Wednesday, March 28, 2012
ஹி ஹி.. வலைமனை முக்கிய செய்திகள் | 28 3 12
"தென்கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். முதலீட்டாளர்களின் குறைகளை களைவதிலும், தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது"
- மன்மோகன் சிங்
ஆமா சார்.. உலகத்திலேயே தொழிற்சாலைகளுக்கு 'மின் விடுமுறை' அளிக்கிற ஒரே கம்பெனி எங்க கம்பெனிதான்... வாங்க சார்.. வாங்க சார்.. வந்து இன்வெஸ்ட் பண்ணுங்க சார்..
"பட்ஜெட் அறிவிப்பில் அம்மா அம்மா என்கிற அர்ச்சனையே மேலோங்கி இருந்தது."
- கலைஞர்
சின்னப்பசங்க.. ஏதோ அர்ச்சனைதான... பண்ணிட்டு போறாங்க விடுங்கய்யா.. ஆனாலும் நம்ம ஆட்சியில பாராட்டு விழா நடத்தி உங்களுக்கு அபிஷேகமே பண்ணோமே.. அதை யாராச்சும் பீட் அடிக்க முடியுமா..?
"அ.தி.மு.க தொண்டர்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்."
- அம்மா
இதைவிட நீங்க ஒண்ணு பண்ணலாம்.. உங்க தொண்டர்களை, அங்கங்க ஜெனரேட்டர் ஒண்ணு வச்சி, 'மின்சார பந்தல்' வைக்க சொல்லலாம். சட்னி அரைக்கிறவங்க மிக்ஸி எடுத்து வந்து அரைச்சிக்கலாம், செல்போன் சார்ஜ் பண்றவங்க பண்ணிக்கலாம், சீரியல் இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம தவிக்கிறவங்க டி.வி எடுத்து வந்து போட்டு பார்த்துக்கலாம். ஆனா கலைஞர் டி.வி பார்க்கவோ, கலைஞர் கொடுத்த டி.வியில் பார்க்கவோ மட்டும் அனுமதி இல்லைன்னு போர்டு போட்டுருவோம்.
எதிர்கட்சிக்காரங்க (குறிப்பா அந்த நாக்கு மடிப்புக்காரர்) இந்த ஐடியாவை யூஸ் பண்றதுக்குள்ள.. நீங்க பண்ணிடுங்க மேடம்..
"பூமி நேரத்திற்காக வரும் மார்ச் 31ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைத்து வையுங்கள்"
- தனுஷ்
யாரும் டென்சன் ஆகாதீங்க.. அண்ணன் இன்வெர்ட்டர் வச்சிருக்கிறவங்களை சொல்றார்.
"நிதிநிலை அறிக்கையில், மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் சரியான பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படவில்லை"
- விஜயகாந்த்
'சொந்தக்காலில் நிக்காம.. உங்களை மாதிரி சுவத்துல ஒரு கால் வச்சா நிக்கிறாய்ங்க...?'ன்னு ஆளுங்கட்சி கிண்டலடிக்கப்போறாங்க கேப்டன்..
"மக்கள் வரிச்சுமையை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டிற்காக முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
- சரத்குமார்
அப்பப்போ கட்சி சார்பில் இது மாதிரி தேங்க்ஸு, சாரி ஏதாச்சும் சொல்லுங்க பாஸ்.. இல்லைன்னா.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சின்னு ஒண்ணு இருக்கிறதையே எல்லோரும் மறந்துடுறாங்க... அப்புறம் அடுத்த எலக்ஷனுக்கு ரெண்டு டிக்கெட் கூட கிடைக்காது..
"உறுப்பினர்களின் நடத்தை, செயல்பாடுகள், மதி நுட்பத்தை உன்னிப்பாக ஆராய்ந்து தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் நம்பிக்கையாகும்/"
- சபாநாயகர் மீரா குமார்
மேடம்.. சூப்பர் மேடம்.. செம டேலன்ட் உங்களுக்கு.. நகைச்சுவையா ஒரு பதிவு எழுதுறதுக்கு நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்படுறோம் தெரியுமா..
"இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது"
- ஞானதேசிகன்
சொல்ல்ல்லவே இல்ல...?? இதை அப்படியே தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துலயே உட்கார்ந்துக்குங்க சார்.. அடுத்து வர சந்ததிகளாச்சும் தமிழக காங்கிரஸோட பவரை புரிஞ்சிக்கட்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஒவ்வொன்னும் அசத்தல் அதுவும் தனுஷ் ஹி ஹி ஹி
சூப்பர் , அந்த 3 வது மற்றும் கடைசி இரண்டுமே சூப்பர்.
Super comments ...
Stay LoL :-)
Stay LoL :-)
Post a Comment