Monday, February 27, 2012

மம்மியின் மின்வெட்டுப் படையும் எனது மட்டன் வடையும்




அமெரிக்காவின், கென்டக்கி மாகாணத்தின் சார்பில் ஸ்டாலினுக்கு கென்டக்கி கர்னல் விருது வழங்கியிருக்கிறர்களாம். இது திட்டமிட்டு அம்மாவை வெறுப்பேற்றும் செயலாக இருக்கிறது. விரைவில் தனது மின்வெட்டு படையை அனுப்பி அமெரிக்காவிலும் இரண்டு மணி நேரம் கரன்ட்டை கட் செய்ய அம்மா ஆவண செய்வார் என நினைக்கிறேன்.

•••

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனையும், சாம் ஆன்டர்சனையும் கொண்டாடாத இணையவாசிகளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நம்மால் ஆராதிக்கப்படும் இரண்டு மாபெரும் ஆளுமைகள், விஜய் டி.வி போன்ற சின்ன டிவியில், அதுவும் 'அது இது எது' போன்ற சின்னஞ்சிறிய நிகழ்ச்சியில் தோன்றியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நீங்களாவது சாப்பிட்டு விட்டு பார்க்காமல் வெறும் வயிற்றில் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=x_V9ajs0qN8

•••

என்னை அடிக்கடி பிளாக் எழுத விடாமல் அமெரிக்க சதி நடக்கிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் இந்த விளையாட்டு எனது நேரத்தை வெகுவாக எடுத்துக்கொள்வதால், எனது இன்னபிற பணிகள் பாதிக்கின்றன.கபில் சிபிலிடம் சொல்லி இதை தடை செய்ய சொல்ல வேண்டும்.

http://apps.facebook.com/pool-live/?ref=bookmarks&count=0&fb_source=bookmarks_apps&fb_bmpos=1_0

•••

சும்மா இருக்கும் நேரங்களில் கிச்சனில் புகுந்து ஏதாவது புதியதாய் சமைத்துப் பார்ப்பதே தனி த்ரில்தான். அம்மா செய்யும் மட்டன் வடை அவ்வளவு ருசியாக இருக்கும். கடந்த ஞாயிறு அம்மாவிடம் அதன் ரெசிப்பி அறிந்து இன்னைக்கு நான் மட்டன் வடை செய்றேன் என புகுந்தேன்.  மதியம் லஞ்சுக்கு டெட்லைன் மிஸ் ஆகி மாலை ஸ்னாக்ஸிற்குதான் முடிந்தது. சும்மா சொல்லக்கூடாது பெண்டு நிமிர்ந்து விட்டது. சைஸ்தான் கொஞ்சம் முன்னே பின்னே இருந்ததே தவிர ருசி உலகத்தரத்தில் இருந்திருக்க வேண்டும். சிதறிய துண்டுகளை எறும்புகள் அலைகடலென திரண்டு வந்து ரசித்து சுவைத்து சென்றதே அதற்கு சாட்சி.



( தே.பொ : கொத்து கறி 1 கிலோ, 150 கிராம் உடைச்ச கடலை, தேங்காய் ஒரு மூடி, காய்ந்த மிளகாய் 25, சோம்பு தூள் 12 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் 250 கிராம், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை 2 கொத்து

செய்முறை : கொத்து கறியை நல்லா கழுவி பிழிஞ்சிட்டு, தேங்காய்,உ.கடலை, மிளகாய், மஞ்சள் தூள் உப்பு, எல்லாம் போட்டு அரைச்சிட்டு, அது கூட சி.வெங், சோம்பு, கறிவேப்பலை கலந்து சுட வேண்டியதுதான்.)


 கடந்த வார மட்டன் வடையின் மெகா வெற்றியை தொடர்ந்து நேற்று ஏதாவது புதியதாய் செய்யலாம் என நினைத்தால், இந்த வாரம் கிச்சனுக்குள்ளேயே விட மறுத்துவிட்டார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் பயப்படும் அரசியல்வாதிகள் போல, ஆண்கள் கிச்சனுக்குள் நுழைந்தால் எங்கே நாம்  டெப்பாசிட் இழந்துவிடப்போகிறோம் என பெண்களும் பயப்படுகிறார்கள் என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

பி.கு.:- எனக்கு சமையல் கலை பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லையென்பதால் பெண் பதிவர்கள் நிம்மதியாக இருக்கலாம்.

•••

நம்ம சினேகா அக்கா ஆசிர்வாத் விளம்பரத்துல ஃபுல்கா எப்படி போடுறதுன்னு சொல்லிக்கொடுத்ததும் போதும்,  என்னால நிம்மதியா சப்பாத்தி போட முடியலை. அதே மாதிரியே உப்ப வைக்கனும்ங்கிற வெறியில சில பல சப்பாத்திகள் தீக்கிரையாயிடுச்சு. எப்படியும் கூடிய சீக்கிரம் ஜெயிச்சிடுவேன். அடுத்த பதிவில் அந்த போட்டோவை எதிர்பார்க்கலாம்.

•••

பதிவை எப்படியாச்சும் தேத்தி நிரப்புவதற்கு உதவியாக இருக்கிறது நாம் அவ்வப்போது போடும் டிவிட்டர், பேஸ்புக் நிலைத்தகவல்கள். வாழ்க சோஷியல் நெட்வொர்க்ஸ்..!!

எனது சமீபத்திய ட்வீட்ஸ் :-

கொள்ளையடிக்கிறதா இருந்தா ஏதாவது பெரிய பதவியில இருந்துக்கிட்டு செய்யனும். இல்லைன்னா இப்படித்தான் அடிச்ச பணத்தை அனுபவிக்க முடியாது # என்கவுன்ட்டர்

சம்பளத்தை நூறு நூறு ரூபாயா தெனம் ஏ.டி.எம் போய் எடுப்பதால என் முகம் எல்லா கேமராவுலயும் பதிஞ்சிருக்கும். நோட்டம் விட டெய்லி வரான்னு போட்டுறாதீங்கப்பா

வங்கி கொள்ளை - துப்பு கொடுத்தால் 1 லட்சம் பரிசு # பார்த்துங்க போலீஸ்கார்... துப்பும் அவங்களே கொடுத்து இந்த பணத்தையும் ஆட்டய போட்டுற போறாங்க...!

சென்னை நிருபர்கள் மோசம், சின்னச்சின்னப் பசங்களா இருக்காங்க-ராமதாஸ் #  ஏனுங்க,தைலாபுரம் தோட்டத்துல புகுந்து மாம்பழம் ஏதும் பறிச்சிட்டாங்களா?

சம்பளம் வாங்கியவுடன் உணர்ச்சிவசப்பட்டு போட்ட 500 ரூபாயை உண்டியலை உடைக்காமல் வெளியே எடுக்க முயல்வது பெரும் சவாலாக இருக்கிறது # மாசக்கடைசி

ஜட்ஜஸ்னு சொல்லிக்கிட்டு அப்படி ஆடியிருக்கலாம் இப்படி பாடியிருக்கலாம்னு டார்ச்சர் பண்றவங்க மேல எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாதா?

•••

கடந்த வாரம் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்ட வீடியோ இது. மணப்பெண் கல்யாண கூடத்திற்குள் செம க்யூட்டாக நுழையும் காட்சி.  பாடல்களுக்கேற்றவாறு நளினமான டான்ஸ் மூவ்மென்டில் மணப்பெண் அசத்துகிறார். அருமையான ஐடியா..!!





4 comments:

புதுகை.அப்துல்லா said...

எதோ குறையுதே :(

Sukumar Swaminathan said...

ஆமாவா அண்ணே.. என்ன ஏதுன்னு சொன்னீங்கன்னா ரிப்பேர் பண்ணலாம்ல..

Kannan said...

சமையல் நன்று........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு. அது என்ன 12 டீஸ்பூன் சோம்பு தூள் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...