Monday, February 27, 2012

மம்மியின் மின்வெட்டுப் படையும் எனது மட்டன் வடையும்




அமெரிக்காவின், கென்டக்கி மாகாணத்தின் சார்பில் ஸ்டாலினுக்கு கென்டக்கி கர்னல் விருது வழங்கியிருக்கிறர்களாம். இது திட்டமிட்டு அம்மாவை வெறுப்பேற்றும் செயலாக இருக்கிறது. விரைவில் தனது மின்வெட்டு படையை அனுப்பி அமெரிக்காவிலும் இரண்டு மணி நேரம் கரன்ட்டை கட் செய்ய அம்மா ஆவண செய்வார் என நினைக்கிறேன்.

•••

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனையும், சாம் ஆன்டர்சனையும் கொண்டாடாத இணையவாசிகளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நம்மால் ஆராதிக்கப்படும் இரண்டு மாபெரும் ஆளுமைகள், விஜய் டி.வி போன்ற சின்ன டிவியில், அதுவும் 'அது இது எது' போன்ற சின்னஞ்சிறிய நிகழ்ச்சியில் தோன்றியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நீங்களாவது சாப்பிட்டு விட்டு பார்க்காமல் வெறும் வயிற்றில் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=x_V9ajs0qN8

•••

என்னை அடிக்கடி பிளாக் எழுத விடாமல் அமெரிக்க சதி நடக்கிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் இந்த விளையாட்டு எனது நேரத்தை வெகுவாக எடுத்துக்கொள்வதால், எனது இன்னபிற பணிகள் பாதிக்கின்றன.கபில் சிபிலிடம் சொல்லி இதை தடை செய்ய சொல்ல வேண்டும்.

http://apps.facebook.com/pool-live/?ref=bookmarks&count=0&fb_source=bookmarks_apps&fb_bmpos=1_0

•••

சும்மா இருக்கும் நேரங்களில் கிச்சனில் புகுந்து ஏதாவது புதியதாய் சமைத்துப் பார்ப்பதே தனி த்ரில்தான். அம்மா செய்யும் மட்டன் வடை அவ்வளவு ருசியாக இருக்கும். கடந்த ஞாயிறு அம்மாவிடம் அதன் ரெசிப்பி அறிந்து இன்னைக்கு நான் மட்டன் வடை செய்றேன் என புகுந்தேன்.  மதியம் லஞ்சுக்கு டெட்லைன் மிஸ் ஆகி மாலை ஸ்னாக்ஸிற்குதான் முடிந்தது. சும்மா சொல்லக்கூடாது பெண்டு நிமிர்ந்து விட்டது. சைஸ்தான் கொஞ்சம் முன்னே பின்னே இருந்ததே தவிர ருசி உலகத்தரத்தில் இருந்திருக்க வேண்டும். சிதறிய துண்டுகளை எறும்புகள் அலைகடலென திரண்டு வந்து ரசித்து சுவைத்து சென்றதே அதற்கு சாட்சி.



( தே.பொ : கொத்து கறி 1 கிலோ, 150 கிராம் உடைச்ச கடலை, தேங்காய் ஒரு மூடி, காய்ந்த மிளகாய் 25, சோம்பு தூள் 12 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் 250 கிராம், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை 2 கொத்து

செய்முறை : கொத்து கறியை நல்லா கழுவி பிழிஞ்சிட்டு, தேங்காய்,உ.கடலை, மிளகாய், மஞ்சள் தூள் உப்பு, எல்லாம் போட்டு அரைச்சிட்டு, அது கூட சி.வெங், சோம்பு, கறிவேப்பலை கலந்து சுட வேண்டியதுதான்.)


 கடந்த வார மட்டன் வடையின் மெகா வெற்றியை தொடர்ந்து நேற்று ஏதாவது புதியதாய் செய்யலாம் என நினைத்தால், இந்த வாரம் கிச்சனுக்குள்ளேயே விட மறுத்துவிட்டார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் பயப்படும் அரசியல்வாதிகள் போல, ஆண்கள் கிச்சனுக்குள் நுழைந்தால் எங்கே நாம்  டெப்பாசிட் இழந்துவிடப்போகிறோம் என பெண்களும் பயப்படுகிறார்கள் என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

பி.கு.:- எனக்கு சமையல் கலை பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லையென்பதால் பெண் பதிவர்கள் நிம்மதியாக இருக்கலாம்.

•••

நம்ம சினேகா அக்கா ஆசிர்வாத் விளம்பரத்துல ஃபுல்கா எப்படி போடுறதுன்னு சொல்லிக்கொடுத்ததும் போதும்,  என்னால நிம்மதியா சப்பாத்தி போட முடியலை. அதே மாதிரியே உப்ப வைக்கனும்ங்கிற வெறியில சில பல சப்பாத்திகள் தீக்கிரையாயிடுச்சு. எப்படியும் கூடிய சீக்கிரம் ஜெயிச்சிடுவேன். அடுத்த பதிவில் அந்த போட்டோவை எதிர்பார்க்கலாம்.

•••

பதிவை எப்படியாச்சும் தேத்தி நிரப்புவதற்கு உதவியாக இருக்கிறது நாம் அவ்வப்போது போடும் டிவிட்டர், பேஸ்புக் நிலைத்தகவல்கள். வாழ்க சோஷியல் நெட்வொர்க்ஸ்..!!

எனது சமீபத்திய ட்வீட்ஸ் :-

கொள்ளையடிக்கிறதா இருந்தா ஏதாவது பெரிய பதவியில இருந்துக்கிட்டு செய்யனும். இல்லைன்னா இப்படித்தான் அடிச்ச பணத்தை அனுபவிக்க முடியாது # என்கவுன்ட்டர்

சம்பளத்தை நூறு நூறு ரூபாயா தெனம் ஏ.டி.எம் போய் எடுப்பதால என் முகம் எல்லா கேமராவுலயும் பதிஞ்சிருக்கும். நோட்டம் விட டெய்லி வரான்னு போட்டுறாதீங்கப்பா

வங்கி கொள்ளை - துப்பு கொடுத்தால் 1 லட்சம் பரிசு # பார்த்துங்க போலீஸ்கார்... துப்பும் அவங்களே கொடுத்து இந்த பணத்தையும் ஆட்டய போட்டுற போறாங்க...!

சென்னை நிருபர்கள் மோசம், சின்னச்சின்னப் பசங்களா இருக்காங்க-ராமதாஸ் #  ஏனுங்க,தைலாபுரம் தோட்டத்துல புகுந்து மாம்பழம் ஏதும் பறிச்சிட்டாங்களா?

சம்பளம் வாங்கியவுடன் உணர்ச்சிவசப்பட்டு போட்ட 500 ரூபாயை உண்டியலை உடைக்காமல் வெளியே எடுக்க முயல்வது பெரும் சவாலாக இருக்கிறது # மாசக்கடைசி

ஜட்ஜஸ்னு சொல்லிக்கிட்டு அப்படி ஆடியிருக்கலாம் இப்படி பாடியிருக்கலாம்னு டார்ச்சர் பண்றவங்க மேல எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாதா?

•••

கடந்த வாரம் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்ட வீடியோ இது. மணப்பெண் கல்யாண கூடத்திற்குள் செம க்யூட்டாக நுழையும் காட்சி.  பாடல்களுக்கேற்றவாறு நளினமான டான்ஸ் மூவ்மென்டில் மணப்பெண் அசத்துகிறார். அருமையான ஐடியா..!!





Monday, February 20, 2012

பவர் கட் பண்ணும் ஜெ- பிளான் போடும் கேப்டன்


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல
















Monday, February 13, 2012

வலைமனை | ஃபீலிங்ஸ் 13 02 12





து கடந்த வாரம் வியாழன் அன்று சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை அருகே என் மொபைலில் எடுத்த படம். பத்து மணியை தாண்டியும் தெரு விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன.  தவறு செய்வது மனித இயல்புதான் என்றாலும், தினசரி மின்வெட்டை மட்டும் வினாடி சுத்தமாக நிறுத்தும் அளவிற்கு கடமை உணர்ச்சியோ தொழில்நுட்ப புரட்சியோ உடைய மின்சார வாரியத்தினர், தேவையில்லாமல் மின்சாரம் பாழாகும் இதுபோன்ற நிலைகளையும் கொஞ்சம் கவனிக்கலாம்.


கொலைவெறி ஹிட் கொடுத்த தனுஷ்ஷின் கலைவெறி தாகத்திற்கு பூஸ்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்?  ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்பதே ரிப்போர்ட். கொலைவெறிக்கு டிவிட்டரில் கிடைத்த பாசிட்டிவ்வான வரவேற்பு அதை அகில உலக ஹிட் ஆக்கிய நிலையில் பூஸ்ட் தயாரிக்க, தனுஷ் வெளியிட்ட சச்சின் ஆந்தமுக்கு அதே டிவிட்டரில் நெகடிவ் ரெஸ்பான்ஸே அதிகம் இருந்தது. 


எனக்கென்ன இந்தப் பாட்டில் கோபம் என்றால்,  கட்டம் போட்ட சட்டை, கழுத்துல டாலர் எல்லாம் மாட்டிவிட்டு அழகான அனுஷ்காவை மொக்கை பண்ணதுதான். நீங்களே பாருங்க.. டக்குனு பார்த்தா அனுஷ்காவும் தனுஷ் மாதிரியே இல்ல?


வாழ்க்கையிலேயே முதல்முறையாக சன் டி.வியை ம்யூட் பண்ணி பார்க்க வேண்டியதான நிலைமையை நமது நட்சத்திர கிரிக்கெட் தந்தது. நொய்யான் நொய்யான் என்ற நிறுத்தாத பேச்சு, அதிகப்படியான ஆங்கில கிரிக்கெட் பதங்களினால் போட்டியை ரசிக்க முடியவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஐடியா. 

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே நமது அருமை அண்ணன் சரத்குமார்தான் சிறப்பாக செயல்படுகிறார் என நினைக்கிறேன். இரண்டு வருடங்களாக தமிழர்களுக்காக போராடி நட்சத்திர கிரிக்கெட்டில் கோப்பை வாங்கி தந்திருக்கிறார். இன்னும் 3 வருஷமும் நல்லா வெளையாடுங்கண்ணே...

ன்றாக இருக்கிறதே என நண்பன் படத்திற்கு குடும்பத்தோடு கூட்டிச்சென்றால் திரும்பி வந்து அம்மா, அக்கா எல்லோரும் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். பிரசவ காட்சியில் கும்பலா நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க.. இப்படியா அசிங்கமா படம் எடுப்பாங்க என்பது உள்ளிட்ட கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விஷயத்தையெல்லாம் மகளிர் சங்கங்கள் கூட எதிர்க்கலையே என உள்ளுக்குள் வியந்து கொண்டேன். ஒருவேளை இதனால்தானோ என்னவோ மற்ற ஷங்கர் படங்களையெல்லாம் விட வெகு சீக்கிரமாக நண்பனுக்கு பொதுமக்களிடையே மவுத் டாக் குறைந்துவிட்டது? 



Friday, February 10, 2012

ஹி ஹி வலைமனை முக்கிய செய்திகள்






மின்வெட்டால் 40 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசின் சாதனை -  கலைஞர் 

# ச்சே.. மிஸ் ஆயிடுச்சு தலைவரே.. இதுவே நம்ம ஆட்சின்னா இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தியிருக்கலாம்..


உள்ளாட்சி மன்ற தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்துள்ளன - கலைஞர்

# விடுங்க தலைவரே சின்னப் பசங்க.. என்ன இருந்தாலும், போட்டியில் கலந்து கொண்ட சான்றுதான் வாங்கியிருக்காங்க.. போன தபா நாம உள்ளாட்சி தேர்தல் நடத்துனப்போ ஆல் கேட்டகரியிலும் அவார்டே வாங்குனோமே...


நிதியமைச்சர் என்கிற முறையில் என் தூக்கமே போச்சு - பிரணாப் 

# அதுக்காக.. எல்லோரும் பிரதம மந்திரி ஆக ஆசைப்பட்டா எப்படி??


ஜெயலலிதா யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவரே பிரதமர் ஆவார். - ராமராஜன்

#  அப்போ,  ஜெயலலிதாவையே சுட்டிக்காட்டுனாரே கேப்டன் அவர் என்ன ஆவாரோ...??


எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாத விஜயகாந்த் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக அவரது பெயரை உச்சரித்து வருகிறார். - நடிகர் ராமராஜன்

#  10 நாள் சஸ்பெண்டு பண்ணதுக்கு பதிலா மேதை படத்தை 10 வாட்டி பாக்க வச்சிருக்கனும்ணே.. அப்பத்தான் அவரு திருந்துவாப்புல..


என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற முழக்கம்தான் இப்போது ஒலிக்கிறது -  விஜயகாந்த்

# கேப்டன்.. ரைட்டருக்கு ஏதும் சம்பள பாக்கிங்களா...??  விருதகிரி படத்தை விட இந்த வசனம் மொக்கையா இருக்கே... 


இலங்கை அணிக்கு எதிராக பெர்த் போட்டியில் வென்ற பிறகு தோனி கூறுகையில் வீரர்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், குறிப்பாக காயங்கள் அடையாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று கூறினார்.

# ஆமாமா.. இல்லைன்னா ஐ.பி.எல்ல விளையாட முடியாது..


இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். - இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே

#  அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு...இந்த ஆஸ்திரேலியா பசங்க உங்களை மாதிரி இல்லைண்ணே.. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

# ம்.. ஆமா ஆமா.. பாவம்ங்க.. அந்த பாட்டை பார்க்கும்போது நம்மளுக்கே பதறுதே.. சம்பந்தப்பட்ட சச்சின் மனசு என்னா பாடுபடும்..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club