிகழ்ச்சிகளை இன்னுமா பார்த்துட்டு இருக்கீங்க...:)0

துஷ்யந்தன் said...

இப்புடி எல்லாமா உழைக்குறாங்க ???
அவ்வவ்

goma said...

நானும் ஒருமுறை இப்படித்தான் ,
ராஜ் டீவியில்,ஜோதிகா பாதி விக்ரம் பாதின்னு படம் போட்டு யார் என்று சொல்லுங்கன்னு கேப்பாங்க....
ரூபாய் 10000 பரிசளிக்க அவர்கள் 50000 சுரண்டியபின் அறிவிப்பார்கள் ...அதுவும் நிஜமா பொய்யா என்று தெரியாது.....
உளைச்சு சம்பாதிச்சதே நிக்காத காலம் இது ....
இப்படி ஊழலில் சுருட்டியவன் தந்த பணம் எங்கே நிற்கும் ....விடு ஜூட்..
[இந்த கொள்ளை டீவி மட்டும் பண்ணுவதாக நினைக்க வேண்டாம்,பத்திரிகைகள்,sms பண்ணூங்க,மொபைலில் படைப்புகளை அனுப்புங்க....ரீதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...