Friday, July 30, 2010

கேபிள் சங்கரின் கும்மாங்கொத்து பரோட்டா

அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் பிறந்தநாட்களின் போது ஒட்டப்படும் போஸ்டர்களை பார்க்கும் போது, ஏன் இந்த தலைவர்கள் இப்படி செய்கிறார்கள் என யோசிப்பேன். ஆனால் இன்று மெயிலில், பதிவர் குழுமத்தில் ஒருவர் அனுப்பிய போஸ்டரை பார்த்ததும் புரிந்தது... தலைவர்களை விட தொண்டர்கள்தான் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை விரும்புகிறார்கள் என்று...  
பதிவுலகில் நல்ல நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என எண்ணும்போது சந்தோஷமாக இருக்கிறது.  உங்கள் அன்பு என்னை திக்குமுக்காட செய்துவிட்டது. ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.









ரொம்ப நாட்களாக வாசகர்கள் பின் நவீனத்துவம், நுண்ணரசியல் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். மேலே உள்ள போஸ்டரை வைத்தே பின்நவீனத்துவம், நுண்ணரசியல் ஆகியவற்றை உங்களுக்கு விளக்குகிறேன்.  டிசைன் பேக்கிரவுண்டில் மாடர்னாக வண்ணச் சேர்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது அல்லவா..? ஆம் அதுதான் பின்நவீனத்துவம்!

சரி.. நுண்ணரசியல்..?

போட்டோவை தரவிறக்கி ஜும் பண்ணி பார்த்தீர்களேயானால், என் தலையில் இருக்கும் இரண்டு முடிகளுக்கு வெள்ளை கலர் அடித்து நரை முடி போல காண்பித்து என் வயதை கூட்டப் பார்க்கும் முயற்சி நடைபெற்றிருப்பதை அறியலாம். இதற்கு மேலும் நுண்ணான ஒரு நுண்ணரசியலை நீங்கள் வேறு எங்குமே பார்க்க முடியாது.








இந்த வார விளம்பரம்






இந்த வார ஜோக்


  






இந்த வார சாப்பாட்டுக்கடை

  



டிஸ்கி

கேக் வெட்டும்பொழுது பிறந்தநாள் கொண்டாடும் நண்பரை சூழ்ந்து கொண்டு ஆளாளுக்கு கும்மாங்குத்து குத்துவோம். இந்த பர்த் டே பஞ்ச் வழக்கம் எங்கள் அலுவலகத்தில் உள்ளது. அதே ஸ்டைலில் நமது அண்ணன் கேபிள் சங்கரின் பிறந்தநாளான இன்று செல்லமாக இந்த கும்மாங்கொத்து பரோட்டா அவருக்கு பிறந்தநாள் பரிசாக.

ஆங் அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..

அனைத்தும் கற்பனையே.... சத்தியமாய் அண்ணன் கேபிள் சங்கரை தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...


மென்மேலும் வளர்ந்து இவ்வருடம் கலை உலகில் இயக்குனராக கலக்க அன்புடன் வாழ்த்துவோம்..





Tuesday, July 27, 2010

ஜெயா டி.வி.யில் பதிவர் பட்டர்பிளை சூர்யா






வண்ணத்துப்பூச்சியாராக பதிவுலகில் பல காலம் அறியப்பட்டு பின்னர் பரி'நாம' மாற்றத்தின்படி பட்டர்பிளை சூர்யாவானவர். பதிவுலக பர்மா பஜார் என்று அழைக்கப்படும் அளவிற்கு உலக சினிமாக்களை பிசைந்து சாப்பிட்டு ஏப்பம் விடுபவர்.

பதிவுலகம், பொது உலகம் என எனக்கு நிறைய வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறார். அவருடன் போனில் பேசினால் நேரம் போவதே தெரியாது அவ்வளவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அவ்வப்போது "அவரு ரொம்ப நல்ல ஆளுப்பா... ஹி இஸ் எ வெரி நைஸ் பர்சன்...." என மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் தமிழ் டூ இங்கிலிஷில் கலந்து கட்டுவார்.


 




உலக சினிமாக்களின் மீதான அவரது காதல், அதற்காக அவர் செலவு செய்யும் நேரம், பொருள் என அவரது ஈடுபாடு அவரை உயர்த்தி வருகிறது. அண்மையில் வார இதழ்களில் உலக சினிமாக்கள் குறித்த அவரது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

தற்போது அதற்கெல்லாம் சிகரமாய் ஜெயா டி.வி. காலை மலரில் வரும் வியாழன் (29.07.2010) காலை 8 மணிக்கு உலக சினிமா குறித்த அவரது பேட்டி வெளிவர இருக்கிறது.  மறக்காமல் அனைவரும் பாருங்கள்..

பட்டர்பிளை சூர்யா அண்ணன் மென்மேலும் வளர்ந்து பார் போற்ற உயர வாழ்த்துக்கள்..!


 பிளாஷ் விளம்பர இணைப்பு கொடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கோட்-இனை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.



<embed src="http://www.imagedoll.com/out.php/i2173_butterfly-at-jaya2.swf" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="200" height="200"></embed>
<br>
<br>





Wednesday, July 21, 2010

மிரளும் கேப்டன் - அரளும் அஜித் விஜய்

// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //











அடடா.. இவரு கூட ஆடுனா, நமக்கு டான்ஸ் மறந்துடும் போலிருக்கே...







அண்ணே முடியலைண்ணே.. நீங்க வேகமா டான்ஸ் ஆடுறீங்கன்னு பெயர் வாங்கிறதுக்காக, இப்படி மெதுவா ஆடி ஷுட் பண்ணிட்டு எடிட்டிங்ல பாஸ்ட் பார்வார்ட் பண்ணிக்கலாம்ங்கிற ஐடியா கொஞ்சம் கூட நல்லாயில்லை....


Medhai Movie - Gallery


இந்த மாதிரி ஒத்தையிலே நம்ம படத்தை தைரியமா பார்க்கிறவங்களுக்கு பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சுடலாமா....







அண்ணே கண்ணை குத்திடாதீங்கண்ணே.. நான் கண்டிப்பா படம் பார்க்க வரேன்... 





என்னடா பசங்களா உங்க கூட தலைவலியா போச்சு...  தமிழ் வாத்தியார் மட்டும்தான்.. செம்மொழி வாத்தியாருன்னு தனியா யாரும் வர மாட்டாங்க...





ஆங்..  ஹலோ.. டைரக்டர் சார்.. இங்க சார்லி என்னைவிட நல்லா நடிக்கிறாப்ல.. லைட்டா எனக்கு டவுட்டா இருக்கு... நான்தானே படத்துக்கு ஹீரோ...? என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே...?





படத்துல நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கோம்... படம் வந்த உடனேதான் இது பாடல் காட்சி.... நான் ஆடுறது டான்ஸ்னு மக்களுக்கு தெரியும்... 1..2...3...4... 4..3..2..1..





அழுன்னா அழப்போறேன்... சிரின்னா சிரிக்கப்போறேன்... அதைவிட்டுட்டு இப்படி இங்கிலீஷ் பேப்பரை கையில கொடுத்தா... அழுவறதா சிரிக்கிறதா தெரியலையே... 





"என்ன சொல்றீங்க சார்லி... என்னோட ரீ-எண்ட்ரியால, விஜய், அஜித், கேப்டன் எல்லாம் அரண்டு போய் கிடக்கிறாங்களா ஏன்?"


"பின்ன என்னங்க... பிளாக், எஸ்.எம்.எஸ்ல எல்லாம் அவங்களை விட்டுட்டு உங்களை கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்களே அந்த கவலைதான்..."







"அது ஏன்டா என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்ட...?" 


  "அப்படி என்னண்ணே கேட்டுட்டேன்... படத்துல நீங்க இருக்கும்போது ஏன் சார்லியை வேற போட்டிருக்காங்கன்னுதானே கேட்டேன்..."





ஹே.. யாரப்பா அது... என்னைய தவிர எல்லோரும் ஹீரோ மாதிரி இருக்காங்கன்னு சொல்றது...







சின்ன பயபுள்ளைக கூட நம்மளை திரும்பி பார்க்க மாட்டேங்குதுங்களே....


எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க...  உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...



Tuesday, July 20, 2010

பீலிங்ஸ் - 20 ஜுலை 10




ரிமோட்

      செம்மொழி மாநாட்டு அறிவிப்பின் படி பல கோடிகள் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்குவதாக கேள்வி. வேறு எதற்கு ஒதுக்குகிறார்களோ இல்லையே, டிஸ்கவரி சேனலுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு அருமையான அறிவியல் நிகழ்ச்சிகளை எளிமையாக புரியுமாறு தமிழை படுத்தாமல் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர் சிங்கர், சன் சீரியல்களுக்கு கும்பல் கும்பலாய் பலர் சென்று விட சில நூற்றுக்கணக்கான பேர் மட்டுமே பார்க்கக்கூடிய இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி அறிவியல் தமிழை வளர வைக்கலாம்.

     திருமதி செல்வமும் நாதஸ்வரமும் ஓடும் போது என் அம்மாவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் விளம்பர இடைவேளையில் தான் பதில் வரும். இவை இரண்டும் அம்மா விரும்பி பார்க்கும் மெயின் சீரியல்கள். செல்லமே சைட் சீரியலாம் சில தினங்கள் சாய்ஸில் விட்டுவிடுவார். தங்கம் சீரியலை ஆரம்பத்தில் விரும்பி பார்த்தவர், இப்போது அப்போதுதான் சமைக்கவே எழுந்து செல்கிறார். ஐயா ஐயான்னு மொக்கை அடிக்கிறாங்களாம்.



     வெகு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாதஸ்வரம் சீரியல் சன் டி.வி.யில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரையிலேயிருந்து வெள்ளித்திரைக்கு பல பேர் போகலாம். ஆனால் ஒரு படத்தில் சறுக்கினாலும் திரும்பவும் முயன்றால் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கக் கூடிய திருமுருகன் மறுபடி சின்னத்திரைக்கே திரும்பி வந்ததற்கு அசாதாரண தைரியம் வேண்டும்.



     வசந்த் டி.வி.யில் ஒரு பாட்டு. 'நாளைய வசந்தமே, தலைவனே வா வா' என பாடல் கம்பீரமாய் ஒலிக்க வசந்த் அன் கோ இயக்குனர் நிற்கிறார், நடக்கிறார், சிரிக்கிறார், கை அசைக்கிறார், நல உதவிகள் செய்கிறார் இன்னும் ஏராளமான றார் களுடன் விஜய் அறிமுக பாட்டு ரேஞ்சுக்கு போட்டு தாக்குகிறார்கள். இளைய தளபதி விஜய்யை கலாய்பதற்கு வாழ்க்கையில முதல் முறையாய் அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். 


     கேப்டன் டி.வி.யில் ஒரு கேன்டிட் கேமரா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு பார்த்தது. போலீஸ் வேடமிட்டு கொண்டு நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் போவோர் வருவோரை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. நம்ம கேப்டன் சார் அந்த காக்கி சட்டையை போட்டுகிட்டு எவ்வளவு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிச்சிருக்காரு... இப்ப என்னடானா அவரு டி.வி.யிலேயே பொதுமக்களை பிடிச்சு டென்ஷன் பண்றாங்க... என்ன கேப்டன் சார் உங்க டி.வி.யிலேயே இப்படி சட்டத்தை கையில எடுத்துக்கலாமா?

பிறந்தநாள் வாழ்த்து




     குரல்வலை எனும் வலைப்பூ அதிபர் திரு.MSV Muthu அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது போலவே இருக்கும். நேரில் பார்பதற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். 


ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார்போல் இருக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





பதிவுலகம்

     கால்பந்து குறித்து அதிகம் எனக்கு தெரியாது. ஆனாலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் என்னென்ன நடக்கிறது என அவ்வப்போது அறிந்து கொள்ள உதவியது பதிவர் லோஷன் எழுதிய பதிவுகள். தமிழில் சப்டைட்டில் போட்டு மேட்ச் பார்ப்பது போன்று இருந்தது இவரது கால்பந்து குறித்த பதிவுகள். அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

     சமீபத்தில் படித்த பதிவர் ராஜாவின் ஆர்குட் படுத்தும் பாடு நல்ல சிரிப்பை வரவழைத்தது. ஸ்கராப் மெசேஜ்களுக்கான அவரது கமெண்டுகளை படித்து கண்களில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தேன்.

     சில சமயம் சிலவற்றை படிக்கும் போது குபீர் என சிரிப்பு வரும். பதிவர் சரவணக்குமரனின் ஆனந்தபுரத்து வீடு விமர்சனம் படிக்கும்போது இந்த ஒற்றை வரி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
  "ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது,  அவர் ஒருவராகத்தான் இருக்கும்."


இந்த வார விட்ஜெட்

     என் வலைப்பூவில் கீழே ஓடிக்கொண்டிருக்கும் "உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...." பிளாஷினை உங்கள் பதிவில் இணைக்க :

<object width='300' height='75'><embed src='


http://www.hostanypic.com/out.php/i6066_feed.swf' width='450' height='90' wmode='transparent'/></embed></object>
<br /></a>

Thursday, July 15, 2010

மதராசபட்டினம் - பேரு மாறும் ஊரு மாறுமா?



// கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. புகைப்படங்கள் பெறப்பட்ட பல்வேறு வலை தளங்களுக்கு நன்றி //























































அய்யா ராசா... ஓட்டுப் பட்டையை மேலே வச்சா படிச்சிட்டு அப்படியே போயிடுறீங்கன்னு கீழே தூக்கி வச்சேன்... அப்பவும் ஓட்டு விழ மாட்டேங்குதே... இனி நடுவுல வைக்கிறதுக்கு ஏதாவது கோடிங் இருக்குமானு முயற்சி பண்ணிதான் பார்க்கனும்...





Wednesday, July 14, 2010

மதராசப்பட்டினம் - திரை அனுபவம்





2007 ல் ஒரு நாள்...


 "நீங்க கூப்பிட்டப்பலாம் சிவாஜி படம் ஆறு வாட்டி வந்தேன்ல... இப்போ நான் கூப்பிட்டா ஏன் வரமாட்றீங்க.. வந்துதான் ஆகனும்" என்றான் முதலாளி.


ஒரு பி.பி.ஓ நிறுவனத்தில் நான் பொட்டி தட்டி கொண்டிருந்த போது இரண்டு பொட்டிகள் தள்ளி உட்கார்ந்து தட்டிக்கொண்டிருந்த வகையில் அவன் ஒரு தொழிலாளி ஆனாலும் அவனது இயற்பெயரே முதலாளி. தீவிர தல ரசிகன்.


"டேய் படம் நல்லாயிருக்காதுடா" என்றான் சதீஷ்.


"ஹே.. டிரைலர் பார்த்தீங்க இல்ல... தல பின்னியிருக்கும்..."


எனக்கும் கூட கீரிடம் டிரைலர் பிடித்திருந்ததால் படம் நல்லாயிருக்குமாங்காட்டியும் என்ற சிறிய நம்பிக்கையில் காசி தியேட்டர் சென்றோம்.


முதல் பாதியில் அடைகாத்த பொறுமையை இரண்டாம் பாதியில் இழந்து அவனையும் படத்தை பார்க்க விடாமல் கிண்டலடிக்க ஆரம்பித்ததால் முழு படமும் முடியும் வரை தியேட்டருக்குள் உட்கார முடிந்தது.


படம் முடிந்து வெளியே வந்தபோது முதலாளி சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. "நல்லவேளை இந்த படம் நல்லாயில்லை..   'விஜய்' டைரக்ஷன்ல அஜித் படம் ஹிட்டாயிருச்சுருங்கிற அவப்பெயருக்கு ஆளாகாம தப்பிச்சிட்டோம்."




2010 ல் ஒரு நாள்


பதிவுலகில் கிளம்பிய பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தொடர்ந்து  தள்ளிக்கொண்டே இருந்ததனால் நேற்று மதராசப்பட்டிணம் ஓடும் சங்கம் தியேட்டருக்குள் போய் விழுந்தேன்.  இந்த முறை டிரைலர் மட்டுமல்லாமல் முழுப்படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.







படம் ஆரம்பிக்கும் முன்னர் ஹனீபாவிற்கு அஞ்சலி ஸ்லைட் போடுகிறார்கள். முதல் பாதியில் மொழி பெயர்ப்பாளராக வந்து கலகலப்பூட்டும் ஹனிபாவை இரண்டாம் பாதியில் மிஸ் செய்கிறோம். இனி அவரை கலை உலகம் மொத்தமாக மிஸ் செய்யப் போவது வருத்தமே. 'கத்திக்குத்தெல்லாம் வாங்கி இருக்கேன் டேமேஜ் ரொம்ப ஜாஸ்தி' எனும் போது அவரது முகபாவத்தை சிவாஜியில் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.. ம் ம்... அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.







பழங்காலத்து மதராஸை கையில் எடுத்துக்கொண்டு அதனுடன் லகான், டைட்டானிக் இரண்டையும் கலக்கி சுவைக்கு அப்போகலிப்டோ போன்ற வஸ்துக்களை சேர்த்து மொத்தமாக மிக்ஸியில் அரைத்து மதராசப்பட்டினம் எனும் புதிய டிஷ்ஷை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


எனினும் தொடர்ந்த தமிழ் மசாலா படங்களால் திகட்டிப்போன நாக்கிற்கு இந்த டிஷ் தெம்பு தரும் புதிய சுவையாக இருக்கிறது. 


நான் கடவுளில் பட்டை தீட்டப்பட்ட ஆர்யா இந்தப் படத்தில் மேலும் ஜொலிக்கிறார். மல்யுத்த சாகசங்களில் மனுசன் பின்னி எடுக்கிறார். 


அமி ஜாக்சன் ஏற்கனவே பல பதிவர்கள் சொன்னது போல வெகுவான தமிழ் நாயகிகளை விட நன்றாகவே நடித்திருக்கிறார். (தமிழில் பேசி!)




துடிப்பான நாசர், நேதாஜி இருக்காரா என நாசரை அடக்கும் எம்.எஸ்.பாஸ்கர், உடன் சுற்றும் நண்பர் பட்டாளம், ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார், ஏ டூ இசட் டூர்ஸ் பாலாஜி, படகில் போகும் தாத்தா, மிரட்டும் வெள்ளைக்கார போலீஸ் என படத்திற்கு பலம் சேர்ப்போர் பட்டியல் அதிகம்.


படத்தின் கலை இயக்குனரின் உழைப்பு எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. டிராம் வண்டிகள், பழைய கால கட்டிடங்கள் என மதராசப்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்து வெளியெடுத்திருக்கிறார்.


படத்தின் தீம் மனதில் நன்றாக ஒட்டுவதற்கு இன்னுமொரு காரணம் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசை, வாவ்..  கலக்கியிருக்கிறார். பாடல்களும் குறிப்பிடும்படியாகவே இருக்கின்றன.




வாக்காளர் அடையாள அட்டையை கலாய்ப்பது, எ..ஏஏஏ.. பி.. பீபீபீ.. சி.. சீசீசீ என ஆங்கிலம் கற்றுக்கொள்வது, நடன பார்ட்டியில் வெள்ளைக்கார பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு நடனமாடுவது, 70 ரூபாய் பயபக்தியோடு வாங்கும் ஓவியர் தண்ணி போட்டுவிட்டு மனைவியுடன் அடிவாங்குவது என ஏராளமான காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. 


'அவுட்கோயிங்...? இன்கமிங்...!', 'ஐ... ஒய்'  என வசனங்கள் உட்பட படத்தில் இன்னும் ஏராளமான கிரியேட்டிவ் அம்சங்கள் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் புரியாது. போய் பார்த்து அனுபவியுங்கள்.


படத்தின் குறைகளை நிறைகளோடு ஒப்பிட்டால் பெரிசாகத் தெரியாது என்றாலும், அந்தப் பாட்டி தற்போதைய கூவத்தின் நதிக்கரையில் உட்கார்ந்து ஃபீல் பண்ணுவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கவர்னராக வரும் கதாநாயகியின் அப்பா கேரக்டர் மட்டும்,  பேன்சி டிரஸ் காம்பட்டிஷனில் டயலாக் மறந்து போன சின்ன பிள்ளையை போல தடுமாறுகிறார்.  
சென்ட்ரல் ஸ்டேஷன் செட்டையே அடிக்கடி காண்பிப்பதால் ஒரு சலிப்பு வருகிறது. ஸ்பென்சர் போன்ற வேறு பல செட்கள் சில விநாடிகளே காட்டப்படுகிறது. மொத்தமாக பழைய மதராசப்பட்டிணத்தை கவர் பண்ணியிருக்கலாம். கிளைமாக்ஸ் துரத்தல் கொஞ்சம் நீளமோ என நினைக்கத் தோன்றுகிறது. நெகடிவ்ஸ் நிற்க.


கிளைமாக்சில் எங்கே ஒட்டு மீசை, வெள்ளை தாடி, சுருங்கி போன பிளாஸ்டிக் மாஸ்க்குடன் ஆர்யவை காட்டி ஒட்டுமொத்த படத்திற்கும் திருஷ்டி வைத்துவிடுவார்களோ என பயந்த எனக்கு இயக்குனர் விஜய் நெகிழ்ச்சியான கிளைமேக்சினால் பதில் சொல்லியிருக்கிறார்.


எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும், விறுவிறுப்பாகவும், சுவையாகவும், கிரியேட்டிவ்வாகவும் படத்தை கொடுத்த விதத்தில் இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.







டிஸ்கி கேள்வி



எல்லாம் சரி.. அது ஏன் பாஸ் அஜித்துக்கு மட்டும் அந்த கிரீடம் கதையை எடுத்தீங்க... நல்ல நல்ல ஸ்கிரிப்டையெல்லாம் பையில வச்சிகிட்டு, விஜய், அஜித்துக்கு கதை சொல்லும்போது மட்டும் எல்லா டைரக்டரும் ஒரே மாதிரி ஆயிடறீங்களே அது ஏன் ?


Keywords : madras, Chennai, madrasapattinam, Madarasapattinam, madarasapatinam, madrasapatinam, vmc hanifa, naaser, amy jackson, arya, director vijay, ags entertainement, kalpathi agoram, blog tamil film review , valaimanai blogspot review, sukumar swaminathan

Friday, July 9, 2010

ஆனந்தபுரத்து வீடு - ஃபர்ஸ்ட் ஷோ - திரை அனுபவம்

முன்கதை சுருக்கம் :


மர்ர்ர்ர்ம தேசம்ம்.. என மணலை மென்று தின்னும் குரல், சீரியலை விரும்பாத பல இல்லங்களில் கூட அலறியிருக்கிறது. ரகசியம், விடாது கருப்பு,  எதுவும் நடக்கும், சிதம்பர ரகசியம் போன்ற மர்ம தொடர்களால் சின்னத்திரையை அசத்திய இயக்குனர் நாகா முதன்முதலாக வெள்ளித்திரையில்.  கூடவே இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு என நான் கொஞ்சம் எதிர்பார்த்திருந்த படம்.


கமலா திரையரங்கத்தில் முதல்நாள் முதல்காட்சி. என்றும் இல்லாத திருநாளாய் இன்று வழக்கம் போல சும்மா கூப்பிட்டு பார்த்த போது என் தந்தையும் திடீரென என்னுடன் கிளம்பினார். படம் கொஞ்சம் பயமா இருக்கும் பரவாயில்லையா என கேட்டபோது, ஏதாவது திரில்லாங்கான சீன் வந்தா கண்ணை மூடிக்கிறேன் என்றார். "அப்போ நீ முழு படமும் கண்ணை மூடிகிட்டுதான் உட்காரனும்" என சொல்லியபடியே என் தந்தையையும்அழைத்துச் சென்றேன். கடைசியில் நான் சொன்னபடியே ஆனது.




பின்குறிப்பு 


படத்தை பார்க்க இயக்குனர் நாகா, தயாரித்த இயக்குனர் ஷங்கர், கதாநாயகி சாயா சிங் அனைவரும் வந்திருந்தனர். படம் முடிந்து வெளியே வந்தபோது விறுவிறுவென ஷங்கர் காரில் ஏறி பறந்துவிட்டார். நாகா, சாயா சிங் இன்னும் படத்தில் நடித்த சிலரும் கும்பல் கட்டி பேசிக்கொண்டிருந்தனர். 




மெயின் ஸ்டோரி


ஓரு ஊர்ல... சரி வேணாம். ஆனந்த புரம்ங்கிற ஊர்ல கார் விபத்தில் இறந்துவிட்ட தன் அப்பா அம்மா வாழ்ந்த பூர்வீக வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார் நாயகன் நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் வாய் பேச முடியாத தன் மழலையுடன். அங்கு ஆவியாக அவரது தாய் தந்தையர் உலவுகின்றனர்.  குழந்தை மற்றும் சாயாவுக்கு சேவைகள் செய்கிறர்கள். இதை காணும் சாயா அதிர்ச்சி ஆகிறார். நாயகன் நம்ப மறுக்கிறார்.









இவ்வாறான நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட துரோகத்தால் வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி தரமுடியாமல் தலைமறைவாக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா என்பது தெரிய வருகிறது. நந்தாவை தொடர்ந்து அவரது வொர்க்கிங் பார்ட்னர் நண்பரும்  (சிதம்பர ரகசியம் சீரியல் ஹீரோ) அந்த வீட்டிற்கு வருகிறார். கடனை கொடுத்த கேங் இவர்களை விடாமல் வீட்டிற்கு முன் நின்று டார்ச்சர் செய்கிறது. கடைசியில் எப்படி அந்த கடனை அடைத்தார். யார் ஏமாற்றியது, யார் காப்பாற்றியது என்பனவற்றையெல்லாம் விரும்புபவர்கள் வெள்ளித்திரையில் போய் பார்த்துக்கொள்ளலாம்.


அமானுஷ்ய விஷயங்களை ஹாட்டாக டீல் செய்யும் நாகாவின் ஸ்டைல் படத்தில் மிஸ்ஸிங். மாறாக இராம நாராயணன் படங்களை போன்ற கிராபிக்ஸ் காட்சிகளே படத்தை ஆக்ரமிக்கிறது.  ஆவிகள் வீட்டு வேலைக்காரர்களை போல துணி துவைப்பது, சமையல் செய்வது எல்லாம் சரிதான். அதற்காக அதையே படம் முழுவதும் செய்திருப்பது போர் அடிக்கிறது.  நான் ரசித்த ஒரே கிராபிக்ஸ் என்றால் அது டைட்டில்தான். 'அட்டகாசம் போ' என அந்த ஒரு இடத்தில்தான் நான் நிமிர்ந்து உட்கார்ந்ததாய் ஞாபகம்.












அதே நந்தா... தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். சாயா சிங்... அட போயா என சொல்லாமல் அம்மாவாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில சில இடங்களில் அசத்தி இருக்கிறார். அந்த பொடியன் வாவ்... துரு துருவென நன்றாக ஆட்டம் போட்டிருக்கிறது. 'பாலா சார்' என கரகர குரல் வில்லன் இம்ப்ரஸ் செய்திருக்கிறார். நிறைய வாய்ப்புகள் இனி வரலாம் அவருக்கு. கலைராணியும் அதிகம் வருகிறார்.  ஊர் பாஷை ஸ்லாங்கை உறுத்தாமல் உச்சரிக்கிறார். 


பிண்ணனி இசை நன்றாக இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்திற்கு வேகத்தடை. 
கதை என்று பார்த்தால் சாதராணமாக சொல்லிவிடக்கூடிய நாவல் கதைதான். முதன்முதலில் வெள்ளித்திரையில் கால்பதித்திருக்கும் நாகா அசாதாரண கதையை எடுத்திருக்க வேண்டாமா... சரி சாதாரண கதையானாலும் அதை ஈரம் போன்றதொரு திரில்லிங்கான தொனியில் சொல்லியிருக்கலாம்.  என்னவோ போங்க...


இயக்குனர் ஷங்கர் தயாரித்த படங்களை வெற்றி விகிதத்தில் வரிசைப்படுத்தினால், இந்த ஆனந்தபுரத்து வீடு, அறை எண் 305ல் கடவுளுக்கு கீழேயும் ரெட்டசுழிக்கு மேலேயும் இடம் பிடிக்கும் அளவிற்கு டைம்பாஸ் வாட்ச் வகையைச் சார்ந்தது.







பின்குறிப்பு 2



 சாயா சிங் படத்தை விட 200 சதவிகிதம் நேரில் ரொம்ப அழகாக இருந்தார்.  நாகா கொஞ்சம் தனியே போய் வெகு நேரம் போன் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிப்பார் ஏதாவது படத்தைப் பற்றி பேசலாம் என பார்த்திருந்தேன். ஆனால் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கவே கைகுலுக்கிவிட்டு நகர்ந்தேன். ( நல்லவேளை அவர் போன் பேசிக்கிட்டிருந்தாருன்னு சொல்றீங்களா... அதுவும் சரிதான்..)


முன்கதை சுருக்கம் 2

"அப்போ நீ முழு படமும் கண்ணை மூடிகிட்டுதான் உட்காரனும்" என சொல்லியபடியே என் தந்தையையும் அழைத்துச் சென்றேன். கடைசியில் நான் சொன்னபடியே ஆனது.

பாதி படம் கண்ணை மூடியபடியேதான் இருந்தார். அப்பப்போ நான் எழுப்பி விட்ட போது படத்தை கொஞ்சம் பார்த்தும் என்னை கொஞ்சம் பார்த்தும் கிண்டலாக சிரித்தார். 'ஊரெல்லாம் கிண்டலடிக்கிற உன்னை என்னிக்காவது யாராவது கிண்டல் அடிப்பாங்கடா அப்போ உனக்கு தெரியும்' என என்றோ வந்த மட்டுறுத்தப்பட்ட அனானியின் பின்னூட்டம் என் மனக்கண்ணில் பிளாஷ் ஆகி மறைந்தது.





Wednesday, July 7, 2010

ஃபீலிங்ஸ் - 7 ஜுலை 2010

________________உட்கார்ந்து யோசிச்சது




■  செம்மொழி பாட்டில் எனக்கு ரொம்ப பிடித்தது ஒரு காட்சி.. புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள். இந்த காட்சியை பார்த்த உடனே ஒரு பதிவர்ங்கிற முறையில எனக்குள்ள பட்டாம்பூச்சி நிறைய பறந்துச்சு.  அலுவலகத்திற்கு வந்த உடன் பதிவுகளை போடவும், பின்னூட்டம் பார்க்கவும் அரசாங்கமே சப்போர்ட் பண்றாங்கன்னு நெனைச்சேன். வலைப்பதிவர்களுக்கு அலுவலகங்கள் பதிவுகள் போட அனுமதி அளிக்க வேண்டும்னு மாநாட்டுல அதிகாரபூர்வமாக அறிவிப்பாங்கன்னு பார்த்தேன்... ஹும் என்ன பண்றது... விண்டோவை மினிமைஸ் பண்ணி வச்சு ஒளிச்சு ஒளிச்சுதான் பதிவுகளை பார்க்கனும்னு நம்ம தலையில எழுதியிருக்கு...  ரைட்டு விடுங்க...


________________நூல் வெளியீட்டு விழா


 பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் அவர்களின் கலைஞர் எனும் கலைஞன் நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். அண்ணன் அப்துல்லா அழகாக நிறுத்தி நிதானமாக பேசுகிறார்.  பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஏற்புரையை நன்றியுரையாக்கி நகைச்சுவையுடன் பேசினார். பதிவர் அகநாழிகை பொன் வாசுதேவன், அஜயன்பாலா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பரமணியன் ஆகியோரும் பேசினார்கள்.
  பின்னர் வழக்கம்போல் கீழே டீக்கடையில் நடந்த பதிவர் சந்திப்பில் ராவணன் படம் பிரதான தலைப்பானது. எனக்கு படம் பிடித்திருக்கிறது என யாராவது லைட்டாய் முணுமுணுத்தால் கூட டென்ஷன் ஆகி விடும் நிலையில் பல பதிவர்கள் படத்தை பார்த்து நொந்த கதையை ஆக்ரோஷமாக கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த டீ கடை டிஸ்கஷன் ரொம்ப நன்றாகவே இருக்கிறது. 


________________சென்சஸ்


  வீட்டிற்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். முக்கியமாக, கம்ப்யூட்டர் இருக்கிறதா, இணைய இணைப்பு இருக்கிறதா என கேட்டுக்கொள்கிறார்கள். ஒருவேளை நாட்டில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என இன்டைரக்டாய் கணக்கெடுக்கிறார்களா தெரியவில்லை. ஆனால், எந்த கட்சி கூகுள் ஆட் சென்ஸ் தமிழை சப்போர்ட் செய்ய வசதி செய்து தருமோ அதற்குதான் ஓட்டு போட வேண்டும் என இருக்கிறேன்.


________________சினிமா சினிமா


■  மதராசப்பட்டிணத்தைவிட நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஆனந்தபுரத்து வீடு. நாகாவின் விடாது கறுப்பு போன்ற மர்ம தேச சீரிஸ் தொடர்களுக்கு நான் தீவிர ரசிகன்.  கடைசியாய் நாகாவின் சிதம்பர ரகசியம் சீரியல் பார்த்தது. இப்போது அவர் வெள்ளித் திரையில்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன். பதிவுகளில் விமர்சனம் வரும் முன்னர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறேன்.






■  சின்ன வயசில் தீபாவளி வருகிறது எனும் செய்தியை போல குதூகலமாய் இருக்கிறது எந்திரன் வருகிறது எனும் செய்தி. முதல் ஷோவிற்கு கட்டுகட்டாய் பேப்பர்களை கிழித்துக் கொண்டு முன்சீட்டில் இருந்தவர்கள் தட்டிவிட தட்டிவிட மீண்டும் மீண்டும் அவர்கள் தலையில் விழுமாறு பேப்பர் குப்பைகளை போட்டு தியேட்டரையே சும்மா அதிர வைத்து சிவாஜி படம் பார்த்தது நினைவிற்கு வருகிறது. 




________________புத்தகம்


  தமிழக அரசு புண்ணியத்தில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க முடிகிறது. இது என்ன புது கதைன்னு ஆச்சரியப்படாதீங்க. ஒரு மாசமா மாலை நேரத்துல எங்க ஏரியா முழுக்க லோ வால்டேஜ் ஆகிடுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண முடியலை. வேற வழியில்லாம ரொம்ப நாளா விட்டுப்போன படிக்கிற பழக்கத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டேன். 


  ரஜினி - 3000
அஜித் / விஜய் - 2000
கலைஞர் / ஜெ / கேப்டன் - 1000
.
.
.
.
புத்தக விமர்சனம் - 150


இதெல்லாம் நான் பதிவுகளுக்கு வைத்த தலைப்பில் இருந்த சொற்களும் அதற்கு விழுந்த அன்றைய ஹிட்ஸ்களும்...
ஓரு மனுசனை இந்த உலகம் திருந்தவே விடாதா...?

Tuesday, July 6, 2010

சரக்கடிச்ச குரங்கு - போட்டோ கமென்ட்ஸ்

வாங்க வாங்க.. இதுதான் வலைமனை... எதுக்கு பிளாக் ஆரம்பிச்சோமுன்னே தெரியாத காலத்துல ஏதேதோ எழுதிகிட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் நான் போட்ட போட்டோ கமெண்ட்ஸ் நல்லா இருக்குன்னு ரெண்டு பின்னூட்டம் வந்துடுச்சு... 


ரெண்டு பின்னூட்டத்தை பார்த்த உடனே சரக்கடிச்ச குரங்கு மாதிரி போதை ஜிவ்வுன்னு ஏறி கை கால் புரியாம பதிவுலக பயணம் தொடர்ந்துகிட்டிருக்கு... அன்னிக்கு ஆரம்பிச்சது இந்த கலை.. சாரி.. கொலைப்பயணம்.... 


சரி.. சரி... தெரியாதவங்களுக்கு சின்னதா ஒரு அறிமுகம் கொடுக்கலாமேன்னுதான் இந்த மொக்கை.  


ரைட்டு. ஆமாம் இந்த போட்டோ கமென்ட்ஸ்னா என்ன..? தெரிஞ்சவங்க சொல்லிடுவீங்க.. போட்டோ கீழே கமென்ட்ஸ் போட்டா அதுதான் போட்டோ கமென்ட்ஸ்.. ஆனா தெரியாதவங்க என்ன பண்ணுவாங்க?
ஆங்... அவங்களுக்கு புரிய வைக்கதான்.. இந்த வருஷம் ஜனவரியிலிருந்து ஜுன் வரையிலான சில போட்டோ கமென்ட்ஸை இங்கே சாம்பிளுக்கு கொடுத்திருக்கேன்... படிச்சு என்ஸாய் பண்ணுங்க..


(மீள் பதிவுங்கிறதை சொல்லாம எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. ம் ம் ம்ம்...)




ஆயிரத்தில் ஒருவன்...












ஜக்குபாய்....







அசல்...





பாரட்டு விழா...














நடுவுல நிறைய ஐ.பி.எல் கமென்ட்ஸ் வருது.. அதையெல்லாம் இங்க கிளிக் பண்ணி படிச்சுக்குங்க...




























// போட்டோ கமென்ட்ஸ் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல //

இவ்வளவு நாளும் உங்களது ஆதரவை கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.... தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுங்க நண்பர்களே...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club