Monday, November 29, 2010

கலைஞர்ஜி யூ ஆர் ரியலி கிரேட்



/// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. புகைப்படங்கள் பெறப்பட்ட பல்வேறு இணையதளங்களுக்கு நன்றி ///



"ஒரு செல்லோ டேப் போட்டு எல்லோரையும் ஒட்டி வைச்சேன்.. ஆனா ஒரு ஆடியோ டேப் வந்து இப்போ பிச்சிக்கிச்சி... மறுபடி ஒரு குரூப் போட்டோ எடுத்து சுபம் போட்டாதான் வேலைக்காகும் போல...!"



"மிஸ்டர் சிங்... Yes We Can..."

"ஒபாமாஜி..... எந்த ஒப்பந்தத்தைப் பற்றி என்கிட்ட சொல்லப்போறதா இருந்தாலும் முதல்ல Yes னு முடிவை நீங்களே சொல்லிக்கிறீங்க பார்த்தீங்களா... பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!!"


"டாடி.. பாடல் வெளியிட்டு வாரம் ஆச்சு... இன்னும் தாத்தாகிட்ட இருந்து மன்மதன் அம்புக்கு வாழ்த்துச் செய்தி வரலை.... ஒரு ரிமைண்டர் போடுறீங்களா....?"

"இப்போதான் புரியுது கலைஞர்ஜி.. நீங்க ஏன் தந்தி, கடிதம்னே இருக்கீங்கன்னு... ஒரு பய ஒட்டு கேட்க முடியாதுல்ல.... ரியலி யூ ஆர் கிரேட்...!!!"

"இப்போதைக்கு இரட்டை இலையை விட இந்த கை சின்னத்தை காண்பிச்சாதான் மிரள்ராய்ங்க... எலக்சன் வருது கண்ணுங்களா... தீயா வேலை செய்யனும்...!!"


"மிஸ்டர் சிங்.. நீங்க கொடுத்த மைசூர் போண்டா உள்ள மைசூரே இல்லையே..."

"இது ரொம்ப பழைய ஜோக்கு மிஸ்டர் பிரசிடென்ட்... நீங்க போட்ட அணு ஆயுத ஒப்பந்தத்துல கூட தான் அணுவே இல்லை..  நான் அதெல்லாம் கேட்டுக்கிட்டா இருக்கேன்... சும்மா பாட்டு கேட்கையிலே டிஸ்டர்ப் பண்ணிகிட்டு.."



Saturday, November 27, 2010

விருதகிரி வரப்போகுது வெற்றியை தரப்போகுது


/// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. புகைப்படங்கள் பெறப்பட்ட பல்வேறு இணையதளங்களுக்கு நன்றி ///


"ஹே யாரப்பா அது...? 'விருதகிரி' போஸ்டர் மேல எல்லாம் 'வருது சிரி'ன்னு எழுதிட்டு ஓடுறது...? ஆளுங்கட்சியின் சதிவேலைன்னு அறிக்கை விட்டுருவேன் சாக்கிரதை...ஆங்...."


"படத்துல கதையே இல்லைனனு யாராவது விமர்சனம் எழுதிட்டா என்னங்க பண்றது..?"

"நான் என்ன வெவரம் புரியாதவனா...நல்ல திட்டங்களை சொன்னா கலைஞர் காப்பி அடிச்சிடுவாருங்கிற மாதிரி.. கதையை சொன்னா கலைஞர் பேரன்கள் காப்பி அடிச்சி படம் எடுத்துடுவாங்க..  அதான் படத்துல கதை வைக்கலைன்னு சொல்லிடுவேன்ல.. !!!"

அடுத்த வருஷம் தேர்தல்ல மட்டும் கூட்டணி வைக்கலை... இவரு தலையில ஒரு பேன் மாட்டிக்கிட்டா எப்படி பேலன்ஸ் இல்லாம தள்ளாடுமோ.. அப்படி நம்ம கட்சி தன்னந்தனியா திண்டாடிடும்...



"என்னால உங்க நாடகத்துக்கு வர கூட்டம் குறைஞ்சிடுச்சா... என்ன சொல்றீங்க சார்....?"


"ஆமாங்க கேப்டன்..  இப்பல்லாம் உங்க நெஞ்சுல குண்டு பட்டு ரிவர்ஸ்ல சுட்டவனையே கொல்ற சீனை யு-டியூப்ல பார்த்துகிட்டு வீட்டுக்குள்ளயே கிடந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிறாங்க...."






"ஆங்.. என்ன தாயி சொல்ற.. அடுத்த எலக்ஷன்ல மெஜாரிட்டி ஓட்டு நமக்குதானா...?? எப்படி ?"


"விருதகிரி பார்க்க வர்றீங்களா.. இல்லை ஓட்டுப்போடுறீங்களான்னு மக்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேளுங்க போதும்....!!!!"




"விருதகிரிக்கு தியேட்டர் கிடைக்க விடாமல் அரசு சதி செய்கிறது..."


மக்கள் :
"ம்ம்.. பரவாயில்லை.. இந்த ஒரு விஷயத்துலயாவது... மக்களுக்கு ஆபத்து வர்றதுக்கு முன்னாடியே நடவடிக்கை எடுக்குதே அரசாங்கம்....."

Friday, November 26, 2010

போட்டோ கமெண்ட்ஸ் போட்டு பதற வைத்த பதிவர்கள்



சென்ற மாதம் சில புகைப்படங்களை கொடுத்து நண்பர்களிடம் கமெண்ட் கொடுக்குமாறு கேட்டிருந்தேன். பல நண்பர்கள் புதுமையான நகைச்சுவைகளை அள்ளி வீசி பதற வைத்து விட்டார்கள். அவற்றில் சிறந்த, யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையாக எனக்கு பிடித்த கமென்ட்டுகளை கீழே கொடுத்திருக்கிறேன். கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசாக வலைப்பூ டைட்டில் பேனர்கள் விரைவில் மின்னஞ்சல் தேடி வரும். வாழ்த்துக்கள்!!!!










தங்கள் ஆதரவிற்கு என்றென்றும் நன்றி!!!



Thursday, November 25, 2010

மந்திர புன்னகை - முக்கால்வாசி கிணறு












ண்மையிலேயே வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ள இன்டிரஸ்டிங் சப்ஜெக்ட். கதிர் என்னும் ஆர்க்கிடெக்ட். சிறுவயதில் தன் தாயின் தவறால் டில்யூஷனில் வாழ்பவர். நேரடியாகவும், தடாலடியாகவும் ஒளிவு மறைவின்றி வாழும் இவர் மேல் காதல் கொள்கிறார் கதாநாயகி. இவரது டில்யூசனால் இவர்களது காதலில் பிரச்சினை ஏற்பட, பின்னர் அந்த காதலே அவரது குறையை போக்க எப்படி உதவுகிறது என்பதுதான் கதை. படத்தில் பிளாஷ்பேக், டிவிஸ்ட்டுகள் இருப்பதால் இதற்கு மேல் கதையை சொன்னால் படம் பார்க்கும்பொழுது சஸ்பென்ஸ் இருக்காது. 


முக்கால்வாசிக்கும் மேலான நேரம் படம் செல்லும் வேகமே தெரியவில்லை. கதிராக வரும் கதாநாயகனின் கேரக்டரைசேஷனை படிப்படியாக வலுப்படுத்தியும், காட்சிகளுக்கு தம்பி ராமையா, சந்தானத்தின் ரகளைகளால் உரமிட்டும், பார்லர்களில் பல நூறு மணி நேரங்கள் ப்ளீச் செய்யப்பட்ட பளிச் முகத்துடனான மீனாட்சியை காண்பர்கள் மனதுக்கு இதமாக உலவ விட்டும் முதல் பாதி பரபரவென பறக்கிறது. இரண்டாம் பாதியில் கதிரின் தடாலடியான மன நிலைக்கான காரணங்களை சொல்லி சில டிவிஸ்ட்களை தரும் வேளையில் கதை 'அட' போட வைக்கிறது.  அடுத்தடுத்து நாயகனை விடாத நாயகி, பணிந்து கொடுக்காத நாயகன் கடைசியில் வேறு வழியில்லாமல் சுபமான கிளைமேக்ஸ் என முடிவில் மட்டும் கொஞ்சம் சமரசம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.


    ஷட்டர் ஐலண்ட், தி சிக்ஸ்த் சென்ஸ் படங்களில் வருவது போன்ற சஸ்பென்ஸ் உத்தி ஒன்றினை இயக்குனர் இப்படத்தில் கையாண்டுள்ளார். இரண்டாம் பாதியில் அதைப்பற்றி அறிகையில் முதல் பாதியில் சம்மந்தப்பட்ட காட்சி அமைப்புகளை யோசித்து ரசித்தேன். உதாரணத்திற்கு முதல் பாதியில் இரவு உறங்கும் முன் அப்பாவிடம் பணம் எடுத்துக்கொள் என வைத்துவிட்டு படுப்பதும்.. காலையில் கிளம்பி விடும் அப்பா அதை எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டிருப்பதும்!  அதேபோல் பாட்டியிடம் கல்யாண செய்தி சொல்லும்பொழுது அப்பா அங்கே இல்லாமல் திண்ணையில் தனியாய் இருப்பது என குறிப்பிட்ட காட்சிகைளை கவனமாக செய்திருக்கிறார்கள். 




     தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கதாநாயகன், காதலில் நம்பிக்கை இல்லாதவன்.. அவனுக்கே ஒரு பெண் மீது காதல் வருகிறதெனில் அந்த பெண் பாத்திர தேர்வு எவ்வளவு முக்கியமானது? மீனாட்சி தன் முக்கியதுவத்தை உணர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படம் முழுவதும் பளிச்சென பிரஷ்ஷாக இருக்கிறார். இதனால் எனக்கு மீனாட்சியை பார்க்கும்பொழுது ஒரு ஃபீல் குட் உணர்வு எழும்புகிறது. அவரது கிளாமரை மட்டும் நம்பி இருக்காமல் திரையில் கணிசமான ஒதுக்கீடு அவரது நடிப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் பல இடங்களில் ஸ்லிப் ஆகும் லிப் சிங்கிங் வழக்கமான வடக்கத்திய கதாநாயகிகளை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 


    படம் நெடுகிலும் ரசிக்க வைக்கும், ஷார்ப்பான வசனங்கள் கொட்டிக்கிடக்கின்றது.  பல ஊறிப்போன கான்செப்டுகளை போட்டு பட்டென உடைக்கும் பல வசனங்கள் சிரிப்பையும் வரவழைக்கிறது சில அதிர்ச்சியையும் வரவழைக்கிறது. பலமான சிரிப்பலைகளை வரவழைத்து படத்தின் பெரிய பலமாக இருப்பது சந்தானம்தான். டபுள் செஞ்சுரி அடிக்கும் வேளையில் சச்சினுக்கு வாய்ப்பு வழங்காமல் காஜ் ஆடிய தோனி போலல்லாமல் இயக்குனர் இவருக்கு அதிக வாய்ப்பு வழங்கியிருப்பது புத்திசாலித்தனம். அதிலும் சந்தானம் ஜோடி போட்டு காமெடியில் கலக்கியிருக்கிறார். மனைவிக்கு புடவை வாங்கி தருவது, ஊரிலிருந்து வரும் சொந்தங்கள் என கொஞ்சம் லென்த்தியான காமெடி போர்ஷன்கள் ஸ்டராங் சப்ஜெக்ட்டான படத்தை இலகுவாக மனதில் குடியமர்த்துகிறது. ஆனால் சந்தானத்தின் சில தேவையற்ற ஆபாச வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். 


    எதற்கும் அலட்டிக்கொள்ளாத ரோலில் அசால்ட்டாக நமது ஹாஸ்டல் ரூம் மேட் நண்பன் போலவே எளிமையாய் இருக்கிறார் கரு.பழனியப்பன். படம் நெடுகிலும் குடித்துக் கொண்டும், பிற ஹீரோக்கள் தயங்கக்கூடிய வசனங்களை சரளமாக பேசிக்கொண்டும் அசாதாரண ஹீரோ ரோலை சாதாரணமாக செய்து முடித்திருக்கிறார் இவர். அப்பா கேரக்டர்,  தம்பி ராமையா,  மகேஸ்வரி, பிளாஷ் பேக்கில் வரும் சேகர் கேரக்டர், அம்மா கேரக்டர், டீலா நோ டீலா ரிஷி  இவர்களது நடிப்பு நன்றாக இருக்கிறது. கதையின் முக்கியமான டாக்டர் கேரக்டர், கதாநாயகியின் அண்ணன் ஆகியோர் இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாம். கண்டிப்பாய் டாக்டர் கேரக்டரை கொஞ்சம் ஹெல்த்தியாய் கம்பீரமாய் வடிவமைத்திருக்கலாம்.


    "அன்பில்லாம..." பாடல் வேகமான பீட்டுகளினாலும் படத்தின் கதைக்கருவுடன் சம்பந்தப்பட்ட தீம் பாடல் என்பதனாலும் படத்தில் தனித்து மனதில் நிற்கிறது.  "தட்ட தட தட" அழகான காதல் மெலோடி. பாடலின் பின்னணியில் ஏற்படும் ஸ்லோமோஷன் அதிர்வு ஒளிப்பதிவு நல்ல ஐடியா.  "தண்ணி போட வாப்பா..." பாடலும் நல்ல டியூன் ஆனாலும் அதில் இன்னும் கொஞ்சம் நடன அமைப்புகளை அமைத்திருந்தால் பாடல் அட்டகாசமான குத்து பாடலாய் இருந்திருக்கும். அப்புறம் மேகமோ என்னவோ ஒரு பாடல் வருகிறது. அது இழுக்கிறது.


    ரொம்பவும் திடமான கதாபாத்திரமாக ஹீரோவை காட்டிவிட்டு கிளைமேக்சில் நாலு லைன் கதாநாயகி பேசிவிடுவதால் திடீரென மாறிவிடுவது மட்டும் ரொம்பவும் இடிக்கிறது. என்னைப்போன்ற சாதாரண பெருவாரியான ரசிகர்களுக்கு இத்தகைய ஹேப்பி எண்டிங் இல்லாவிட்டால் நைட் சோறு எறங்காதுதான். ஆனால் ஆரம்பம் முதலே மிரட்டி வந்த இப்படத்தில் வேறு ஏதாவது மிரட்டலான கிளைமேக்ஸ் எதிர்பார்த்தேன். 


   முதல் பாதி அதிரடியாகவும், இரண்டாம் பாதியில் பாதி நேரம் நல்ல டிவிஸ்ட்களுடனும் என்று முக்கால்வாசி கிணறினை பிரமாதமாக தாண்டியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் செய்து கொள்ளப்பட்டுள்ள கமர்ஷியல் காம்ப்ரமைஸ் மட்டும் படத்தின் தீம் உடன் ஒட்டவில்லை. எனினும் மொத்தத்தில் எடுத்துக்கொண்டுள்ள வித்தியாசமான களத்திற்காகவும்,  சுவாரஸ்யமாக கதை சொல்வதினாலும், கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் மந்திர புன்னகை!


___________


பதிவர்களுக்கென ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல்முறை. படத்தின் களத்தைப்போலவே இத்தகைய புதுமையான யோசனையை நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்!! பதிவர்களை பதிவிலும் தொலைபேசியிலும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்த பதிவர் உண்மைத்தமிழன் அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!!!



Thursday, November 4, 2010

வ குவாட்டர் கட்டிங்கை புறக்கணிப்போம்

// அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. //


யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு படத்துக்கு பப்ளிசிட்டி வரும்னு இம்மாம் பெரிய சாராய பாட்டிலை  போட்டு விளம்பரம் பண்ணா.... ஒருத்தர் கூட வ குவாட்டர் கட்டிங்கை புறக்கணிப்போம்னு சொல்லலையே... 

சார்.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க ப்ளீஸ்..
"காவலனுக்கே ஒரு காவலன் தேவைப்படுகிறதே.. ஆச்சரிய குறி"ன்னு
எவனாவது கலாய்ச்சு ஜோக் போட்டுற போறான்...

ஆஹா..  வழக்கம் போலவே தல படம் 'போஸ்டர்'
சூப்பரா இருக்கே.... எப்பவும் போல இதை மட்டும் நல்லா பண்ணி 'தல'யை ஏமாத்திடாதீங்கப்பா...




'மன்மதன் அம்பு' படமே இன்னும் ரிலீசாகலை..
அதுக்குள்ள ஆஸ்கார் பிலிம்ஸ் எடுக்குது.. சன் பிக்சர்ஸ் எடுக்குதுன்னு
'மருதநாயகம் வம்பு'க்கு போயிட்டாங்க..



வர வர இந்த எஸ்.எம்.எஸ் ஜோக்ல கலாய்க்கிறவனுங்க தொல்லை தாங்க முடியலைங்க...  "எஸ்.டி.ஆர்னு பேரை மாத்துனது நல்லா இருக்கு. அப்படியே ஊரையும் மாத்திட்டீங்கன்னா ரொம்ப நல்ல்ல்ல்லா இருக்கும்"னு எவனோ அனுப்பி இருக்கான்...


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....













LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club