முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதல்வர் என்றும், கூடங்குளம் பிரச்சினை குறித்து அவரது வழிகாட்டுதல் தனக்கு தேவை என்றும் பிரதமர் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறியுள்ளார்.
இல்லாதவங்க இருக்கிறவங்களைப் பார்த்து பாராட்டுறதுக்கும் ஒரு மனசு வேணும் பிரதமரே.. நல்ல மனுஷனய்யா நீர்...
★
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடுமா அல்லது பேச்சுவார்த்தை நடத்துமா என கூட்டணி கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.
விருந்துக்கு வந்தோமா சாப்பிட்டு கிளம்புனோமான்னு இல்லாம பொதுத்தேர்தல்ல எங்க மம்மி 200 பிளஸ் சீட்டு தனியா ஜெயிச்சும் இன்னும் கூட்டணில ஒட்டிக்கிட்டு இருக்கீங்களே... அடிச்சு விரட்டாம போவ மாட்டீங்களா நீங்க எல்லாம்.... கௌம்புங்கைய்யா...
★
நீண்ட காலத்திற்குப் பின் சுயேச்சையாக காங்கிரஸ் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
நாங்கூட இப்படித்தான்... பத்தாங்கிளாஸ் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்... அப்புறம் இப்போ பரவாயில்லை.. சரியாயிடுச்சு...
★
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக அழைக்காமலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் பின்னால் ஓடுகிறது - கலைஞர்
நாம என்னா நிலைமையில இருந்தாலும் நக்கலடிக்கிறதை மட்டும் விட்டுக்கொடுக்கவே கூடாதுங்கிறதை நகைச்சுவை பதிவர்கள் எல்லோரும் உங்ககிட்டதான் கத்துக்கிறோமுங்க ஐயா....
★
தே.மு.தி.க கூட்டணிக்கு வந்தால் 51% இடங்கள் தர தயார் - காங்கிரஸ்
ஹா..ஹா..ஹி..ஹி.. ஹு...ஹு.... மீதி 49% பர்சென்ட் வச்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க...?? அதையும் வேற கட்சியை கூப்பிட்டு கொடுக்கலாம்ல...?
★
கடவுளை படைத்தவர் விஜய் னு ரசிகர்கள் பேனர் வைக்கப்போய் அதனால எதிர்ப்புகள் கிளம்ப, பிரஸ் மீட் வச்சு இப்படி பேசுகிறார்.
"முடிந்து போன போஸ்டர் விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழினம் ஒன்றேதான். "
ஸ்ஸ்ஸ்ப்பபா... இவ்ளோ பெரிய பஞ்ச் புராணத்துக்கு 'கடவுளை படைத்தவர் விஜய்'னு ஒரே லைன்ல பேனர் வச்ச உங்க ரசிகர்கள் எவ்வளவ்வோ பரவாயில்லைங்ண்ணா...
9 comments:
உங்கள் பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
///நாம என்னா நிலைமையில இருந்தாலும் நக்கலடிக்கிறதை மட்டும் விட்டுக்கொடுக்கவே கூடாதுங்கிறதை நகைச்சுவை பதிவர்கள் எல்லோரும் உங்ககிட்டதான் கத்துக்கிறோமுங்க ஐயா....
/////
ஹி ஹி ஹி ஹி...
#வடை
//நீண்ட காலத்திற்குப் பின் சுயேச்சையாக காங்கிரஸ் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
நாங்கூட இப்படித்தான்... பத்தாங்கிளாஸ் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்... அப்புறம் இப்போ பரவாயில்லை.. சரியாயிடுச்சு...//
ஹா...ஹா.. ஹா. சிரிச்சு முடியலை. :))))))))))
அந்த தகிடு தத்தத்துக்கு தான் அவருக்கு அப்படி ஒரு பேர் வச்சிருக்காங்கோ
அருமை.
:-)
கலக்கல். செய்திகளை தொடருங்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக அழைக்காமலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் பின்னால் ஓடுகிறது - கலைஞர்
நாம என்னா நிலைமையில இருந்தாலும் நக்கலடிக்கிறதை மட்டும் விட்டுக்கொடுக்கவே கூடாதுங்கிறதை நகைச்சுவை பதிவர்கள் எல்லோரும் உங்ககிட்டதான் கத்துக்கிறோமுங்க ஐயா....
அடக்கமாட்டாமல் சிரித்தேன் !!!
super!
Neenda kalathukku pin... comedy padichittu...rombave sirichitten! Office nerathule saththam pottu sirichadhukku boss, oru mathiriya moraikiraaru!
Raaj
Post a Comment