வலைச்சரத்தில் நான்
இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன். வாரம் ஒரு பதிவர் தங்களுக்கு தெரிந்த பல பதிவுகளை அறிமுகப்படுத்தும் சாராம்சத்தை கொண்டது இந்த தளம். பாருங்க... படியுங்க.. என்சாய் பண்ணுங்க...
கடுப்பேற்றிய புத்தகம்
ஒருவேளை இதுதான் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் அப்படிங்கிறதோ...?
டிவிட்டர்
நானும் டிவிட்டர்ல இருக்கேன்னுதான் பேரு.. என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒண்ணும் புரியலை... ஆனா பிளாக், பேஸ்புக் போல இதுவும் கொஞ்சம் தொப்பையை வளர்த்து விட போகுதுன்னு மட்டும் புரியுது. சமீபத்தில் நான் டிவிட்டிய சில உங்கள் பார்வைக்கு.
✔ வாரா வாரம் நடிகர்களுக்கு ஏதேதோ விருதுகள் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவங்க இம்சையெல்லாம் தாங்கும் ரசிகர்களுக்கு ஏதும் தரமாட்டாங்களாமா?
✔ மதராசப்பட்டிணம் படத்தை ஹிந்தியில் எடுத்தால் எப்படி இருக்குமென்றான் நண்பான். அடப்பாவி... அதை எடுத்ததே அங்கிருந்துதான்டா என்றேன்
✔ 2 நாட்களாய் ரஜினி, ஷங்கர் கொடுத்த பாடல் விளம்பரங்கள் மொக்கை ரகம். அந்த விதத்தில் ரஹ்மான் ரொம்ப நல்லவர். சொல்றது காதுலயே விழலை #எந்திரன்
✔ கலைஞர்தான் எவ்வளவு பெருந்தன்மையானவர்! கலைஞர் 86ம் ஆண்டு நூலகம் என வைக்காமல் அண்ணா நூற்றாண்டு நூலகம் என தன் பெயரைகூட விட்டுக்கொடுத்துள்ளார்.
✔ நம்ம லலித் மோடிக்கிட்ட CWG கேம்ஸை ஒப்படைச்சிருந்தா அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும்
இந்த வார கார்ட்டூன்
காமன்வெல்த்துல நம்ம ஊழல் பெருமக்கள் அடிச்ச தங்கத்தையும் சேர்த்து கவுண்ட் பண்ணா.. பதக்க பட்டியல்ல நாமதான் மொத இடம் பிடிப்போம். அவனவன் கஷ்டப்பட்டு உசுரக்கொடுத்து விளையாடி தங்கம் ஜெயிக்கிறான்.. இந்த மாதிரி ஊழல் ஆளுங்க நோகாமா நோண்பு கும்பிடறாங்க...
ஆனா சும்மா சொல்லக்கூடாது விளையாட்டு வீரர்களை விட ரொம்ப நல்லா விளையாடுறீங்கடா...