Wednesday, December 29, 2010

Tuesday, December 28, 2010

பதிவர்களுக்கு புத்தாண்டு பரிசு - பிளாக் டைட்டில் பேனர்

நெடுநாளாக செய்யவேண்டும் என நினைத்திருந்த பணி இது. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என்னால் இயன்ற ஒரு சிறு புத்தாண்டு பரிசாக அவரவர் வலைப்பூவிற்கான பேனரை செய்து அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

தங்கள் வலைப்பூவில் தலைப்பு பேனர் விரும்புகிறவர்கள் கீழ்கண்ட பத்து வடிவங்களில் தாங்கள் விருப்பப்படுவதை தேர்ந்தெடுத்து, உங்கள் வலைப்பூ பெயர் (உ.தா.:- வலைமனை), அதன் கீழே வர விரும்பும் டேக் லைன் அல்லது வலைப்பூ முகவரி (உ.தா. புண்பட்ட மனதை புன்னகை விட்டு ஆற்றுவோம்), அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி முதலிய தகவல்களை பின்னூட்டமிடுங்கள்.

பேனர் பெற விரும்பும் நண்பர்கள் 2011 ஜனவரி 2ம் தேதிக்குள் பின்னூட்டமிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடிய விரைவிலாக (பொங்கலுக்குள்) பின்னூட்டமிடும் வரிசைப்படி பேனர்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் வெவ்வேறானவற்றில் எதிலிருந்தும் எழுத்து வடிவத்தையோ, பின்புற தோற்றத்தையோ கலவையாக சேர்த்துப் பெற விரும்பினாலும் தகுந்த எண்களோடு குறிப்பிடுங்கள்.

பேனர் பெற விரும்பி தகவல்களை அளித்து நண்பர்கள் இடும் பின்னூட்டங்கள் வெளியிடப்பட மாட்டாது. தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி....!!


பேனர் 1


பேனர் 2


பேனர் 3 


பேனர் 4


பேனர் 5


பேனர் 6


பேனர் 7


பேனர் 8


பேனர் 9


பேனர் 10




Monday, December 27, 2010

2010 - அசத்திய அஜித் அலைக்கழித்த விஜய்







சினிமாத்துறையில என்றென்றுமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. 2010ம் அதற்கு விதிவிலக்கல்ல. சில எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வியைத் தழுவின.  சில மீடியம் பட்ஜெட் படங்கள் வெற்றியடைந்தன.

எந்திரன் இவ்வருடத்திலேயே அதிகமாக பரபரப்பை கிளப்பிய திரைப்படம். பாராட்டுக்கள், எதிர்மறை விமர்சனங்கள் என இரண்டு விதத்திலும் அலசப்பட்டது.

தங்களது ஒரே படம் சரியாக போகாவிட்டாலும் அஜித் மற்றும் விஜய் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். என்னை மிரட்டுகிறார்கள் என எல்லோரையும் அஜித் அசத்தியது இவ்வருடத்தின் சினிமா சர்ச்சைகளில் ஹைலைட். அதே போல் ஆளுங்கட்சியை அவ்வப்போது அமைதியான அரசியல் ஸ்டண்டுகளினால் விஜய் அலைக்கழித்ததும் நான் ரொம்பவும் ரசித்த கில்லியான விஷயம்.  (என்னதான் கலாய்த்தாலும் ரசிகர்களைப் போல நமக்கும் அவர் மேல பாசம் இருக்குல்ல)

2010ம் வருடத்தை மேலும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் விதத்தில் இந்த வருடம் நான் பதிவிட்டிருந்த போட்டோ கமெண்ட்ஸில் சினிமா சம்பந்தப்பட்டவைகளில் சிறந்தவை சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.. தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....


போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல...

பரபரப்பை கிளப்பிய ஆயிரத்தில் ஒருவன்












ஜக்குபாய் பிரஸ்மீட்









அசல் புகை ஆர்ப்பாட்டம்










பாசத்தலைவனுக்கு பாராட்டு...












ஹி..ஹி..



























ரா.. ரா.. ராவணன்



















மதராசப்பட்டிணம்..













எந்திரன் ஃபீவர்



































விருதகிரி வருது சிரி





மிக விரைவில்...






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club