கடுப்படிக்கும் கணவன், பேசாத மனைவி, திட்டிக்கொண்டே இருக்கும் தந்தை, டென்சன் ஏத்தும் உயர் அதிகாரி, பாலிட்டிக்ஸ் செய்து படுத்தி எடுக்கும் சக ஊழியர்கள்.. கொஞ்சம் யோசித்து பார்த்தால் பிறருடன் நமக்குண்டான உறவு பழுதுகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகலாம். நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை அல்லது பிடிக்குமாறு நாம் நடந்து கொள்ள முடியவில்லை என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் சரி செய்து எல்லோரும் அன்பு செலுத்தி மதிப்பது போல் பெயர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா?
கவலையை விடுங்கள். உங்கள் பிரச்சினை இன்றோடு தீர்ந்துவிட்டது.
ஒரே புத்தகம். உங்களை, உங்கள் வாழ்க்கையை மாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வைத்து உங்களை யாவரும் விரும்பும் வகையில் மாற்றப்போகிறது.
1937ல் வெறும் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்த 'How to win friends and influence people' என்கிற புத்தகம்தான் அது. அன்று முதல் இன்றுவரையில் சர்வதேச பெஸ்ட் செல்லர் வரிசையில் கம்பீரமாக இடம் பிடித்துள்ள இப்புத்தகம் உலகெங்கிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றி தங்களை மதிப்புமிக்கவராக மற்றவர்கள் கருதுகிறார்கள் என கூறி தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெயர் பெற்றது. அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் இருக்கிறது?
மனிதர்களிடம் பழகும் முறை, அவர்களை புரிந்துகொள்வது, ஒவ்வொருவரையும் அணுகும்முறை, பேசும் விதம், முக்கியமாய் பேசக்கூடாத விதம் என இன்டர்பெர்சனல் ஸ்கிள்ஸ் எனப்படும் மனித உறவுகளை கையாளும் முறைக்கு இன்றைய தேதி வரை உலகில் இதைவிட சிறப்பான புத்தகம் வேறெதுவும் இல்லை. புத்தக ஆசிரியர் டேல் கார்னகி மனவளக்கலை பயிற்சியின் பரமப்பிதா என்று போற்றப்படுபவர். இவரது கருத்துக்கள், பயிற்சி முறைகள் இல்லாமல் இன்று எந்த பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகளும் நடப்பது இல்லை.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விதிமுறையாக தரப்பட்டிருக்கும். படித்து தொகுத்துக்கொண்டு நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும். இன்று எதை செய்தோம் எதை தவற விட்டோம் என்கிற பரிசீலனை சில நாட்களுக்கு அவசியம் செய்து பார்க்க வேண்டும். நாளடைவில் அந்த விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தும் விதமும் நமக்கு எளிதாக கைவந்துவிடும்.
2003ல் ஒரு மனவளக்கலை பயிற்சி வகுப்பில் இந்த புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் பயிற்று வித்து விதிமுறைகளை தினமும் ஒரு கார்டில் அச்சடித்து கொடுத்தார்கள். அதை நடைமுறையில் செயல்படுத்தி அடுத்தடுத்த வகுப்பில் அனைவரது அனுபவங்களும் கூறப்படும். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்தது, இதன் பயன் புரிந்து சீரியஸாக செயல்படுத்த ஆரம்பித்தேன். இன்று இப்புத்தகத்தின் பல கருத்துக்கள் மனதில் ஊறி எண்ணங்களாகி சில எனது கேரக்டராகவே மாறிவிட்டது.
அட இந்த விஷயம் இவ்வளவு நாளா தெரியாம போச்சே என வியக்கும் அளவில் இந்த புத்தகத்தின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி பார்க்கையில் நமக்கு ஆச்சரியமிக்க மாற்றங்கள் உறவுகளிடத்தில் மட்டுமல்லாது பழகும் அனைவரிடத்திலும் நிகழ்வதை காண முடியும்.
உங்கள் வேலையில் பணியாளர்கள், அதிகாரிகளிடையே நல்ல பெயர் எடுக்கப்போகிறீர்கள். நண்பர்கள் உறவினர்களிடத்தில் உண்மையான அன்பையும் அன்னியோன்யத்தையும் அதிகரிக்க போகிறீர்கள். சமூகத்தில் உங்களது மதிப்பு உயரப்போகிறது. உங்களை அனைவரும் விரும்ப போகிறார்கள். உங்களை 'நண்பேன்டா' என யாவரும் அன்போடு அழைக்கப்போகிறார்கள். அதற்கு முதல் படியாக நீங்கள் இந்த புத்தகத்தை வாங்க போகிறீர்கள்.
இந்த புத்தகம் பிளாட்பாரம் தொடங்கி பிரம்மாண்டாமான அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லையென்றால் அது புத்தக கடையே அல்ல.
Thursday, June 30, 2011
Tuesday, June 28, 2011
மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் | வலைமனை
சுதந்தர இந்தியா சந்தித்த முதல் பெரிய அதிர்ச்சி, காந்தி கொலை!
வானொலியில் காந்தியின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டபோது பல இந்தியர்களால் அதை நம்ப முடியவில்லை. ஏற்கமுடியவில்லை. 'வெள்ளைக்காரன் கூட காந்தியைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. சுதந்தரம் வாங்கியபிறகு நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் அவரைச் சுட்டுக் கொன்னிருக்கானே' என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள்.
அதை துல்லியமாக எடுத்துக்கூறி, நடந்த சம்பங்கள், சுட்டவன், உடன் இருந்தவன், பிண்ணனியில் உதவியர்கள், அவர்கள் காந்திக்கு எதிராக இந்நிலைப்பாடு எடுத்ததற்கான காரணம், திட்டமிடுதல், செயல்படுத்துதல், வழக்கு விசாரணை, தீர்பபு என காந்தி கொலை சம்பவத்தினை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு பெரும் வட்டம் அடித்து காந்தி கொலை சம்பவம் குறித்த அனைத்தையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
எளிமையான உடை. சிக்கனம். இவைதான் நாதுராமின் அடையாளங்கள். சிகரெட் புகைக்க மாட்டார். மது அருந்தமாட்டார். ஒரே பலவீனம், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும் தயாராக இருப்பார்.
இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!
காந்தியை கொன்னது கோட்ஸே என்பது மட்டும் தெரியும். கொஞ்சம் நெற்றியை சுருக்கினால் ஆப்தே என்றொரு இன்னொரு பெயரும் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த புத்தகத்தை உலுக்கினால் கார்க்கரே, மதன்லால், கோபால் கோட்ஸே, பாட்ஜே, ஷங்கர் என காந்தி கொலையில் தொடர்புடைய ஏராளமான பெயர்கள் கொட்டுகிறது. வெறும் பெயர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் பின்னணிகளும் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் வெகு விலாவாரியாக விலக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.
...அவனுக்குள் சாவர்க்கர் கொளுத்திப் போட்ட நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருந்தது. இதனால் தன்னுடைய ஹிந்துத்வா கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய இளைஞர்களைத் தேடிப் பிடிக்க ஆரம்பித்தான் நாதுராம். அவர்களுடன் பல விஷயங்களைப் படிப்பது, விவாதம் செய்வது, தங்களுடைய கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போற்றும் அளவிற்கு வாழ்ந்த ஒரு மனிதரை, தேசம் போற்றிய மகாத்மாவினை, உலகம் வியந்த தலைவரை ஒருவன் நேருக்கு நேர் நின்று கொன்றான் என்றால் அவனது நிலை என்ன என்பதை அறிய மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த நூல் திகழ்கிறது.
கோட்ஸே, ஆப்தே இருவருடைய உடலும் சிறைச்சாலையிலேயே எரிக்கப்பட்டன. அந்த இடம் நன்றாகத் தோண்டி உழப்பட்டது. அவர்களுடைய சாம்பல், நதியில் ரகசியமாகக் கரைக்கப்பட்டது.
நூலாசிரியருக்கும் புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். அட்டைப்படம், குறிப்பாக அந்த நிறம் புத்தகத்திற்கு ஏற்றவாறு வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது.
மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர் என்.சொக்கன்
விலை ரூ.130
https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html
________________________________
*** நீல நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
Kizaku padhipagam valaimanai blogspot sukumar swaminathan mahatma gandhi assasination case book review N.CHokkan
Monday, June 27, 2011
வலைமனை | ஃபீலிங்ஸ் 27 06 11
விகடனில் பெயர் வராதா என்பது கல்லூரி நாட்களின் கனவு. கடந்த வார விகடனில் எனது பெயருடன் பேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. விகடனுக்கும், இணைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
வெற்றி எப்.எம்மில் பதிவர் நண்பர் லோஷன் தினமும் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார். காலை பொழுதுகளில் அவர் நடத்தும் விடியல் சிறப்பாக இருக்கிறது. சீரான குரல், சுவையான ஏற்ற இறக்கங்களுடன் அவரது தொகுப்பில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 'நாள் ஒரு தளம்' பகுதியில் வலைமனை குறித்த அறிமுகம் தந்த அவருக்கும் வெற்றி எப்.எம் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெற்றி எப்.எம் கேட்க : http://www.vettri.lk/
கிழக்கு பதிப்பகம் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு போய் இருந்தேன். தவறவே விடக்ககூடாத விற்பனை. சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நான் வெறும் 500 ரூபாய்க்கே வாங்கினேன். இந்த வருடத்திற்கான புத்தகங்கள் ஸ்டாக் வைத்து விட்டேன் வீட்டில்.
இடம் : எல்.ஆர்.சுவாமி ஹால், சிவா விஷ்ணு ஆலயம் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில் , டி.நகர் | காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.
ஆன்லைன் சிறப்பு விற்பனையும் உண்டு.
விவரங்களுக்கு : http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_11.html
முழுமையான திருப்தி தராமல் அவன் இவன் எவனோ மாதிரி இருந்தது. இதற்கு இன்னொருமுறை மாவீரனே பார்த்திருக்கலாம் போல. தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் அரிதாகவே ஜெயிக்கும். மாவீரன் சிறப்பான முயற்சி.
சமீபத்தில் பல புத்தகங்கள் படித்தும் அது குறித்து பகிர முடியவில்லை. காரணம் கடந்த பல வாரங்களாக வீட்டில் லோ வால்டேஜ். இதுவே கூட பல புத்தகங்கள் படிக்கும் நிலையை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம். ஏரியாவில் யாராவது ரெண்டு பேர் ஏசி ஆன் செய்துவிட்டால் இங்கே கணிணி இயக்க முடியாது. சீக்கிரமாய் உஷ்ணம் நீங்கி, நான் பதிவெழுத சூரிய பகவான் கருணை காட்ட வேண்டும்.
எனது சமீபத்திய சில டிவிட்ஸ்/பஸ் :
வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க அமெரிக்கா காட்டும் ஆர்வம், வளர்ந்து வரும் தங்களது பிரம்மாண்ட படைகளுக்கு உலக மக்கள் தொகை தூசு என்பதாலா?
லேப்டாப் கொடுப்பதற்கு முதற்கட்டமாக பாடபுத்தகங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறோம்.
எதிரி ஜெயித்துவிட்டால் துன்புறட்டும் என எண்ணுபவன் நிலத்தில் கண்ணி வெடி புதைத்து வைப்பான் - கலைஞரோ சிம்பிளாய் பாட புத்தகத்தில் கவிதை எழுதி வைத்துவிட்டார் # ராஜதந்திரம்
Tuesday, June 21, 2011
அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது
அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது,
டி.வி. நடத்துற அண்ணா உங்களுக்கு வணக்கம். ரொம்ப நாளா நம்ம டி.வி. பார்த்துட்டு வரும் வாசகி அண்ணா நான். கொஞ்ச நாளா பாருங்க தெனம் நைட்டு ஒரு நிகழ்ச்சி வருது. போன் போட்டு பரிசை வெல்லுங்கன்னு ரெண்டு அக்கா ஒரு புரோக்கிராம் பண்றாங்க. ரூ.3000 ரூ.5000ம்னு பரிசுத்தொகை பார்க்க ஆசையா இருக்கு.. கேள்விகளும் சிம்பிள் சிம்பிளா இருக்கிறதால எங்களைப் போல ஏமாந்தகோளிங்க நிறைய பேரு கையில இருக்க செல்போனை எடுத்து பட்டுன்னு அடிச்சிடுவோம்.
ஆனா பாருங்க ஒரு நிமிஷத்துக்கு ரூ.10 பிடிக்கிறீங்க. பரிசுத்தொகையை பெரிசா போட்டுட்டு இதை குட்டியா போடுறது சரியில்லைங்கண்ணா. நான் ஏதோ எழுத படிக்க தெரிஞ்ச பொண்ணு அதனால இதை தெரிஞ்சுக்கிட்டேன். விஷயம் புரியாத எவ்வளவ்வோ பேர் என்ன பண்ணுவாங்க அண்ணா?
போன் பண்ணி நாங்க பதிலை சொல்லனும். ஆனா நீங்க பொது அறிவு விஷயமா சொல்றீங்க. இதை நிமிஷத்துக்கு பத்து ரூபாய் கொடுத்து காத்திருந்து கேட்கனுமா?
நான் லைன்ல காத்திருந்தா இன்னொருத்தர் லைவ்ல பேசனும். அதானே அர்த்தம்? ஆனா அஞ்சு நிமிஷத்துக்குத்தான் ஒரு கால் லைவ்ல வருது. மத்த நேரத்துக்கு ரெண்டு அக்காவும் மொக்கை போடுறாங்க. இந்த நிகழ்ச்சியை பார்த்தா லைவ் மாதிரியே தெரியலை. ஆனா லைவ்னு போடுறீங்க. என்னைப்போல எத்தனை அப்பாவி ஜென்மங்கள் காத்திருப்பாங்க லைன்ல? அதனால உங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்னு யோசிச்சு பார்த்தாலே தலையை சுத்துத்து.
நீங்க விளம்பரம் போட்டு நல்ல நிகழ்ச்சியை போட்டு சம்பாதீங்க வேணாம்னு சொல்லலை. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு ரீ-சார்ஜ் பண்ற அப்பாவி மக்கள் பணத்தை இப்படி எடுத்து சம்பாதிக்காதீங்க ப்ளீஸ்.
இதே போல இன்னொரு டிவி ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க. லைவ்னு போடமலே லைவ்னு சொல்லிக்கிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேணாம் வலிக்குதுன்னு அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். ஆனா அதுக்கப்புறம் லைவ்னு போட ஆரம்பிச்சிட்டாங்களே தவிர வேற ஒரு மாற்றமும் இல்லை. சரி அவங்களை விடுங்கண்ணா. ஏற்கனவே நமக்கு நேரம் சரியில்லை. இதுல இந்த மாதிரி சுரண்டல் நிகழ்ச்சி நமக்கு இப்போ ரொம்ப அவசியமா யோசிச்சு நடந்துக்கோங்க.
உங்களால் பத்து ரூபாய் இழந்த,
அப்பாவி ஆனந்தி.
டி.வி. நடத்துற அண்ணா உங்களுக்கு வணக்கம். ரொம்ப நாளா நம்ம டி.வி. பார்த்துட்டு வரும் வாசகி அண்ணா நான். கொஞ்ச நாளா பாருங்க தெனம் நைட்டு ஒரு நிகழ்ச்சி வருது. போன் போட்டு பரிசை வெல்லுங்கன்னு ரெண்டு அக்கா ஒரு புரோக்கிராம் பண்றாங்க. ரூ.3000 ரூ.5000ம்னு பரிசுத்தொகை பார்க்க ஆசையா இருக்கு.. கேள்விகளும் சிம்பிள் சிம்பிளா இருக்கிறதால எங்களைப் போல ஏமாந்தகோளிங்க நிறைய பேரு கையில இருக்க செல்போனை எடுத்து பட்டுன்னு அடிச்சிடுவோம்.
ஆனா பாருங்க ஒரு நிமிஷத்துக்கு ரூ.10 பிடிக்கிறீங்க. பரிசுத்தொகையை பெரிசா போட்டுட்டு இதை குட்டியா போடுறது சரியில்லைங்கண்ணா. நான் ஏதோ எழுத படிக்க தெரிஞ்ச பொண்ணு அதனால இதை தெரிஞ்சுக்கிட்டேன். விஷயம் புரியாத எவ்வளவ்வோ பேர் என்ன பண்ணுவாங்க அண்ணா?
போன் பண்ணி நாங்க பதிலை சொல்லனும். ஆனா நீங்க பொது அறிவு விஷயமா சொல்றீங்க. இதை நிமிஷத்துக்கு பத்து ரூபாய் கொடுத்து காத்திருந்து கேட்கனுமா?
நான் லைன்ல காத்திருந்தா இன்னொருத்தர் லைவ்ல பேசனும். அதானே அர்த்தம்? ஆனா அஞ்சு நிமிஷத்துக்குத்தான் ஒரு கால் லைவ்ல வருது. மத்த நேரத்துக்கு ரெண்டு அக்காவும் மொக்கை போடுறாங்க. இந்த நிகழ்ச்சியை பார்த்தா லைவ் மாதிரியே தெரியலை. ஆனா லைவ்னு போடுறீங்க. என்னைப்போல எத்தனை அப்பாவி ஜென்மங்கள் காத்திருப்பாங்க லைன்ல? அதனால உங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்னு யோசிச்சு பார்த்தாலே தலையை சுத்துத்து.
நீங்க விளம்பரம் போட்டு நல்ல நிகழ்ச்சியை போட்டு சம்பாதீங்க வேணாம்னு சொல்லலை. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு ரீ-சார்ஜ் பண்ற அப்பாவி மக்கள் பணத்தை இப்படி எடுத்து சம்பாதிக்காதீங்க ப்ளீஸ்.
இதே போல இன்னொரு டிவி ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க. லைவ்னு போடமலே லைவ்னு சொல்லிக்கிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேணாம் வலிக்குதுன்னு அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். ஆனா அதுக்கப்புறம் லைவ்னு போட ஆரம்பிச்சிட்டாங்களே தவிர வேற ஒரு மாற்றமும் இல்லை. சரி அவங்களை விடுங்கண்ணா. ஏற்கனவே நமக்கு நேரம் சரியில்லை. இதுல இந்த மாதிரி சுரண்டல் நிகழ்ச்சி நமக்கு இப்போ ரொம்ப அவசியமா யோசிச்சு நடந்துக்கோங்க.
உங்களால் பத்து ரூபாய் இழந்த,
அப்பாவி ஆனந்தி.
Labels:
அனுபவம்
Monday, June 13, 2011
டெல்லியில் 'அம்மா' - மன்மோகன் சிங்கின் 'ஆமா'
"சென்னைக்கும் மஞ்சள் கலர் டி-ஷர்ட்டுக்கும் இப்போ நேரம் நல்லாயிருக்கு பா..." "ஆமா ஆமா மஞ்சள் துண்டுக்குத்தான் நேரம் சரியில்லை போல..." |
"நீங்க நல்லா ஆடினீங்கன்னு சொன்னதுக்காக கப்பை தூக்கி வச்சிக்கிறது கொஞ்சம் கூட சரியில்லைங்க.." |
"நடிப்புல விளையாடலாம்... ஆனா விளையாட்டுலு நடிக்க முடியாதுன்னு எங்க அம்மா அப்பவே சொல்லிச்சி..." |
"ஏன் பாபாஜி உண்ணாவிரதத்தை கைவிட்டீங்க...." "இல்லைன்னா எமன் கால் உட்ருப்பான மகனே...அதான் உன் ஆசையா...?" |
"அம்மா டெல்லி வராங்க.. எது சொன்னாலும் ஆமா போட்டுக்குங்க... புரிஞ்சுதா..?" "ஏற்கனவே போடுற ஒரு ஆமா கூட இன்னொன்னு எக்ஸ்ட்ரா போட்டுக்கனும் அவ்ளோதான மேடம்....ரைட்டு விடுங்க" |
"ஹைய்யா.. எனக்குதான் ஜன்னல் சீட்டு..." "ஃபாரின் டூர் கிளம்புங்க வேணாம்னு சொல்லலை... ஆனா இந்த வாரம் பெட்ரோல் விலை ஏத்துறதை மறந்துட்டீங்க பாருங்க...." |
"அடுத்த முறை பாபாஜி யார் தடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டார்..." "ரொம்ப நாளா பயபுள்ளைக்கு நம்ம தீவு மேல ஒரு கண்ணு... எப்படி கோத்து விடுது பார்த்தியா.. வெஸம் வெஸம் வெஸம்..." |
"எதுனா கொடச்சல் கொடுத்தீங்க... எங்க மந்திரிகள் ராஜினாமா பண்ணிடுவாங்க..." "போதும்யா ரீல் அந்து போச்சி... விட்ருங்க.. வலிக்குது..." |
Labels:
அரசியல்,
நகைச்சுவை,
போட்டோ கமெண்ட்ஸ்
Tuesday, June 7, 2011
திருப்பதிக்கே லட்டு - மெட்ரோ ரயிலுக்கே சங்கு
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...
"பாபான்னு படம் வந்தப்ப படப்பெட்டியதான் தூக்குனாங்க.. பட் உண்ணாவிரதம் இருந்தா இந்த பாபாவையே தூக்கிட்டானுங்க... " |
"திருப்பதிக்கே லட்டுங்கிற மாதிரி.. ரயிலுக்கே சங்கு ஊதிட்டீங்களேம்மா...." |
"காஸ்ட்லி சரக்கு பேரை வச்சிக்கிட்டு நீங்களே இவ்ளோ ஆட்டம் போட்டா... கவர்மென்டே சரக்கு விக்கிற ஊரு பேரை வச்சிக்கிட்டு நாங்க எவ்ளோ ஆட்டம் போடுவோம்... போங்கடா டேய்..." |
"நான் சின்னப்பையன்னுதான இந்த அடி அடிக்கிறீங்க.. தில்லு இருந்தா எங்க அண்ணன் மேல கைய வச்சு பாருங்கடா...." |
"அலோ.. பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. ஒசமா மர்டர் போட்டோஸ் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க...?" "இன்னும் டிசைன் பண்ணி முடியலங்க... முடிஞ்ச உடனே சொல்லி விடுறோம்..." |
"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்." |
Labels:
நகைச்சுவை,
போட்டோ கமெண்ட்ஸ்
Subscribe to:
Posts (Atom)